Monday, August 8, 2022
முகப்பு செய்தி ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

-

.என்.எஸ் கல்வாரி – ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர்க்கப்பலாகும். பிரதமர் மோடி இதனை 2017  டிசம்பர் 14 -ம் தேதி தொடங்கி வைத்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டிவிட்டர் (twitter) பக்கத்தில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் வெற்றியாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. மோடியும் “இந்திய தேசியப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி இது என்றும் இது “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கான மிகத்துல்லியமான எடுத்துக்காட்டு என்றும் அளந்து விட்டிருந்தார்.

இந்தப் பெருமைஎந்த அளவிற்கு உண்மை? எளிய விக்கிபீடியாத் தேடலே மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி விடுகிறது.

இந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navantia) என்ற இரு நிறுவனங்கள் தான் முதலில் வடிவமைத்தன. இந்தியக் கடற்படை 2005 -ம் ஆண்டு “ப்ராஜெக்ட் 75” என்ற திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு கேட்டிருந்தது. ஐ.என்.எஸ் கல்வாரியின் கட்டுமானம் 2006 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கப்பலின் ஐந்து வெவ்வேறு பாகங்களை ஒன்றாக இணைத்து ஒருங்கிணைப்புச் சோதனை (Boot Together) செய்த நாள் 2014 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி. கப்பலுக்கு பெயரிடப்பட்டது 2015 -ம் ஆண்டு அக்டோபர் மாதம். கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது 2016 -ம் ஆண்டு மே ஒன்றாம் நாள். செப்டம்பர் 21 -ம் தேதி இது மேஸகன் டாக் லிமிடட் (Mazagon Dock Limited) என்ற இந்திய பொதுத்துறை நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது.

மோடியின் பொய்யை உறுதிப்படுத்தும் விதமாக 2013 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் பிரான்சுவா ரிச்சியர் கூறுகிறார்: “முதல் நீர்மூழ்கி கப்பல் 2014 -ம் ஆண்டு வாக்கில் தயராகிவிடும். இது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பிற்கான ஒரு போர்த்தந்திர ஒப்பந்தம். இது நாங்கள் அனைவரோடும் செய்யாத ஒரு முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகும். இந்திய-பிரான்சு இடையிலான உறவில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் எங்களுக்கு மிக முக்கியமானது.”

மேக் இன் இந்தியா”வின் இலட்சணம் இதுதான். பிரான்சு நாட்டு கப்பலுக்கு மூவர்ணக் கொடி போர்த்திவிட்டு, காங்கிரசு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தயாரான இந்தக் கப்பலை வைத்து எப்படி கதை விடுகிறார்கள், பாருங்கள்!

செய்தி ஆதாரம் :


 

 1. விக்கிபீடியாவை தடைசெய், ஜிம்மி வேல்ஸ் இந்திய பெருமையை குலைக்கும் சீன பாகிஸ்தான் சதிக்கு துணை போகின்றான்.

 2. நீர்முழ்கி கப்பல் தயாரிப்பது என்னமோ வினவு கூட்டங்கள் சீனா துப்பாக்கி தயாரிப்பது போல் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

  சீனா பாக்கிஸ்தான் கைக்கூலியாக இந்தியா வலுவடைவது பிடிக்காது என்பதை மேலும் ஒரு முறை இந்த கட்டுரை மூலம் நிரூபித்து இருக்கிறார்கள்.

