Monday, November 4, 2024
முகப்புஉலகம்இதர நாடுகள்தெற்கு சூடான் அவலம் - ஆவணப்படம் !

தெற்கு சூடான் அவலம் – ஆவணப்படம் !

-

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் 2011 -ம் ஆண்டு சூடானிடமிருந்து விடுதலை பெற்றது. 2013-ம் ஆண்டு இரண்டு இனக்குழு தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனக்கலவரமாக மாறி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 3,00,000 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து அகதிகளாகத் தஞ்சமடையும் அவலமும் நடந்து கொண்டேயிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றன.தங்க இடமின்றி, உணவின்றி, காயத்துக்கு மருந்தின்றி, அடிப்படை சுகாதார வசதியின்றி சாவின் விளிம்பில் கேட்பாரற்று கிடைக்கும் தெற்கு சூடான் நாட்டு மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவர் குழு மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது.

வருடம் முழுவதும் போர் நடப்பதால், ஆப்ரிக்க பூமியின் வளமான மண்ணில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, வறண்டு தரிசு நிலங்களாக மாறி இன்று பஞ்சத்தில் போய் நிற்கிறது.

தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. தெற்கு சூடான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

நன்றி : RT Documentary
_____________

ஆப்ரிக்க நாடுகளில் அவலநிலையை எடுத்துக் கூறும் இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க