Sunday, March 26, 2023
முகப்புபார்வைஇணையக் கணிப்புஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

ஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

-

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று 14.11.2017 அன்று கோவையில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதிகாரிகள் தவிர உள்ளூர் அமைச்சர், எம்.எல்.ஏ. -க்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

கோவை பாரதியார் பல்கலை விழாவிற்கு வந்த ஆளுநர் திடீரென இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அரசின் துறைரீதியான செயல்பாடுகளை ஆளுநர் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறி அனைத்துத் அதிகாரிகளும் கோப்புகளுடன் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் ராஜ விசவாசத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இவர்களைப் போல 12 முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் மதியம் 3.30 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

ஏற்கெனவே புதுச்சேரியில் இதேபோன்று ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை என்ற பெயரில் பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளை முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்திற்கு எதிராக எடுத்து வருகிறார். தற்போது தமிழகத்திலும் இத்திருப்பணியை பாஜக அரசு ஆரம்பித்திருக்கிறது. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.

ஆளுநர் சரியாகத்தான் செயல்படுகிறார் என அ.தி.மு.க அடிமை அரசு இதை நியாயப்படுத்தி வருகிறது.

பாஜக-வின் நோக்கம் என்ன?

அரசியல்வாதிகள் தலையீடு என்று ஆனந்த விகடன் நகைச்சுவைகளை ரசிக்கும் நடுத்தர வர்க்கத்திடம் செல்வாக்கு பெறுவது,

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஊழலை எதிர்த்தும் பாஜக போராடுகிறது என ஊடகங்களில் செய்திகளை வரவழைப்பது,

ஏற்கனவே பாஜக பண்ணைகளிடம் அடிமையாக இருக்கும் அதிமுக அரசை கோமாளி அடிமைகளாக காட்டுவது,

கோவை போன்ற ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு பகுதிகளை உறுதி படுத்துவது, ஆதரவை அதிகப்படுத்துவது. பா.ஜ.க-விற்கு எதிரான இயக்கங்கள், தனிநபர்களை உள்ளூர் அதிகார வர்க்கத்தின் துணையுடன் ஒடுக்குவதை துரிதப்படுத்துவது.

இதன் மூலம் தமிழகத்தில் பாஜக-வின் செல்வாக்கை பல முனைகளில் உயர்த்துவது.

வாக்களியுங்கள்! மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.

கேள்வி: தமிழக ஆளுநர் புரோகித்தின் கோவை ஆய்வு – நோக்கம் என்ன?

 • உள்நோக்கம் ஏதுமில்லை
 • நடுத்தர வர்க்கத்திடம் பெயர் வாங்குவது
 • பெயரளவு மாநில சுயாட்சியையும் ஒழிப்பது
 • இந்துத்துவ செல்வாக்கை அதிகரிப்பது
 • ஊழலை ஒழிக்கும் நல்ல முயற்சி
 • மாற்று இயக்கங்களை ஒடுக்குவது
 1. RSS காவி பயங்கரவாதிகள் தமிழகத்தில் உடன் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்துதான் இம்மாதிரி “சில்லறைதனத்தில்” ஈடுபடுகின்றனர்.இதை அனைத்து மக்களும் உணர்ந்து எதிராக போராட வேண்டும்.இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள் …

 2. வடிவேலு பாணி வசனம்!
  எடப்பாடி: முதல்வர் பதவியை நீ வெச்சிக்கோ, நிர்வாகத்த நான் வெச்சிக்கிறேன்னு கவர்னர் சொன்னாரு, பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சி அதுக்கு ஒத்துக்கிட்டேன்.
  மக்கள்: த்தூ!

 3. ஒரு காலத்தில் கொடுத்த வாக்கையும், நேரமையையும் காப்பாற்ற ஹரிச்சந்திர மஹாராஜா தன் மனைவி மக்களை விற்றான், இந்த ஆட்சியாளர்களோ தங்கள் கொள்ளையடிக்கும் கோடிகளை காப்பாற்றிகொள்ள தனது மனைவி, மக்கள், இனம், மானம் அனைத்துயுமே விற்கிறார்கள்

 4. Actually Prohit doing the the Sasi kala work.
  Earlier the so called Ministers collecting and giving to Sasikala.
  But Sasikala on her own network she supervises the official machinery and confirming the pay outs from ministers.
  Now Prohit doing the same the collections(correct %ge) reaches to BJP echelons at the center.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க