Tuesday, September 27, 2022
முகப்பு செய்தி காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !

காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !

-

“காஷ்மீர் பற்றிய ஆவணப் படத்திற்காக” வந்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கொமிட்டி பால் எட்வர்ட்(Comiti Paul Edward ) டிசம்பர் 9-ம் தேதி காஷ்மீர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடவுச்சீட்டு சட்டம் 14B பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 12 ம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆயினும் கடவுச்சீட்டு திரும்ப கிடைக்காமல் இன்னும் அவர் போராடிக்கொண்டிருக்கிறார்

படம் : நன்றி – காஷ்மீர் அப்சர்வர்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் எட்வர்ட் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவரது கடவுச்சீட்டு, புகைப்படக்கருவி மற்றும் இதர பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். காஷ்மீரின் பிரச்சினைகளை போல உலகெங்கிலும் பல்வேறுப் பிரச்சினைகளை அவர் பதிவு செய்திருந்தாலும் இது போன்றதொரு மோசமான சூழலை இதுவரை எட்வர்ட் சந்தித்திருக்கவில்லை என்று காஷ்மீரைச் சேர்ந்த எட்வர்டின் உதவியாளரான ஒரு பத்திரிக்கையாளர் கூறினார்.

ஆப்கானிஸ்தான், காங்கோ, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்காக இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வாழ்க்கையை செலவிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் எட்வர்ட். “ஆனால் நான் கைது செய்யப்பட்டதும் கொடுமைப்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். காஷ்மீரின் கதையைப் பரந்த சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை தடுக்கவே அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இங்கிருந்து செய்திகளைச் சேகரிப்பதற்கு சர்வதேச செய்தி ஊடகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் அறியப்படுவதை அவர்கள் விரும்பவில்லை” என்று விருது பெற்ற அந்த பத்திரிகையாளர் கூறியதாக உள்ளூர் செய்தித் தாளான காஷ்மீர் ரீடர் செய்தி வெளியிட்டது.

முன்பு புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான ஃபாரூக் அஹ்மத் தார் இராணுவ வண்டியில் கட்டப்பட்டு கொடுமைக்குள்ளான அதே ஸ்ரீநகரின் பிரதாப் பூங்காவில் எட்வர்ட் கைது செய்யப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல.

தனக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் அயல்நாட்டு நுழைவுச்சீட்டிற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதற்காகவே எட்வர்ட் கைது செய்யப்பட்டார் என்று காஷ்மீர் மாநில காவல்துறை கண்காணிப்பாளரான முனீர் கான் கூறியுள்ளார்.

“அவர் வெளிநாட்டுப் பதிவு அலுவலகத்துடன் தன்னை பதிவு செய்யவில்லை. ஆனால் இது கண்டிப்பாக செய்யப்பட வேண்டிய ஒன்று. எனவே அது கடவுச்சீட்டு சட்டப்பிரிவு 14B இன் கீழ் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. நீங்கள் ஒரு வியாபார கடவுச்சீட்டை கொண்டு பெல்லட் குண்டினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பதிவு செய்வதோ, உமர் பாரூக்கை சந்திப்பதோ, பார்ரூக் தாரை நேர்காணல் செய்வதோ அல்லது காணாமல் போனவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதோ கூடாது” என்று பத்திரிக்கையிடம் கான் தெரிவித்தார்.

எட்வர்டின் கைது நடவடிக்கையை உலகம் முழுதும் பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர். சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.

“பத்திரிக்கை சுதந்திரம் என்பது உலகளாவிய உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வியாபார நுழைவுச்சீட்டையோ அல்லது சுற்றுலா நுழைவுச்சீட்டையோ பெற்று செய்திகளை சேகரிப்பது என்பது உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களிடையே உள்ள பொதுவான நடைமுறைதான்” என்று இந்திய பத்திரிக்கையாளர் சங்கமும் சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கின்றன.

