Sunday, April 2, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.கGST... GST... போலோ பாரத்...மாதாகி ஜெ...! ம.க.இ.க புதிய பாடல் !

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க புதிய பாடல் !

-

டந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் வர்க்கங்கள் மோடியை மீட்பராக முன்னிறுத்தின. மூன்றாண்டு ஆட்சிக்கு பின்னர் இந்த மீட்பரால் நாட்டு மக்கள் அடைந்து துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

மோடியின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால் அனைத்து தரப்பு மக்களும் மோடி மீதும் பாஜக ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடியின் கோட்டையாக சொல்லப்பட்ட குஜராத்திலேயே லட்சக்கணக்கான வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். இன்று மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடும் எதிர்ப்பு அங்கே நிலவுகிறது.

மெரினா போராட்டத்திற்கு பின்னர் பாஜக -விற்கு ஜென்மப் பகையாளியாக உள்ள தமிழகத்தில் ஜி.எஸ்.டி. எதிர்ப்பு பற்றி சொல்லத் தேவையில்லை.

மெர்சல் படத்தில் ஒருவரியை நீக்கச் சொல்லி வாய்திறந்த பாஜக -வுக்கு எல்லா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தங்களின் காலுக்கு கீழே தாங்களே குழிதோண்டும் வேலையை தமிழக பாஜக மேலும் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது. பணமதிப்பழிப்பின் போது வரிசையில் நின்று இறந்தார்கள் மக்கள். ஜி.எஸ்.டியின் போது வாழ்வை இழந்து விட்டு எங்கு போவது என்று தவிக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த பாடல் உழைக்கும் மக்களின் குரலாய் முழங்குகிறது.

பாடலை பருங்கள்… நண்பர்களுடன் பகிருங்கள்….

பாடல் வரிகள் :

ஜி.எஸ்.டி .. ஜி.எஸ்.டி – போலோ
பாரத் மாதா கி ஜெய்
நாடெங்கும் ஜி.எஸ்.டி
போட்டான் பாரு பி.ஜே.பி
பிச்சைக்காரன் காசைப் பிடுங்கி
பீட்சா திங்கிறார் மோடிஜி

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி
குழம்பு சட்டிக்கும் ஜி.எஸ்.டி
பத்து ரூவா ஆயிடிச்சி
நாயர் கடை சாயா டீ
நாப்கினுக்கும் வரி கேக்குறான்
காறித்துப்புறா பொண்டாட்டி

ஆஸ்திரேலியா டென் பர்சென்ட்
அமெரிக்கா எய்ட் பர்சென்ட்
அம்பத்தாறு இன்ச் மோடிஜி
அடிச்சார் இருபத்தெட்டு பர்சென்ட்
தங்க பிஸ்கெட் மூணு பர்சென்ட்
திங்கிற பிஸ்கெட் எட்டு பர்சென்ட்
பர்கர் பீட்சா ஃபைவ் பர்சென்ட்
இட்லி தோசை பதினெட்டு பர்சென்ட்
ஆட்டையப் போடும் வித்தையிலே
மோடி ரொம்ப இன்டெலிஜென்ட்

கடலை மிட்டாய் தீப்பெட்டியை
கொளுத்தி விட்ட மோடிஜி
கைத்தறிய விசைத்தறிய
கழுத்தறுத்த மோடிஜி
வரி வரியா மக்கள் முதுகில்
சாட்டையடி ஜி.எஸ்.டி – இப்போ
அம்பானிக்கும் அதானிக்கும்
மோடிஜிதான் ஜிகிடிஜி

தண்ணி நாங்களே வாங்கிக்கணும்
வேலை நாங்களே தேடிக்கணும்
கல்வி காசுக்கு வாங்கிக்கணும்
ரோட்டுக்கும் டோலு கட்டிக்கணும்
வைத்தியம் நாங்களே பண்ணிக்கணும்
வரியும் கரெக்டா கட்டிக்கணும்
எல்லா நாங்களே பாத்துக்கணும் – உன்னை
கெவர்மென்டுன்னு வேற ஒத்துக்கணும்

சர்க்கஸ் குரங்கு சைக்கிள் ஓட்டினா
பாக்குறவன் தலையில ஜி.எஸ்.டி
தப்படிச்சி டான்ஸ் ஆடினா
ஸ்டெப்புக்கு ஸ்டெப்பு ஜி.எஸ்.டி
சாவு வீட்டில் சாமியானா
செத்தவன் கட்டணும் ஜி.எஸ்.டி
கத்தி என்னுது மூஞ்சி உன்னுது
மோடிக்கு எதுக்கு ஜி.எஸ்.டி?

