கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி செல்லும் பாதை நெடுகிலும் செங்கொடிகள் பறக்க, ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்க வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.
( மக்கள் வெள்ளத்தில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( அரங்கத்திற்கு வெளியே – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மாலை 3.30 மணிக்கு கருத்துப்படக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகளையும், அதன் ஈவிரக்கமற்ற கொடுமைகளையும், அது தனக்குத் தானே சமாதி கட்டிக் கொண்டிருப்பதையும் விளக்கும் விதமான படங்களும், கேலிச்சித்திரங்களும் கருத்துப்படக் காட்சியை சிறப்பித்தன.
( தப்பாட்டம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மேலும் இரசியப் புரட்சி பற்றியும், அது உலகத்திற்கு வழங்கிய கொடையைப் பற்றியும் கருத்துப்படக் காட்சியில் படங்கள் இடம்பெற்றன. அரங்கத்திற்கு வெளியே திரையிடப்பட்ட கருத்துப்படக் காட்சியை மக்கள் பார்த்து இரசித்தனர்
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மாலை 3.45 மணியளவில் தப்பாட்டம் தொடங்கியது. பறையிசையின் உணர்ச்சிப் பெருக்கோடு, கூட்டம் தொடங்கியது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். முதலில் பாட்டாளிவர்க்க சர்வர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பங்கேற்றோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, “ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிட்டிகல் எக்கானமி” (RUPE) என்ற அரசியல் பொருளாதார பத்திரிக்கையின் ஆசிரியர் ரஜனி எக்ஸ் தேசாய் , இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை தோழர் மருதையன் கூட்டத்தினர் முன் வாசித்தார்.

அதன் பின்னர், பெங்களூரு வழக்கறிஞர் பாலன், சிறப்புரையாற்றினார். “இரசியப் புரட்சிதான் நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் காரணம் என்பதையும், தொழிலாளி வர்க்கம் எவ்வாறு போராடிப் பெற்ற தனது உரிமைகளை இன்று இழந்து நிற்கிறது என்பதையும் விளக்கிப் பேசினார்.”
அடுத்தபடியாக, வினவு வழங்கிய “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் ஒளிபரப்பட்டது. மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் இசைச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டது. இரசியப் புரட்சியின் காலகட்டத்தையும், உலகின் முதல் சோசலிச அரசின் சாதனைகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விதமான காட்சிகளோடு 35 நிமிட இசைச்சித்திரம் ஒளிபரப்பப் பட்டது.

இரசிய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட விடுதலை இயக்க எழுச்சி, சோசலிசக் குடியரசுகளின் தோற்றம் மற்றும் உலகெங்கும் நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு கொண்டாட்டங்களையும் கண்முன்னே காட்டியது “புரட்சியின் தருணங்கள்’ இசைச் சித்திரம்.இசைச் சித்திரத்தின் பல்வேறு காட்சிகளுக்கு மக்கள் ஆரவாரமாக கைதட்டினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற தப்பாட்டம், பார்வையாளர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எழுச்சியைக் கொடுத்தது என்றால், “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் உணர்வுப்பூர்வமான எழுச்சியை பார்வையாளர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மூலதனம் நூலின் தமிழ் பதிப்பின் மொழி பெயர்ப்பாளரும், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தோழர் தியாகு உரையாற்றினார்.
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை மொழிபெயர்க்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மார்க்சின் மூலதனம் நூலைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.”
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஒவ்வொரு உரைகளுக்கும் இடையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தோழர்களின் பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன் பின்னர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். “முதலாளித்துவம் இன்று அதற்கான சவக்குழியை தானே தோண்டிக் கொண்டுள்ளது. அதனை சவக்குழிக்கு அனுப்ப வேண்டிய வேலையை பாட்டாளி வர்க்கம் செய்து முடிக்க வேண்டும்” எனக் கூறினார்.
அவரின் உரையைத் தொடர்ந்து வினவு வழங்கிய “மார்க்ஸ் எனும் அரக்கன்” இசைச் சித்திரம் திரையிடப்பட்டது. மார்க்ஸின் சமகால அரசியல் சூழல்குறித்தும், முதலாளித்துவவாதிகளால் கூட தவிர்க்கப்பட முடியாதவராக இன்று மார்க்ஸ் அவசியப்படுவதையும் எடுத்துக்காட்டியது இசைச்சித்திரம்

