சினிமா நட்சத்திரங்களை நாக் அவுட்டாக்கிய நக்கலைட்ஸ் வீடியோ !

4
62

நக்கலைட்ஸ் குழுவினர் ஒராண்டு பயணத்தை முடித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள் !

ஃபேஸ்புக்கில் நாலு ஸ்டேட்டஸ் போட்டு அதையும் ஃபேக் ஐ.டியில் வந்து லைக் பண்ணும் பேதை ஒருத்தி, துப்பறிவாளனிடம் ரொமான்டிக்கான ஹீரோவை தேடித் தருமாறு கேட்கிறாள்.

விக்ரம், தனுஷ், சிம்பு, ரஜினி, கார்த்தி, விஷால் அனைவரும் நக்கலைட்ஸ் படைப்பில் தாருமாறாக அடி வாங்கி ஒரே ரவுண்டில் நாக் அவுட்டாகிறார்கள்.

சினிமா நாயகர்களை நச்சென்று தரைமட்டமாக்கும் படம். வினவு போன்ற ‘குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்களே” குறையேதுமின்றி நிறைவாக பாராட்டும் படம்.

வடிவம், உள்ளடக்கம் இரண்டும் நீ இல்லாமல் நானில்லை என அழகாகப் பொருந்துகிறது.

நக்கலைட்ஸ் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்! படத்தைப் பாருங்கள், பகிருங்கள்!

Thupparivalan-2 – A Love Mystery – Spoof – Nakkalites | துப்பறிவாளன் 2 : காதல் ஒரு மர்மம் – நகலடி – வீடியோ

(நகலடி – Spoof ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் = நகலைப் பகடி செய்வதால் நகலடி!)


கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

4 மறுமொழிகள்

  1. இந்த புரட்சி நாள் அன்றாவது உங்களுக்கு இப்படி பாராட்ட மனம் வந்ததே.வினவுகாரங்களுக்கு சிரிக்கவும் தெரியாது, மற்றவர்களை சிரிக்க வைக்கவும் தெரியாது என்று நினைக்கிறேன்.
    உங்களுக்கு ஒரு சவால், குறைந்தது ஒரு 1000 பேரை சிரிக்க வைங்க பார்ப்போம்.

  2. வினவுகாரங்க சிரிக்கிறாங்களோ இல்லையோ….. எல்லோரையும் சிந்திக்க வக்கிறாங்க…… அரசு, அரசியல்வாதிகள், பாஜக காவி கும்பலை பார்த்து “எள்ளி நகையாடவும், எதிர்வினையாற்றவும்” மக்களுக்கு நன்றாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

    • இல்லை, ரொம்ப சிந்திக்கிறார்களா!,அதுதான் மூளை சூடு ஆகி விடுமே என்று நினைத்தேன்.
      உங்கள் சிந்தனை நாட்டுக்கு மிகவும் தேவை, தொடரட்டும் உங்கள் சேவை.

  3. சினிமா கழிசடைகளை நம் வீட்டுக்கழிவறை வரை கொண்டுவந்து கொட்டி அவர்களின் வழியாக வாழ்க்கையைப் பார்க்க கத்துக்கொடுக்கும் ஊடக , பத்திரிக்கைகளின் அயோக்கியத்தனங்களுக்கு மத்தியில் மிகச் சாதரணமாகவும் நேர்மையான அலட்சியத்தோடும் அவற்றை மிகச்சிறப்பாக அம்பலப்படுத்தும் நக்கலைட்ஸ் நண்பர்களின் இந்த தூய்மைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க