Wednesday, January 19, 2022
முகப்பு அரசியல் ஊடகம் பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !

பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !

-

“தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது” புகழ் அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் தொலைகாட்சியை தொடங்கி 5 மாதம் தான் ஆகியிருக்கும். ஆனால் அதில் வெளியிட்ட போலி செய்திகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை.

“ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர். முதல் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ரிபப்ளிக் டிவி உங்களுக்கு காட்டுகிறது” என்று அக்டோபர் 16 -ம் தேதி மதியம் 2:36 மணிக்கு முக்கியசெய்தி ஹெஷ்டேக்கில் பதிவிட்டது ரிபப்ளிக் தொலைக்காட்சி. ரிபப்ளிக் வாட்டர்மார்க்குடன் வெளியான அந்த புகைப்படத்தில் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இருந்தனர். பேட்ரிகா என்ற செய்தி தளமும் அதை உண்மையென்று நம்பி செய்தியை உடனே வெளியிட்டது,

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர் கருத்துக் கொண்டவரை தொடர்ந்து “மன்னிப்பு கேள்” என்று குதறும் அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைகாட்சி சில மணி நேரங்களிலேயே அந்த ‘போலிச்செய்தியை’ டுவிட்டரில் இருந்து  அழித்துவிட்டது.

தெரியாமல் தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்வார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு சொம்படிக்கும் ரிபப்ளிக் தொலைகாட்சி அடுத்ததாக என்ன செய்யும்? மறுபடியும் ஒரு போலி செய்தி தான்.

இம்முறை சிக்கியது பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிகெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான் கான். அவர் மீது போலியாக ஒரு பாலியல் குற்றசாட்டை முன் வைத்தது ரிபப்ளிக் டி.வி.

“பாகிஸ்தானின் இம்ரான் கான் அருகில் ஹார்வி வெய்ன்ஸ்டைனால் நிக்க கூட முடியாது. நான் அவரை ஜூன் மாதம் லண்டனில் சந்தித்தேன். ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் இம்ரான் கான் என்னை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்தார். அது அதிர்ச்சியில் என்னை ஆழ்த்தியது. இம்ரான் கான் ஒரு பெண்பித்தன். நான் மீண்டும் அவரை சந்திக்காமல் இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். அவரையும் வேன்ஸ்டைனையும் போன்ற மனிதர்களிடமிருந்து பெண்கள் நாம் விலகி இருக்க வேண்டும்.”

ஆஸ்திரேலிய மாடலான லாரா வொர்திங்க்டனின் ட்விட்டர் கணக்கை போல போலியாக உருவாக்கப்பட்டு மேல் உள்ள செய்தி அதில் வெளியிடப்பட்டது. உடனே தேஷ.. பக்தர்கள் “கான்” என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என்று சாமியாட தொடக்கி விட்டார்கள்.

ஆனால் ஒரு எளிய கூகிள் தேடல் ரிபப்ளிக் தொலைக்காட்சியை அம்பலத்தில் ஏற்றிவிட்டது.

அதன்படி, ஆஸ்திரேலிய மாடலின் போலி ட்விட்டர் கணக்கை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை வெறுமனே 5,000 ஆக இருக்கையில் அவரது உண்மையான கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 1,20,000 ஆக இருந்தது. குட்டு வெளிப்பட்டதால் ஆள் மாறாட்ட ட்விட்டர் கணக்கு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் ரிபப்ளிக் தொலைகாட்சியின் ட்விட்டர் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் பேஸ்புக் கணக்கில் இருந்து அது இன்னும் நீக்கப்படவில்லை.

இம்ரான் கான் பற்றிய இந்த போலி செய்தி குயின்ட்டிலும் கூட வெளியானது. ஆனால் பின்னர் குயின்ட் அதை சரி செய்து விட்டது. ஆனால் ரிபப்ளிக் தொலைகாட்சி இம்முறையும் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த இரு போலி செய்திகளையும் சரி பார்ப்பதற்கு ஒரு 30 வினாடிகள் கூட ஆகவில்லை என்கிறது ஆல்ட்நியூஸ் தளம். ஆக ரிபப்ளிக் தொலைகாட்சி ஒரு மூன்றாம் தர ‘மாமா ’சேனல் தான் என்பது உண்மைதானே? சொல்லுங்கள் “தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது”.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. இனப்படுகொலையாளன்,பாசிஸ்ட் மோடியின் இழிபுகழில் நக்கிப்பிழைக்கும் பாண்டேகோஸ்சுவாமிகளிடம் வேறு எதை எதிர்பார்கமுடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க