நடிகர் சசிக்குமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணக் குறிப்பில் மதுரை அன்புச் செழியன் எனும் கந்து வட்டி மாஃபியாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கந்து வட்டி ரவுடி தொடர்பாகவே இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன் 2003 -ம் ஆண்டு தற்கொலை செய்தார்.

அதன் பிறகு ரம்பா, தேவயானியை மிரட்டினார், அஜித்தை ஒரு அறையில் பூட்டி வைத்தார் என்று நிறைய தகவல்கள் வந்தாலும் அன்புச் செழியனை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள், சாதி பலம், போலீசு, நீதித்துறை, ஊடக முதலாளிகளுக்கு இறைக்கப்படும் பணம் ஆகியவற்றால் அன்புச்செழியன் செல்வாக்கோடு இருக்கிறார்.
சினிமாத்துறையில் இருக்கும் நெறிமுறையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் நிலையும் இதற்கு காரணம். சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிக பணம் கொடுத்து அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அந்த அதிகப் பணத்தை இத்தகைய கந்து வட்டிக்காரர்களிடமே வாங்குகிறார்கள். சினிமா திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதற்கும் இதுவே காரணம்.
இந்நிலையில் கந்து வட்டி தடைச் சட்டமே இந்த அன்புவின் அடாவடியை அடுத்து கொண்டு வரப்பட்டாலும் அடாவடிகள் தொடர்கின்றன.
மதுரை அன்புச்செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார்?
- அ.தி.மு.க அமைச்சர்கள்
- பெரும் ஊதியத்தை வாங்கும் நட்சத்திர நடிகர்கள்
- ஊழல் போலீசு, நீதிமன்றம்
- நட்சத்திர நடிகருக்கு கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்
- அன்புச் செழியனை வெளிப்படையாக கண்டிக்க முன்வராத சினிமா பிரபலங்கள்
(பதில்களில் மூன்றைத் தேர்ந்தெடுக்கலாம்)
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அன்பை கைதுசெய்யாமைக்கு அரசும் முக்கிய தடைதானே
கந்துவட்டிக்கு கடன் வாங்கி இவர்களை படம் எடுக்க சொல்வது யார்?
ஒரு பார்ப்னர் GV தற்காெலை செய்து காெ ண்டது பிரனையா.. அது நீங்கள் சாெல்ல கூடாது தாேழர்
நடிகர்களின் மற்றும் தமிழ்தெரியாமல் பாெம்மை பாேல … ஒரு நாலுவரி டப்பிங் புண்ணியத்தில் வாயை சம்பந்தமில்லாமல் அசைத்துவிட்டு … பல காேடிகளை சம்பளமாக பெறுவதை குறைத்தாலே … அன்புசெழியன் பாேன்றவர்களிடம்கையேந்த தேவையில்லை என்பதுதான் உண்மை…!
After reading this article i really doubt about vinavu’s neutrality on the issues. Anbu chezian is doing financing business which everyone accept it. Now the question is why everyone pointing the gun towards the gun towards him and why there is no other financier names comes out of it who also lends money to sasikumar and ashok kumar. Simple logic till this month he paid the interest to Anbu chezian, when a person paying a interest properly to a lender nobody will torture him. So who will torture him? So why anbu got cornered in this case? Except Anbu other financiers are from North India.. did Vinavu knows about this or not? When Anbu gives financing to tamil movie makers at 2 to 3 percentage and other noth indian financier gives it in higher percentage whose business is in stake? Anbu is financing 80 percentage of tamil films. If they attack anbu, what will happen to tamil movies and who is going to benefit out of it? Mr.Vinavu journalist we people all know about this.. so don’t try to make fool people just coming up with these kind of articles. Just like anitha for NEET another poor guy ashok kumar died for this kind of political reason. We people are watching..
அய்யா போல்ட் நட் தாட்ஸ் அவர்களே,
முதல்ல, வினவு நியூட்ரலான இணையதளம் கிடையாது, அதைப் புரிஞ்சுண்டு வந்து விவாதிச்சா நல்லா இருக்கும். உழைக்கும் மக்களுக்கான இணைய தளமாத் தான் ஆரம்பத்துல இருந்து இருக்கு. ஆக, கந்துவட்டிக்காரனுக்கு நடுவுல நின்னு எழுத முடியாது, மக்கள் பக்கத்துல நின்னு தான் எழுத முடியும்.
ரெண்டாவது, அன்பு 2,3 சதம் கொடுக்கல 10 பெர்சண்டுன்னு உங்கள் அன்பு அண்ணன் சீமான் பேட்டில சொல்லிருக்காரு. கவனிச்சு பாருங்க.
மூணாவது, அன்புவைத் தாக்கினால் தமிழ் சினிமா முடங்கிடும்னு சொல்றீங்க .. இப்ப என்ன குடியா முழுகிடப் போகுது ?.
கடசியா, நீங்க எந்த ஊரு ஜேர்னலிஸ்ட் ? என்ன பத்திரிக்கை ?. இங்க யாரு மக்களை ஏமாத்த முயற்சி பண்ணுறது?. அனிதாவின் தற்கொலைக்கு நீட் எதிர்ப்பாளர்களின் அரசியல் தான் காரணம்னு சொல்லும் போதே தெரியுது உங்க யோக்கியதை என்னான்னு …
சரி .. இதுக்கு பதில் சொல்லுறதுன்னா தமிழ்ழயே போடுங்க போல்டு நட்டு தாட்ஸ் … எங்க மூளைக்கு வேற எக்ஸ்ட்ரா வேலை கொடுக்குறீங்க ..
அய்யா போல்டுதாட்ச்சு,
நியூட்ராலிட்டின்னா எது? அரசியல்-பொருளாதாரத்தைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிக்கை, இல்லேன்னா ப்ளாக் – நியூட்ரலா இருக்க வாய்ப்பேயில்லை.
வடக்கு-தெற்கு-கிழக்கு-மேற்குன்னு கொள்ளைக்காரனுகள ரகம்பிரிச்சு பார்த்து எந்த விதமான கொள்ளையையும் ஒழிக்க முடியுமா? சமரன் சொன்னது மாதிரி, நீட்டுக்கும் கந்துவட்டிக்கும் என்ன தொடர்பு?