நிகழ்ச்சியின் இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நன்றியுரையாற்றினார்.
-வினவு செய்தியாளர்.
குறிப்பு: –
முழுக் கூட்டத்தையும் வினவு இணையதளத்தில் நேரலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில் நுட்பச் சிக்கல் மற்றும் அனுபவக் குறைவு காரணமாக அது கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை தவறே இல்லாமல் தொழில் நுட்ப நேர்த்தியுடன் நேரலையாக காட்டும் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறோம். அடுத்து வரும் நேரலைகள் பிரச்சினையின்றி இருக்குமென நம்புகிறோம். நவம்பர் கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோக்களாக ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் மார்க்சின் லெனினின் படங்களை பதிவேற்றுங்கள் தோழரே..
Record செய்த வீடியோக்களை வினவில் பதிவிடுங்கள்
நிகழ்ச்சி சிறப்பிலும் சிறப்பு!
உரைகள் உணர்வூட்டக்கூடியதாக இருந்தன. வினவின் இரண்டு இசைச் சித்திரங்களும் அருமை. மொத்தமாக கூட்டம் நம்பிக்கையையும் உணர்வெழுச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்தது.
ஆனால், உணர்வூட்டக்கூடிய உரைகளுக்கு ஆர்ப்பரிக்கும் கைதட்டல்களோ, இளமைத்துடிப்புள்ள விசில்களோ, ஒன்ஸ் மோர் என்ற கூச்சல்களோ எதுவும் பார்வையாளர் மத்தியில் இல்லை.
புரட்சியின் தருணங்கள் இசை சித்திரத்திலேயே கூட மக்கள் ஆர்ப்பரித்து கைதட்டிய காட்சிகள் வந்தன. பாலே நடனக் கலைஞரான பெண் தோழர் போராட்ட களத்தில் நடனமாடும் போது விசில்கள் பறந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், பார்வையாளர்கள் மத்தியில் அப்படிப்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் வெளியாகவில்லை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களில் ரசிகர்கள் கனவான் தன்மையிலான ஒழுங்குடன் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மட்டும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அதுவும் கூட இங்கு இல்லையே.
இதை கம்யூனிச ஒழுங்கு என சொல்ல முடியுமா? கூட்டத்தை நேரத்தோடு முடிக்க வேண்டிய காரணங்களால் இந்த ஒழுங்கு தேவைப்படுவதாக எடுத்துக் கொள்ளலாமா? மேலும், யாருமே எழுந்து போகாமல், இடையில் பேசாமலுமா கூட்டம் நடந்தது? இல்லையே..
கம்யூனிச ஒழுங்கு? விமர்சனம்? எது உணர்ச்சியை நாம் வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது என்று எண்ணிப்பார்த்தேன்..
பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்த எங்களிடம் தான் இளமை குன்றிவிட்டதோ எனத் தோன்றுகிறது. மெரினா போராட்டத்தின் போது தோழர் கோவனின் பாடல்களுக்கு கைதட்டல்களும் விசில் சத்தங்களும், ஒன்ஸ் மோர் கோருவதுமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.
கூட்டத்திலிருந்து பெற்றுக்கொண்ட உணர்வை அங்கேயே வெளியிட்டு வற்றச் செய்யாமல், அதை வேலைகளில் காட்ட வேண்டும் என்று பார்வையாளர் தோழர்கள் பாதுகாத்து வைத்து இருந்திருக்கலாம்.
உரை வீடியோக்களை, முக்கியமாக இசை சித்திரங்களை விரைவில் பதிவேற்றுங்கள். காத்திருக்கிறோம். நன்றி!
“உணர்வூட்டக்கூடிய உரைகளுக்கு ஆர்ப்பரிக்கும் கைதட்டல்களோ, இளமைத்துடிப்புள்ள விசில்களோ, ஒன்ஸ் மோர் என்ற கூச்சல்களோ எதுவும் பார்வையாளர் மத்தியில் இல்லை.”
இது ஒரு விழா. வகுப்பறை அல்ல. ஆர்ப்பரிப்பை வெளிக்காட்டாதது பார்வையாளர்களின் குறையே.
தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் வைகுண்டராஜனைப் பற்றி “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்…..” என்ன பாடல் பாடப்பட்ட போது பாடலோடு சேர்ந்து மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.
உற்சாகத்தை, மகிழ்ச்சியை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்த வே6ண்டும். அதே வேளையில் அத்தகைய வெளிப்பாடு நிகழ்ச்சியின் தொடர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் அமைய வேண்டும்.
//கம்யூனிச ஒழுங்கு? விமர்சனம்? எது உணர்ச்சியை நாம் வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது//
காட்டுமிராண்டி கம்யூனிஸ்ட்டுங்கன்னு லிபரல்ஸ் இதத்தான் சொல்றாங்களோ 🙂 😀
ராம்சங்கர் ! ஒவ்வொரு உரையின் போதும், பாடலின் போதும், மக்கள் கைதட்டி வரவேற்றார்களே ! தோழர்கள் விசிலடிச்ச்சான் குஞ்சுகள் அல்ல !!
புரட்சி வெல்லட்டும்.
Must share to videos and photos
மருதையன்,பாலன் அவர்களின் பேச்சை mp3 வடிவில் download செய்யும் வகையில் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் (நான் கூட்டத்தில் கலந்துகொண்டவன்)