இது “டிஸ்னி லேன்ட்” அல்ல, கம்யூனிச சொர்க்கபுரி! ரஷ்யாவில் இன்றைக்கும் சிறப்பாக இயங்கும் கம்யூனிச நகரம் (கூட்டுப்பண்ணை நகரம்). இது அங்கு வாழும் மக்களின் தெரிவு. யாரும் அவர்களை கட்டாயப் படுத்தவில்லை. (இன்றைய ரஷ்யாவில் கம்யூனிசத்தை வெறுக்கும் முதலாளித்துவ அரசு ஆட்சியில் இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.)
ஸ்டாலின் காலத்தில், சோவியத் யூனியனில் கூட்டுழைப்பு பண்ணை (Collective farm) முறை கொண்டு வரப்பட்டது. நாட்டுப்புறங்களில், அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. அரச பண்ணைகள் தனியாகவும், மக்களின் கூட்டுறவுப் பண்ணைகள் தனியாகவும் இருந்தன.தொண்ணூறுகளில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், பொதுவுடைமைப் பண்ணைகள் தனியார்மயமாக்கப்பட்டன. நிலம் சிறு துண்டுகளாக பகிர்ந்தளிக்கப்பட்டது. விவசாயம் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், பல பண்ணைகள் கைவிடப்பட்டன. செல்வந்தர்களால் வாங்கப்பட்டவை போக, எஞ்சியவை தரிசு நிலமாகின.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சில இடங்களில் வாழ்ந்த மக்கள், விவசாயத்தை தனியார்மயமாக்குவதால் தமக்கு நட்டமே உண்டாகும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர்.
அவர்கள் பழைய படி பொதுவுடைமைப் பண்ணை அமைப்பிற்கு திரும்பினார்கள். அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து கொண்டார்கள். “விளாடிமிர் லெனின் சோவியத் பண்ணை” (Soviet Farm of Vladimir Lenin) அதில் ஒன்று.
2017 -ம் ஆண்டிலும், அந்தப் பண்ணையில் உள்ள தோட்டங்களில் நல்ல அறுவடை கிடைக்கிறது. இந்த வருடம் தொன் (டன்) கணக்கில் ஸ்ட்ரோபெரி பழங்களை உற்பத்தி செய்துள்ளனர். அது பிற இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
கம்யூனிச பண்ணை (கூட்டுப் பண்ணை) என்றவுடன், நீங்கள் ஒரு கிராமத்தை கற்பனை செய்து விடக் கூடாது. அது சகல வசதிகளும் கொண்ட நவீன நகரம். அனைத்து உயர்தர தொழில்நுட்பங்களும் கிடைக்கும். வயல்கள், தோட்டங்கள், பண்ணைகளில் உற்பத்தியாவதை முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளும் அங்குள்ளன.
ஒரு கம்யூனிச சமுதாயத்தில் (கூட்டுப்பண்ணை – சோசலிச விழுமியங்களோடு இருக்கும் சமூகத்தில்) எல்லோரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதால், கிடைக்கும் இலாபத்தையும் தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வசதியான வீடுகளுக்கு வாடகை கிடையாது. குழந்தைகளை பராமரிக்கும் இடம், தேவதைக் கதைகளில் வருவதைப் போன்றதொரு அழகான கட்டிடமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
நன்றி : கலையரசன்
மேலும் படிக்க:
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி