Saturday, January 18, 2020
முகப்பு பார்வை இணையக் கணிப்பு சுவிஸ் வங்கி கருப்புப் பணம் கிடைக்குமா ? கருத்துக் கணிப்பு

சுவிஸ் வங்கி கருப்புப் பணம் கிடைக்குமா ? கருத்துக் கணிப்பு

-

ந்திய அரசியலில் மக்களால் அதிகம் கேலி செய்யப்பட்ட வாக்குறுதி, திருவாளர் மோடியின்“உங்கள் வங்கிக் கணக்கில் கருப்புப் பணத்தை போடுவேன்” என்பதுதான். அதன் பிறகு இந்தா, அந்தா என பந்தாவாக மாதம் ஒரு அறிவிப்பு வரும். அதாவது கருப்புப்பணத்தை மீட்க ராணுவம் தயாராகி விட்டது, ஒப்பந்தம் ரெடி, மோடி சிண்டைப் பிடித்து விட்டார் என்று எதாவது  ஒன்றை அடித்து விடுவார்கள்.

பனாமா லீக்ஸ் ஊழல் வந்த போது அதானி முதல் அமிதாப் வரை பலர் சிக்கினாலும் அனைவரும் இன்று வரை பாதுகாப்பாகவே உள்ளனர். ஜனநாயகம் முதிராத நாடு என்று இந்திய ஊடகங்களால் இகழப்படும் பாக்கிலேயே நவாஸ் ஷெரிஃப் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இங்கோ மோடியின் பணமதிப்பழிப்பு காலத்திலேயே பண மழை பொழிந்து திருமணம் நடத்திய கர்நாடக ரெட்டி சகோதரர்கள் மீது ஒரு துரும்பு கூட படவில்லை.

இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. ஜூன் மாதம் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி இனிமேல் சட்டவிரோதமாக கருப்பு பணத்தை போடும் இந்தியர்கள் குறித்த தகவலை சுவிஸ் அரசு இந்திய அரசுக்கு தெரிவிக்குமாம்.

இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் சுவிஸ் அரசு இனிமேல் “தானியங்கி தகவல் பரிமாற்ற வசதியை” அறிவித்திருக்கிறதாம். இதன்படி இந்தியாவில் இருந்து ஒருவர் அங்கே பணம் முதலீடு செய்தால் நம் நாட்டிற்கு தானாகவே அந்த தகவல் வந்துவிடுமாம். இந்த புதிய வசதி 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2019 ம் ஆண்டில் முதல் தகவல் கிடைக்குமாம்.

ஏற்கனவே கருப்புபணம் என்பது சட்டபூர்வமாக பார்ட்சிபேட்ரி நோட்டாக உள்ளே வருகிறது. பனாமா போன்ற நாடுகளில் சட்டப் பூர்வ முதலீடாக உலகெங்கும் பறக்கிறது. இப்படி கொள்ளையே நவீனமாக மாறி வரும் நிலையில் இனி 2019 முதல் சுவிஸ் அரசின் தகவல் அளிப்பால் யாருக்கு பயன்?

இந்த அறிவிப்பு வந்த பிறகு எவன் அங்கே கருப்பாக போடுவான்? இருப்பினும் புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கோடு இருப்பதால் கருப்பு எங்கே போகிறது என்று ரூட் போட்டு மோடி பிடிப்பார் என்று சில அறிஞர் பெருமக்கள் நம்பத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமையை மதித்து சுவிஸ் அரசு அறிவிப்பு குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்!

சுவிஸ் அரசின் அறிவிப்பால் என்ன நடக்கும் ?

  • கருப்புப் பணத்தை மோடி மீட்பார்.
  • இந்திய மக்களுக்கு கருப்புப் பணம் கிடைக்காது.
  • கருப்பு பண மீட்பில் ஏதோ கொஞ்சம் முன்னேற்றம்.

________________

இந்தக் கருத்துக் கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. இதிலிருந்து ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது அது என்னவெனில் சுவிஸ் வங்கியும் 2019ல் வரும் பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொ‌ண்டுதா‌ன் மோடியின் சார்பாக தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே ஆரம்பித்து விட்டதோ என்று நினைக்க தோண்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க