வரலாற்றில் தீபாவளி பண்டிகைக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை அசுரர்களுக்கு எதிராக ‘இந்து’ மத ‘பெருந்தெய்வங்கள்’ நடத்திய யுத்தங்களையும் அதன் பொருட்டே மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் விளக்குகின்றன. வட இந்தியாவில் ‘இந்துக்களிடம்’ இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி இராவண வதம் (இராவண பொம்மை எரிப்பு) கொண்டாடப்படுகின்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பழங்குடி மக்கள் இராவணன் தங்களது முன்னோர், தெய்வம் என்பதால் எரிக்க கூடாது என போராடி வருகின்றனர்.
இந்த உண்மை ஒரு விசயத்தை எடுத்துரைக்கின்றது. தீபாவளியின் கதை கூறும் சமூகவியலின் படி இந்தியாவில் இருந்த பூர்வகுடி பழங்குடி மக்களை வென்ற கதைகளே இப்படி பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. அந்த மக்கள் அசுரர்கள், தஸ்யூக்கள், நாகர்கள், திராவிடர்கள், அரக்கர்கள் என பல பெயர்களின் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்று செய்திகளையும் நடப்பு போராட்டங்களையும் விளக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.
இதன்றி நவீன முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சரத்தின் படி மக்களிடம் பொருட்களை கொண்டு திணிப்பதற்குரிய பண்டிகையாகவும் தீபாவளி மாறி வருகின்றது. அதன் பொருட்டே “போனசை” இத்தினத்தில் கொடுக்கிறார்கள். எனினும் தொழிலாளிகளோ இல்லை பொது மக்களோ ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு, பணமதிப்பழிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தீபாவளியை கொண்டாடும் மனநிலையில் இல்லை. குழந்தைகளுக்காக எதோ கொஞ்சம் கொண்டாடுவதைத் தாண்டி பண்டிகைக் காலத்திற்குரிய மகிழ்ச்சியில் மக்கள் இல்லை.
அதே நேரம் முற்போக்கு பண்பாட்டினை கொண்டிருப்போர் கூட தீபாவளியை கொண்டாடும் வழக்கத்திற்கு மாறி வருகின்றனர். அதையும் ஆய்வு செய்கின்றது ஒரு கட்டுரை.
தீபாவளி குறித்த இத்தொகுப்பு ஒரு ஆவணமாக உங்களுக்கு பயன்படுமென்று நம்புகிறோம்.
தோழமையுடன்
வினவு
நரகாசுரன் அந்தக் கால நக்சலைட்!நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
பதினைந்து கட்டுரைகள் – 117 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00 |
![]() ₹20.00Add to cart |
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.