  • வாங்க மணிகண்டன்,
   சீன துப்பாக்கியை விடுங்க, அதிநவீன போர்த்தளவாடங்கள் எல்லாமே நீங்க நினைப்பது போலவோ ஹாலிவுட்டில் காட்டுவது போலவோ எதோ வேற்றுகிரக லெவல் பலபல மினுமினு சரக்குகள் அல்ல, போதுமானளவு வளங்களும் திறனும் இருந்தால் யாரும் செய்ய முடியும், பக்கத்திலே விடுதலைபுலிகள் கூடத்தான் சிறியரக படகை நீர்மூழ்கியாக்கி பாதியில் போருக்கு பின் மீட்கப்பட்டது, அதே போல் சோத்து மாடான இந்தியாவுக்கு ஒர்ரலவேனும் சொந்தமாக செய்ய தெரியாதா? ஏன் சீனா காரன் அமெரிக்க ஜெட்களுக்கு இணையான ஜெட்களை தயாரிக்கவில்லையா? ஈரான் அதிநவீன ஏவுகணைகளை செய்ய வில்லையா? ஏ கே துப்பாக்கி அக்காலத்தில் அதிநவீனமாக கருதப்பட்டது, வடிவமைத்த கலாஷ்னிகோவ் செம்படையில் சிறு ஆயுதங்களை பட்டி டிங்கரிங் செய்ய அமர்த்த பட்டவர், அவரின் ஆர்வமும் அனுபவமுமே அந்த துப்பாக்கியை இன்றுவரை சிறந்த ஒரு துப்பாக்கியாக உருவாக்கியது, இந்த எல்லாத்தியும் எதோ வேற்றுலக அறிவு போல தூக்கி காட்டும் அதே அம்பிபுத்தி இங்கு எடுபடாது,

   அப்படியே அமெரிக்க தர நீர்மூழ்கி சொந்தமாக தயாரித்து பெருமை அடைய என்ன இருக்கிறது? பாகிஸ்தான்காரன் போரில் தோற்கும் நிலை வந்தால் அணுவாயுதம் சுலபமாக இந்தியாவை அடையும், அதே அணுவாயுதத்தை இந்தியா நீர்மூழ்கியில் வைத்துதான் வேடிக்கனுமா?

  • பாஸ். உங்களோட ஒரே காமடியா போச்சு.

   சரி. நேரா கேள்விக்கு வருவோம். உங்க 56 இஞ்சு சொன்ன மாதிரி ஐ.என்.எஸ் கல்வாரி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் மேக் இன் இந்தியா திட்டத்தின் படைப்பா?

   பட்டுன்னு புள்ளையாருக்கு தேங்காய உடைக்குற மாதிரி சொல்லுங்க பாப்போம்…

  • நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பது உண்மையில் கஷ்டம் தான். அதுவும் சொந்தமாக தயாரிப்பது ரெம்ப ரெம்ப குஷ்டம் தான்.

   ஆனா ஒங்க 56 இஞ்சு எப்படிங்க நாங்க தான் செஞ்சோமுன்னு அட்ச்சு உடராறு. உண்மையிலேயே கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத ஆளுயா அவரு. அவேருக்கேல்லாம் யாருயா 56 இஞ்சுனு பேர் வெச்சா?

   நல்லவேளை! அவரு ஹிந்தில பெசுனதால பிரெஞ்சுகாரணங்களுக்கு தெரியாம போச்சு.

 3. இந்த கட்டுரையே புரிந்தல் இல்லா ஒன்று…. மேக் இன் இந்தியா என்றால் என்னவென்று வரையறை செய்து இருகாரு இந்த மோடி? வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதன் மூலமாக இந்தியாவில் வெளிநாட்டு பொருட்களை தயாரிப்பது தானே மேக் இன் இந்தியா? அந்த வரையறைப்படி பிரான்சு இந்தியாவில் தயாரித்த நீர்முழுகி கப்பல் தானே இது?

  • Haaaaaaaaaaaaaai Student,

   Again and again……………… Oh Man………….

   What is the basic idea of Make In India. Would you please explain it ?

   மேக் இன் இந்தியா என்றால் என்னவென்று வரையறை செய்து இருகாரு இந்த மோடி? ……..

   Ithukkula Vallarasu Kanavu Vera ? Ha ha ha haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa……….

