கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிக்கையாளர்களின் கருத்துரிமைக்கும் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்பதையும், எடப்பாடி அரசின் நிலைமை இன்று கிண்டல் செய்வதற்குக் கூட தகுதியற்றதாக, தூக்கியெறியத்தக்கதாக மாறியிருப்பருப்பதையும் இந்த உரையில் தோழர் மருதையன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் வெறுமனே கண்டனம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றோடு நின்றுகொள்ளாமல் அதனைத் தாண்டி செயலில் இறங்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார் தோழர் மருதையன்.
இனியாவது பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையுடன் மக்களின் பிரச்சனைகளில் மக்களுடன் இணைந்து போராடவேண்டும் அது ஒன்றே பத்திரிக்கையாளர்களை காக்கும்.இது வெறும் ‘கருத்துரிமை’ சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.பாலாவின் கோபம் இசக்கி குடும்பத்தின் தற்க்கொலையால் மட்டுமல்ல சமூகவிரோதிகளை இந்த அரசும் அதன் எடுபிடிகளும் காப்பதில் முனைப்பாக இருப்பதனால் ஏற்ப்பட்டது.