Thursday, May 8, 2025
முகப்புசெய்திஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

-

.என்.எஸ் கல்வாரி – ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர்க்கப்பலாகும். பிரதமர் மோடி இதனை 2017  டிசம்பர் 14 -ம் தேதி தொடங்கி வைத்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டிவிட்டர் (twitter) பக்கத்தில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் வெற்றியாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. மோடியும் “இந்திய தேசியப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி இது என்றும் இது “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கான மிகத்துல்லியமான எடுத்துக்காட்டு என்றும் அளந்து விட்டிருந்தார்.

இந்தப் பெருமைஎந்த அளவிற்கு உண்மை? எளிய விக்கிபீடியாத் தேடலே மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி விடுகிறது.

இந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navantia) என்ற இரு நிறுவனங்கள் தான் முதலில் வடிவமைத்தன. இந்தியக் கடற்படை 2005 -ம் ஆண்டு “ப்ராஜெக்ட் 75” என்ற திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு கேட்டிருந்தது. ஐ.என்.எஸ் கல்வாரியின் கட்டுமானம் 2006 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கப்பலின் ஐந்து வெவ்வேறு பாகங்களை ஒன்றாக இணைத்து ஒருங்கிணைப்புச் சோதனை (Boot Together) செய்த நாள் 2014 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி. கப்பலுக்கு பெயரிடப்பட்டது 2015 -ம் ஆண்டு அக்டோபர் மாதம். கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது 2016 -ம் ஆண்டு மே ஒன்றாம் நாள். செப்டம்பர் 21 -ம் தேதி இது மேஸகன் டாக் லிமிடட் (Mazagon Dock Limited) என்ற இந்திய பொதுத்துறை நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது.

மோடியின் பொய்யை உறுதிப்படுத்தும் விதமாக 2013 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் பிரான்சுவா ரிச்சியர் கூறுகிறார்: “முதல் நீர்மூழ்கி கப்பல் 2014 -ம் ஆண்டு வாக்கில் தயராகிவிடும். இது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பிற்கான ஒரு போர்த்தந்திர ஒப்பந்தம். இது நாங்கள் அனைவரோடும் செய்யாத ஒரு முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகும். இந்திய-பிரான்சு இடையிலான உறவில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் எங்களுக்கு மிக முக்கியமானது.”

மேக் இன் இந்தியா”வின் இலட்சணம் இதுதான். பிரான்சு நாட்டு கப்பலுக்கு மூவர்ணக் கொடி போர்த்திவிட்டு, காங்கிரசு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தயாரான இந்தக் கப்பலை வைத்து எப்படி கதை விடுகிறார்கள், பாருங்கள்!

செய்தி ஆதாரம் :