  • என்ன பாஸ்.
   நீர்மூழ்கி கப்பல் மட்டுமல்ல பல்வேறு பொருட்கள் ரெம்ப நாளாவே இந்தியாவுல வெளிநாட்டு கம்பனிகளால் அவர்களுடைய தொழில்னுட உதவியுடனும் இங்கே ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தானே வருகின்றன. அப்போ அதெல்லாம் உங்க புரிதல் படி மேக் இன் இந்தியா தானே.

   ஆனா இங்க மோடி சொல்றது அதுவா? உங்களோட பெரிய ரோதனையா போச்சு.
   மோடி கூட தெளிவா தான் சொல்றாரு.

   2014, செப்டெம்பர் மதத்துல தான் “மேக் இன் இந்தியா” திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு தான் அக்டோபரில் கப்பலுக்கு ஜாதக போருத்தப்படி பேர் வெச்சாங்க….

   சரி நீங்க சொல்லுங்க இப்போ. இந்த நீர்மூழ்கி கப்பல செஞ்சது மேக் இன இந்தியாவ இல்லை மோடியோட மேக் இன் இந்தியா திட்டமா?

   • நண்பர் குமாரை பாம்புன்னு நெனச்சு தாண்டுறதா….இல்லை, பழுதுன்னு நெனச்சு மிதிக்கிறதா…. தோழர்கள் கொஞ்சம் விளக்கனும் !

 4. நண்பர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தான் பதில் அளிக்க முயற்சி செய்து இருக்கீங்க! குறிப்பா செல்வம் அவர்கள் விசய்துக்குள்ள வந்துட்டு திடீர் என்று வெளியே வந்துட்டாரு..சரி வேளாவாரியாகவே பேசுவோம்…யோசிப்போம், விவாதிப்போம்.

  முதல் கேள்வி என்வென்றால் இந்த கட்டுரையின் நோக்கம் என்ன?

  இந்த கட்டுரையாளர் (வினவர் )மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிகின்றாரா? அதாவது மேக் இன் இந்தியாவை ஆத்ரிகின்றாரா? ஆதரிக்க்கவில்லை என்றால் அப்புறம் எதற்கு இந்த கட்டுரை? மேக் இன் இந்தியா திட்டத்தையே வினவு ஆதரிக்கவில்லை என்பது தான் என்னுடைய அனுமானம்.(பழைய கட்டுரைகள் ஊடான அனுமானம்) அப்படி ஆதரிக்காத வினவின் விமர்சனத்துக்கு உட்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நீர் முழுகி கப்பல் தயாரிக்கபட்டு உள்ளது என்றால் வினவின் கட்டுரை எப்படி சென்று இருக்கனும்?ஒருவேளை ேக் இன் இந்தியாதிட்டத்தின் கீழ் இந்த நீர் முழுகி கப்பல் த்யரிக்க்பட்டு இருக்கு என்றால் அது ஆதரிக்கவேண்டிய செயல் தானா?

  முதல் கேள்வி தான் பிரதான கேள்வி. இந்த கட்டுரையில் நோக்கம் என்ன? வினவு இந்த கட்டுரையின் ஊடாக வாசகர்களுக்கு டேரிவிக்க விரும்பும் செய்தியும் சிந்தனையும் என்ன?

 5. தலை,

  நீங்க ரெம்ப யோசிக்கிறீங்க னு நினைக்கிறன். நீங்க யோசிக்குற அளவுக்கு இந்த கட்டுரை வொர்த் இல்லை.

  கட்டுரை மிகவும் எளிமையாக தானே இருக்கிறது. நீங்க ஏன் ரெம்ப குழப்பமாக பாக்குறீங்க.

  இந்த மேக் இன் இந்தியா மக்களே எப்படி எல்லாம் குழப்புது.

  கட்டுரையின் நோக்கம் காங்கிரசு ஆட்சியின் முடிக்கப்பட்ட ஒரு திட்டத்தை மோடி சொந்தம் கொண்டாடுகிறாரே. அதை அம்பலபடுட்டுவது தான்.