“இந்த கைதும் கடவுச்சீட்டு பறிமுதலும் தீவிரமான பிரச்சினையாகும். காஷ்மீரின் மனித உரிமைகள் பிரச்சினைக் குறித்து செய்திகள் சேகரிக்க வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து தெரிந்து கொள்ள முயன்று கொண்டிருப்பதாக” மனித உரிமைகள் ஆணையத்திடம் வழக்கு தொடுத்த சமூக ஆர்வலரான முஹம்மத் ஆசன் உண்டூ கூறினார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது 21–ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கேலிக்கூத்து. இந்த கேலிக்கூத்தை பத்திரமாகாப் பாதுகாத்து வருவதால் யாரேனும் அதை படம் பிடித்தால் உடன் கைது செய்கிறார்கள். இந்த அக்கிரமத்தை இன்னும் எத்தனை நாட்கள் இவர்களால் தொடர முடியும்?

மேலும் :


 

 1. மிஸ்டர் சரவு, பிதற்ற வேண்டாம்.
  இன்றைய இஸ்லாமிய காஸ்மிரிகள் யார்? அக்பர் காலத்தில் முன்னிருந்ததை விட செல்வசெளிப்பிலும் உயர் பதவிகளிலும் களித்தனர், அவர்களின் அறிவை கண்டு மெச்சிய அக்பரே ‘பண்டிட்’ பெயரை சூட்டினார். பலர் இசுலாத்துக்கு மாறினர். காலனிய காலங்களிலும் பெரும்பாலனவர்கள் மேற்கத்தையை பாணி எலீட் குஞ்சுகளாகவே கொழுத்தனர். ஆக இப்போது அதே பண்டிதர்கள் இசுலாமியர் என்ன்ற ஒரே காரணுத்துக்காக குதற படுகிறார்கள், மாறாத பண்டிதர்களோ பாதிக்க படவில்லை. 90 களில் பயத்தால் அவர்கள் வெளியேறியதே அவர்களில் அதிக பட்ச சப்பரிங்கு, பிஞ்சுகள் கொல்லப்படவோ பெல்லேட் குண்டுகளால் வாழ்கையே அழியவோ இல்லை.

  இதில நீங்க பண்டிதர்களின் சப்பரிங்குகளை படமெடுக்க சொல்ல என்னொரு கொழுப்பு வேணும்?
  இப்பிடிதாங்க சும்மா இருக்காமல் எதாவது வரியை போட்டு என்னைய மாரி ஆட்களை சொரண்டி விட்டு இப்படி உண்மைகள் பரவ உதவி செய்கிறீர்கள், இனியாச்சும் கொஞ்ச யோயணை பண்ணி போடுங்க.

 2. காஷ்மீரை ரோஜா படம் எடுத்த மணிரத்னம் மாதிரி காட்டணும்.அப்பதான் அத்வானி & கோ பாராட்டுவார்கள்.மாறாக பெல்லட் ரவைகள் சீறிப்பாயும் பயங்கரவாதம் பற்றி படமாக்கினால் வழக்குதானே வழக்கமா வரும்.பிரெஞ்சு மனிதநேயக்கலைஞன் எட்வர்ட்டின் கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைப்பு செய்.அவரை அவர் கடமையை செய்யும் பொருட்டு எந்நாட்டிற்கும் செல்ல நிபந்தனையற்ற அனுமதி வழங்கு.

  • I DID go through the damn history, Do I have to drag this matter anymore? how the Pandits just adapted to every rule (Akbar, colonial periods) and did just fine, as brahmins did and do. I am not bragging about my knowledge here, I am just using it to counter bullshitters like you. and hey, what’s that ‘thru’??? isn’t an american thing of ‘through’?? are you an AIA??? (Ambi in America)

 3. மக்கள் தனக்கான ஒரு அரசை நிறுவ முடிவு செய்ய அதிகாரத்தை கையில் எடுக்கும் வரை இது தொடரவே செய்யும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க