Monday, March 27, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை டிச 25 : ஒக்கி புயல் - மீனவர்களின் நேருரை - பத்திரிகையாளர் கலந்துரையாடல்...

சென்னை டிச 25 : ஒக்கி புயல் – மீனவர்களின் நேருரை – பத்திரிகையாளர் கலந்துரையாடல் – அனைவரும் வருக !

-

வம்பர் 30-ல் வீசியஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர். தன்னார்வ வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் ஒரு நாள் முன்பே எச்சரிக்கை கொடுத்தார். ஏன்?

ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர். ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.

விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை!

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?

இந்தப் பேரிடரையும், குமரி மீனவ மக்களின் துயரையும் இந்தக் கலந்துரையாடல் எடுத்து வைக்கிறது. குமரிக்கு நேரில் சென்ற பத்திரிகையாளர்கள் மூவர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இரு மீனவ இளைஞர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். அவர்களின் ஒருவர் மீனவர்களே நேரில் சென்று மீட்ட அணியில் பங்கேற்றவர்.

இந்தக் கூட்டத்தில் குமரிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த வினவு செய்தியாளர்களின் நேர்காணலை அடிப்படையாக வைத்து “கண்ணீர்க் கடல்” எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக!

நாள்: 25.12.2017 திங்கட் கிழமை

நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை

இடம்: ஆர்.கே.வி வெள்ளித்திரை பிரிவியூ தியேட்டர், சின்னத்திரை நிறுவனம் (RKV Film and Television Institute),
எண். 317-G, டாக்டர். என்.எஸ்.கே. சாலை, விஜயா கார்டன், வடபழனி, சென்னை-26
(சென்னை வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)

நேரம்: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்:

3.00 மணிக்கு அறிமுக உரை மற்றும்
ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி

3.20 மணிக்கு ”கண்ணீர்க் கடல்” – திரைச்சித்திரம் திரையிடல்

4.45 மணிக்கு மீனவர் நேருரை மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல்

பங்கேற்பாளர்கள்:

திரு ஆர்.கே. ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
திரு அருள் எழிலன், பத்திரிகையாளர்
திரு பாரதி தம்பி, பத்திரிகையாளர்
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க,
மீனவ இளைஞர்கள், குமரி மாவட்டம்

நிகழ்ச்சி ஏற்பாடு : வினவு
தொடர்புக்கு: 97100 82506 , 99411 75876

அனைவரும் வருக !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க