ஒரே தேசம் ஒரே வரி
வந்தே மாதரம் – வழிப்பறி
செக்போஸ்ட் இல்ல சிக்னல் இல்ல – பணம்
எல்லாம் டெல்லிக்கு டெலிவரி
மாநில உரிமைக்கு மார்ச்சுவரி
திஸ் இஸ் – ஒருமைப்பாட்டு கொத்துக்கறி!

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. மகஇக.வின் பாடல்கள் போர் பரணி ஆகும். ஆனால் இப்பாடலின் வரிகளில் உயிரோட்டம் இருப்பது போன்று குரலில் இல்லை.

  2. பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இருந்தால் இது மத்திய அரசை வியக்கனம் செய்வது போல் தான் உள்ளது, ஒரு எழுச்சி, உணர்வூவூட்டும் விதமாக பாடல் வரிகள் அமையவில்லை என கருதுகிறேன்.

  3. மகஇக-பாடல் என்பது கடைகோடி உழைக்கும் மக்களின் போர் குரலாய்,,கோபத்தின் வார்த்தைகளாய்,,,வர்க்க எதிரிகளுக்கு நாக்க புடுங்குர மாதிரி இருக்கும்.-ஆனால் இந்த பாடல் அப்படி(எனக்கும்,,என் தாத்தாவுக்கும்)இல்லை..குரல் வளம் டொரா பொம்மை மாதிரி இருக்கு…
    பாடல் வரி ஒரு இடத்தில் மட்டும் நிதானமாக கையாண்டது போல இருக்கு.. எதார்த்தமாக எனில் கீழ் கண்ட (***)-இந்த இடத்தில்
    நாங்களே வாங்கிக்கணும்
    வேலை நாங்களே தேடிக்கணும்
    கல்வி காசுக்கு வாங்கிக்கணும்
    ரோட்டுக்கும் டோலு கட்டிக்கணும்
    வைத்தியம் நாங்களே பண்ணிக்கணும்
    வரியும் கரெக்டா கட்டிக்கணும்
    எல்லா நாங்களே பாத்துக்கணும் – (உன்னை
    ************
    கெவர்மென்டுன்னு வேற ஒத்துக்கணும்
    ************************************************)நீயேல்லாம் என்னா மசுத்துக்கு கெவர்மென்டுன்னு இருக்கணும்…இப்படி தான் இந்த கயிறுமென்ட மக்கள் கூடுதலாகவே மதிப்பீடு உள்ளது…அதை அப்படியே போடணும்..
    கூடுதலாக ஒன்று– பாடகர்(தோழர்) அவர்களின் பாடல்கள் கேட்டாலே வர்க்கத்தின் பாதிப்புகளை,,,கோபத்தை அப்படியே உள் வாங்கி வார்த்தைகளாக பாடல் பாடும் போது கேட்பவர்களுக்கு(எனக்கும்) மண்டை முடி நட்டுக்காக நிக்கும்,,,கைகள் புல்லரிக்கும்..அப்படி மனதின் கோபத்தை வெளிப்பாடாக இருக்கும்…குரல் வளமும்,,பாடல் வரியும்..
    ஆனால் அப்படி இல்லை இந்த பாடல்..நான் கிராமபுறத்தில் வசிக்கும் சிந்தனை உள்ள தோழர் ஏதாவது தவறாக இருப்பின் கவனத்தில் கொள்க!!

  4. Dear sir, all people not like GST but it’s implemented in India people are moving with GST , only small and big business man suffered.. political party’s are criticized the GST and making November 8,has black day..because it’s going to be one year of GST implemented in India….i am already member of NDLF…

  5. ஜீ.எஸ்.டி தாக்குதல் பற்றிய மக்களின் மன நிலை பிரதானமாக, வேதனை, வெறுப்பு, நையாண்டி செய்தல் என்ற நிலையில்தான் இருக்கிறது; போர்க்குணமான எதிர்ப்பு இங்கு இல்லை; மீறவேண்டும் என்ற விழைவோ, சிந்தனையோ இல்லை. இந்த மனநிலைக்கும் வெளிப்பாட்டுக்கும் பொருத்தமானதாக பாடல் வரிகள் அமைந்துள்ளன.
    பாடல் வரிகள் அருமை. காட்சிப்படுத்தல்களும் நன்றாக இருந்தன.
    பாட்டு, இசையமைப்பு கொஞ்சம் மந்தகதியில் இருப்பதுபோல உணர்கிறேன். திருப்பத் திரும்ப கோட்டுப்பார்க்கவேண்டும்.
    அதேசமயம்சற்றே உணர்வெழுச்சி கொள்ளத்தக்க பாடல் தேவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க