Monday, January 17, 2022
முகப்பு அரசியல் ஊடகம் நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !

நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !

-

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது தொடர்பான விவாதங்கள் அனைத்தும், பாலா வரைந்தது கருத்துரிமையின் வரைமுறைக்கு உட்பட்டதா அல்லது, அல்லது மீறியதா என்ற அளவில் தான் விவாதிக்கப்படுகின்றன. பாலா கைது விவகாரத்தில் பேசப்பட வேண்டியது, பாலாவின் கார்ட்டூன் அம்பலப்படுத்திய அமைப்பின் தோல்வி குறித்த பிரச்சினையா இல்லை கருத்துரிமை குறித்த பிரச்சினையா? மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்

 1. இறந்த உயிர்கள் மேல் உள்ள அனுதாபத்தை விட கார்ப்பரேட் சாமியார்கள் சொல்லித்தரும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உணர்வு, மக்களை கேலிச்சித்திரத்தை பற்றி பேச வைக்கிறது.

 2. விமர்சிப்பதிலும் நாகரீகம் தேவை

  விமர்சனம் என்பது வேறு இழிபடுத்துதல் என்பது வேறு

  இதை வினவு மறுக்கும் பட்சத்தில் மறுமொழிகள் குறித்து வினவின் கொள்கை: என்கிற பின்னூட்ட பெட்டியின் கீழ் இருக்கும் இந்த வாசகங்களை நீக்கி விடவும்.

  மறுமொழிகள் குறித்து வினவின் கொள்கை:
  கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்

  • இங்கு விமர்சனம்,குறிப்பிட்ட 3 நபர்கள் மேல் மட்டுமே இருந்திருந்தால் ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் நாகரிகமாக இருந்திருக்கும்.பிறர் மேல் நமக்கு ஏற்படும் வெறுப்பு நமக்கு நம் மேல் ஏற்படும் இயலாமை அல்லது கோபத்தின் வெளிப்பாடு.
   என்னை பொறுத்தவரை பாலாவின் கோபம் வெளிப்படுத்தி இருப்பது இந்த சமூகத்தின் பிரதிநிதிகள் மட்டுமன்றி இந்த மொத்த சமூகத்தையும் தான்.உயிரினும் மானம் பெரிது என்ற நிலை மாறி பணம்தான் மானத்தை விட பெரிது என்பதாக உள்ளது.,இன்றைய சமூகம்.தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு மறைமுகமாக பொறுப்பாகின்றனர்
   இந்த உண்மை மனிதநேயம் மிக்கவர்களுக்கு சுடுகிறது.
   இதனால்தான் இளங்கோவடிகள்,சிலப்பதிகாரத்தில்தான் செய்த தவறுக்காக மன்னன் உயிரிழந்தான்,அவன் மனைவியும் உயிரிழந்தாள்.இத்தகைய மன்னனை தலைவனாக பெற்றதற்காக மதுரையில் வாழ்ந்த மக்களை கண்ணகி தீக்கிரையாக்கினாள் என்று எழுதியிருக்கிறார்.
   இசக்கி முத்துவும் ,கண்ணகி மாதிரி நம் தலையில் கொள்ளி வைத்திருந்தால், நாமும்,நாகரிகம், மானம் என்று பேசியிருக்க மாட்டோம்.

 3. தல,

  பாலாவின் கார்டூன் கருத்தற்ற தனி நபர் தாக்குதல் போலவா தங்களுக்கு தெரிகிறது?

   • பாஸ்….நீங்க வினவின் கருத்தை தான் சொல்றீங்களே ஒழிய உங்க கருத்தை சொல்ல மாட்டேங்குறீங்க….சும்மா அநாகரீகமா இருக்குனு சொன்னா சரியாகிடுமா..

    எப்படி அநாகரீகம் என்று ஒரு நாலஞ்சு வரி சொல்லலாம்ல….

 4. ஹைதர் அலி , அம்மணமாக இருக்கும் இந்த அரசுக்கு கோவணம் கட்டி விட்டதே மேல். அதற்காக நீங்கள் மகிழ வேண்டும். ஏற்கனவே அம்மணமாக இருக்கும் அரசின் மீது தான் உங்களுக்கு கோவம் வர வேண்டும். பாலா மிகைப்படுத்தியோ தவறாகவோ சொல்லவில்லை. இருக்கின்ற அசிங்கத்தை அப்படியே, இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் மறைத்துள்ளார். ஜீரோ மார்க் போடுவதற்கு பதிலாக போனால் போகட்டும் என்று ஒரு மார்க் வழங்கியுள்ளார்.

 5. பாலாவின் கார்டூன் என்பது சமுக அவலத்தின் வெளிப்பாடு என்பதே பொருள் ஆகும். இது பாலா என்பவரை தான்டியது. சமூக அக்கறை கொண்ட எந்த மனிதனும் இந்த சமூகத்தின் அவலத்தை எந்த வடிவத்திலும் சுட்டிக்காட்டலாம். அது தனிநபர் தாக்குதல் ஆகாது. இங்கு கவனிக்கத்தக்க செய்தி என்னவென்றால் பார்பனித்தின் தன்மை தான் யாரும் கே்ளவி கேட்பதோ. சுட்டிக்காட்டுவதோ தவறு. பாலா சொன்ன கருத்து சரியா அல்லது தவறானது என்று பார்பனியம் என்றும் பார்காது. என்னை சுட்டிக்காட்டக்கூடாது. என்பது தான் பார்பனியத்தின் உண்மை முகம். என்மீது சுமத்திய குற்றச்சாட்டு பற்றி நீ சொல்லக்கூடாது அப்படி என்றால் ஆகம விதிப்படி நீ தண்டிக்கப்படக்கூடியவன் என்பதே பொருள். இங்கு நாம் கவனிக்ககூடியது பார்பனியம், பாசிசம் என்பதாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க