Sunday, July 5, 2020
முகப்பு செய்தி அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !

அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !

-

குத்தகை விவசாயி தொடர்பாக அரசின் மாறிவரும் கண்ணோட்டம் !

விவசாயம் என்பது நிலத்தில் உழைக்கும் விவசாயியின் குடும்பத் தொழிலாக இருக்க முடியுமேயன்றி, அவ்வாறு நிலத்தில் வேலை செய்யாத ஒருவரின் துணைத்தொழிலாக இருக்க முடியாது என்று கூறியது தேசிய வேளாண்மைக் கமிஷன் 1976 -ல் வெளியிட்ட அறிக்கை. நக்சல்பாரி எழுச்சி ஏழை விவசாயிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் இந்த அறிக்கையின் ”முற்போக்கு” பார்வையை புரிந்து கொள்ள வேண்டும்.

நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்

2006 -ஆம் ஆண்டில் திட்டக்குழு வெளியிட்ட நிலவுடைமை உறவுகள் தொடர்பான அறிக்கையில் இந்தக் குரல் மாறி விட்டது. ”நிலத்தில் பாடுபடும் குத்தகை விவசாயிகளுக்கு (உழுபவனுக்கு) நிலத்தைச் சொந்தமாக்குவது என்பது ஒரு லட்சியமாக இருக்கிறதேயன்றி, அது சமீப எதிர்காலத்தில் நிறைவேறும் என்று தோன்றவில்லை” என்று குறிப்பிட்டது அந்த அறிக்கை.

இன்று மோடி அமைத்திருக்கும் நிதி ஆயோக்கின் வல்லுநர் குழு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். ”சுதந்திரத்துக்குப் பின் இயற்றப்பட்ட குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டங்கள் இன்று காலப்பொருத்தமற்றவை ஆகிவிட்டன. நிலத்தை குத்தகைக்கு விடுவது என்பது இன்று நிலப்பிரபுத்துவச் சுரண்டலின் அடையாளமாக இல்லை. அது ஒரு பொருளாதார அவசியமாகிவிட்டது.

அன்று விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள் என்ற நிலையில் அந்த சட்டங்கள் தேவைப்பட்டன. இன்று காலம் மாறிவிட்டது. கிராமப்புற ஏழைமக்கள்  அரசியல் ரீதியில் வலிமையானவர்களாக மாறிவிட்டார்கள். குத்தகை என்பது நிலவுடைமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம். இதில் இரண்டு பேருமே பயனடைகிறார்கள்”

இந்த மூன்று கருத்துகளின் பின்புலத்தில் உண்மை நிலையைப் பார்ப்போம். நில உச்சவரம்புச் சட்டம் என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்ததேயன்றி, உபரி நிலம் என்று அரசாலேயே அடையாளம் காணப்பட்ட பல லட்சம் ஏக்கர் நிலங்கள், நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.

குத்தகை விவசாயிகள் பாதுகாப்புக்கான சட்டம் வந்தவுடன், நாடு முழுவதும் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்த சுமார் 30% நிலவுடைமையாளர்கள் சொந்த சாகுபடி செய்யப்போவதாக கூறி குத்தகை விவசாயிகளை விரட்டி விட்டு, வாய்வழி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேறு நபர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டார்கள்.

இன்று மோடி அரசு குத்தகை விவசாயத்தைச் சட்டபூர்வமானதாக்குகிறது. இந்த சட்டத்தின் படி விவசாயத்தில் நுழையப்போகும் குத்தகை விவசாயி குப்பனோ சுப்பனோ அல்ல, டாடா, பிர்லா, அம்பானி, அதானி போன்றோர்தான் புதிய குத்தகை சட்டத்தின் கீழ் உருவாக இருக்கும் புதிய குத்தகை விவசாயிகள்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் குறுஞ்செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அன்று
  வென்மணியில
  நெல்உற்பத்தியாளர் சங்கம்
  இன்று
  இந்தியாவே
  வெண்மணியாய்

 2. ஒரு செண்ட் நிலம் வாங்காமல் , சேற்றில் இறங்காமல் , வியர்வை சிந்தாமல் , காேமணம் கட்டாமல் , இடு பாெருட்ககளுக்கும் கடனுக்கும் அலையாமல் , விளைவித்த பாெருட்களுக்கு நல்ல விலைக்கு ஏங்காமல் …. அனைத்தையும் பராேபகார அரசாங்கமே செய்து ….” இந்த கேப்மாரி ஏழை விவசாய வேடதாரிகளுக்கு ” உதவ காத்திருக்கும் பாேது …. காெண்டாட்டம் தானே … இவர்களும் வருங்கால விவசாயிகளே ….?

 3. “அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !”

  “அம்பானி, அதானி, மித்தல்தான் இனி குத்தகை விவசாயிகள் !” என்பதுதான் சரியான உச்சரிப்பு.

  சினிமா விரும்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க