Sunday, May 4, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !

ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !

-

கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 07.01.2018
நேரம் : காலை 9மணி அளவில்.
இடம் : ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள “மல்லிகை அரங்கம்”
               வ.உ.சி பூங்கா செல்லும் வழி. ஈரோடு மாவட்டம்.

தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர் ஈரோடு நோக்கி,

தகவல் :
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
தொடர்புக்கு – 9626545446 – 9789180422.