Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வீ - அலைக்கற்றை (V - Band) முறைகேடு !

வீ – அலைக்கற்றை (V – Band) முறைகேடு !

-

ல முறை அல்லாமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நடந்தது தான் 2 ஜி அலைக்கற்றை ஊழல். அதை மீண்டும் செய்யக்கூடாது எனறு 2 ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பொன்றில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதை மொத்தமாக மீறுவது போல் 7,000 உயர் அதிர்வெண் (MHz) கொண்ட வீ – அலைக்கற்றையை(V – Band) ஏலம் நடத்தாமல் விற்பனை செய்ய தொலைத்தொடர்பு துறை(DoT)  முடிவு செய்திருக்கிறது.

ஒருவேளை விலையற்றோ அல்லது மிகக்குறைந்த விலைக்கோ வீ – அலைக்கற்றை வழங்கப்பட்டால் அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கிடுவது கடினம். ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அலைக்கற்றையின் சந்தை மதிப்பை ஒரு ஏல செயல்முறை மூலம் மட்டுமே உணர முடியும். ஆயினும், முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராயினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி கணக்கிட்டால் அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பின் மொத்த அளவு 4,77,225 கோடி ரூபாயாக இருக்கும். இந்த அளவை வைத்தே காங்கிரசு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக கூறும் பாஜக தற்போது ஏலத்தை விடுத்து தரை ரேட்டில் விற்ற காரணம் என்ன?

2016 -ம் ஆண்டு அக்டோபரில் 800 உயர் அதிர்வெண் முதல் 2500 உயர் அதிர்வெண் வரையிலான 965 உயர் அதிர்வெண் அலைக்கற்றைகள் 65,789 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு உயர் அதிர்வெண் அலைக்கற்றை 68 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் 7,000 உயர் அதிர்வெண் வீ – அலைக்கற்றைக்கான இழப்பு 4,77,225 கோடியாகும்.

அலைக்கற்றை என்பது பொதுச்சொத்தாக இருப்பதால் அதை விற்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், எனவே ஏலமுறையில் அதை விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியிருப்பதாக 2G ஊழல் பொது நல வழக்கொன்றின் வழக்குரைஞர் பிரணவ் சச்சதேவ் கூறினார்.

தொலைத் தொடர்புத்துறை 2015 -ம் ஆண்டு உரிமம் இல்லாமல் அலைக்கற்றை வழங்குதல் தொடர்பாக ஒரு பரிந்துரையை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) கேட்டிருந்தது. அனால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலையே ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.

அலைக்கற்றை உரிமத்தை நீக்கிவிட்டால் அலைக்கற்றையை அதிகபடியான விலைக்கு ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள் என்றும், ஏலத்தை அரசு விரைவாக நடத்த வேண்டும் என்றும், இந்திய செல்லுலார் இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் எஸ். மேத்யூஸ் நவம்பர் 9 -ம் தேதி அன்று தொலைத்தொடர்புத் துறைக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். இத்தகைய வாதம்தான் 2 ஜி வழக்கின் போதும் சொல்லப்படடது.

பேஸ்புக் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வீ – அலைக்கற்றை மூலம் அகலக்கற்றை (Broadband) மற்றும் அருகலை (Wi-Fi) சேவைகளை வழங்க ஆர்வமாக உள்ளன. பேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் ஒரு பரப்புரைக் குழு  பிராட்பேண்ட் இந்தியா மன்றம் (Broadband India Forum).  அலைகற்றைக்கான உரிமத்தைக் கொடுக்கக்கூடாது என்றும் ஏலத்தில் இல்லாமல் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற  அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும் என்றும் இது வாதிடுகிறது. இதையேதான் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும் 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான ராசா திரும்பத் திரும்ப கூறினார். மன்மோகன் அரசு முதலில் வருவோருக்கு ஒதுக்கீடு செய்த சட்டபூர்வமான விசயத்தையே தற்போதும் அமல்படுத்தி வருகிறார்கள். ஆக முதலாளிகளுக்கு பெரும் தள்ளுபடியை கொடுத்து விடுவதை சட்டப்பூர்வமாக செய்வதையே இது காட்டுகிறது.

ஊழலின் பரிமாணத்தில் 2 ஜி அலைக்கற்றை ஊழலை வீ-அலைக்கற்றை முறைகேடுகள் எளிதாக ஊதித் தள்ளிவிட முடியும் என்றால் இந்த ஊழல் பேச்சுக்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் பேசப்படும் அரட்டைகள் மட்டும்தானா? அரசமைப்பே சட்டபூர்வமாக முறைகேடுகளை செய்யும் போது ஊழல் என்பது ஒரு நடவடிக்கையில் அல்ல, ஒட்டு மொத்த அரசு அதன் கொள்கைகளே மக்கள் விரோதமாக மாறிவிட்டதே உண்மை.

மேலும் :