  நான் கேட்டது என்ன? இந்த கப்பலை தயாரித்தது 2014 -ம் ஆண்டு மோடியின் “மேக் இன் இந்தியாவா” இல்லை 2006 ஆம் ஆண்டு காங்கிரசின் “project 75” திட்டமா?

  இதுக்கு உங்ககிட்ட இருந்து பதிலை காணுமே. இது தான் இந்த கட்டுரை எழுப்பு கேள்வினு நினைக்கிறன்.

  • அது எனக்கு புரியுது செல்வம்! எனது கேள்வி என்ன? வினவு ஆதரிக்காத மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கப்பல் தயார் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன ? பதில் சொல்லுங்க பார்கலாம்? மீண்டும் கேட்கின்றேன்…இந்த கட்டுரையின் நோக்கம் என்ன? எதனை அம்பல படுத்த நினைக்கிறது இந்த கட்டுரை?

   • குமார்,

    //இது “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கான மிகத்துல்லியமான எடுத்துக்காட்டு….

    //பிரான்சு நாட்டு கப்பலுக்கு மூவர்ணக் கொடி போர்த்திவிட்டு, காங்கிரசு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தயாரான இந்தக் கப்பலை வைத்து எப்படி கதை விடுகிறார்கள், பாருங்கள்!///

    இது தான் எளிமையான விஷயம்…

    பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்துவது பற்றி இங்கே பிரச்சினையில்லை. ஆனால் தான் கொண்டு வந்த திட்டத்தின் ()மேக் இன் இந்தியா) கீழ் செயல்படுத்தப்பட்டது என்பதான பித்தலாட்டங்கள் எதற்கு? அப்படிதானே மோடி கும்பல் பீற்றினார்கள்.

    இதை தான் வினவிற்கு என்ன பிரச்சினை என்று கேட்கின்றீர்களா?

    இதை வேறுவிதமாக அதில் செய்யப்பட ஊழல்கள் முறைகேடுகள் குறித்தும் நாம் அம்பலபடுத்தலாம். ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. எனவே உங்களுடைய ஊகங்கள் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இந்த கட்டுரையில் பதில் தேடினால் எப்படி கிடைக்கும்.

    • பழைய கட்டுரைகளில் வினவால் அமப்லாடுதப்ட்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிபடையில் இந்த கப்பல் கட்டமைக்க படவில்லை…சரிதான். அதே நேரத்தில் வினவால் சரியாக விமர்சிக்ப்பட்ட-எதிர்க்கப்ட்ட மேக் இன் இந்தியா திட்டபடி இந்த கப்பல் கட்டமைக்க பட்டு உள்ளது என்று பீற்றிகொள்ளும் இந்துத்துவாகளுக்கு பதில் அளிக்கும் கட்டுரையாக இது இல்ல… நம் வேலை என்ன வென்றால் மேக் இன் இந்தியா திட்டத்தையும் அம்பலப்டுதணும் அதனுடன் சேர்த்து இந்த கப்பல் அந்த திட்டத்தின் கீழ் செய்யபடவில்லை என்ற விசயத்தையும் அம்பல படுத்தனும்.. இரண்டாவது கருத்தகத்தை மட்டும் தான் இந்த கட்டுரை உருவாகியுள்ளது. முதல் கருதாகமான மேக் இன் இந்தியா திட்டத்தை இந்த கட்டுரை அம்பல படுதல… இதனை தான் நான் என் முதல் பின்னுட்டத்தில் இந்த கட்டுரையே புரிதல் இல்லாத ஒன்று என்று கூறினேன்..

 6. முட்டையில் மயிர் புடுங்கி தனது லா பேசும் திறமையை நிருபிக்க முயலும் குமாரை நினைத்து சிப்பு தான் வருகுது, ஏனுங்க ஆதரிக்காவிட்டால் விமரிசனம் பண்ண கூடாத? முன்பே ஒரு சகோ கூறியது போல எல்லா பதிவிலும்ஏ தாவது சொல்லியே வைக்கவேண்டுமென அலைகிறார் குமார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க