Saturday, February 8, 2025
முகப்புஇதரவினாடி வினாதமிழ்நாடு – பொது அறிவு வினாடி வினா !

தமிழ்நாடு – பொது அறிவு வினாடி வினா !

-

முதல் வினாடி வினாவில் பங்கேற்ற, பங்கேற்கும், பங்கேற்க இருக்கும் நண்பர்களுக்கு நன்றி! அதில் 11 பேர் ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருக்கிறார்கள். 21 பேர் நான்கு கேள்விகளுக்கும், 74 பேர் மூன்று கேள்விகளுக்கும், 76 பேர் இரண்டு கேள்விகளுக்கும், மீதிப் பேர் ஒரு கேள்விக்கும் சரியான பதிலை அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் மற்றவர்களும் பங்கேற்பார்கள் என்பதால் இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.

இன்றைக்கு தமிழக நிர்வாக விவரங்கள் குறித்து பார்க்க இருக்கிறோம். நாம் தமிழ் நாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் முழு தமிழக விவரங்கள் – மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், மக்கள் தொகை, படிப்பறிவு இதர விவரங்கள் தெரியாது. தேர்ந்த பத்திரிகையாளர்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கட்சி சார்பாக பேசும் தொழில் முறை பேச்சாளர்களுக்கும், அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரிந்தவைதான்.

மற்றவர்களுக்கு இந்த விவரங்கள் தெரியாமல் போனதன் காரணத்தை விட அதனால் ஏற்படும் விளைவுகள்தான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட அரசியல், பொருளாதார, பண்பாடு குறித்த செய்தியை முழுமையாக உள்வாங்கி சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த விவரங்கள் அவசியம். அத்தகைய நோக்கத்தோடு இன்றைய கேள்விகளுக்கு விடையளியுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் – சிறார்களையும் உள்ளிட்டு – ஈடுபடுத்துங்கள்.

இவற்றை வெறுமனே வினாடி வினா என்பதைத் தாண்டி இந்த விவரங்களை மனதில் கொள்ள முயலுங்கள். தமிழகம் குறித்த செய்திகளைப் படிக்கும் போது இந்த அடிப்படை விவரங்களை நினைவு கூர்வதன் மூலம் நமது சிந்தனை நூலகத்தில் இவை அழுத்தமாக பதியும். நன்றி !

_____________

  1. வினாடிவினா பகுதி தொடர்ந்து வரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.முதல் வகுப்பு மாணவனாய் ஆர்வமாகிவிட்டேன்.சரியான பதில் அளிப்பதை விட தவறான பதிலிட்டு பின் சரியான பதிலை தெரிந்துகொண்டவுடன் மனதில் பதிந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது.சிறந்த வடிவமைப்பு பாராட்டுக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க