Monday, January 18, 2021
முகப்பு அரசியல் ஊடகம் மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !

மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !

-

லைப்பே முகம் சுளிக்கும்படி இருக்கிறதே என்று கருதுகிறீர்களா? இதைத்தான் பண்பாடு, பக்தி என்று தமிழர்களின் தலையில் கட்டத்துடிக்கிறது தி இந்து தமிழ் பத்திரிக்கை.

“லட்சுமியின் முழு சாந்நித்தியம் உள்ள இடம் பசுவின் உடல் என்பது ஐதீகம்! காலையில் எழுந்தவுடன் பசுவின் பின்பாகத்தை தரிசிப்பது, லட்சுமியைத் தரிசிப்பதற்குச் சமம். இந்த தரிசனத்தால் நம் பாவங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை!” (தமிழ் தி இந்து, 15-01-2018, ‘லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கணுமா? பசுக்களை வணங்குங்க!’).

தமிழ் தி இந்துவின் மாட்டுப் பொங்கல் செய்தி இது! உழைப்பைப் போற்றும் தைத்திருநாளையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் இந்துமயமாக்குவதற்கும் தங்களின் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கும் பார்ப்பனிய பக்தர்கள் எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

பார்ப்பனியத்தின் இறுக்கமான பிடியில் இருக்கும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கலாச்சாரம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியிலையில் உருளுவதும், முடியைத் தின்பதும் இன்றளவும் நடைபெற்று வருகிறது. அங்கே அதுதான்  ஓர் இந்துவிற்கு அனுமதிக்கப்பட்ட பண்பாடு!

இப்பொழுதோ ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!

தமிழ்நாடு தப்பிப்போய்விட்டது என்பதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திகளும் எச்ச ராஜாக்களும் இராம கோபாலான்களும் மட்டும் வன்மத்துடன் திரிவதில்லை! மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவும் புரோகிராம்டாகத்தான் இருக்கிறார் என்பதை அன்றாடம் வரும் செய்திகளில் இருந்து மறந்துவிடக்கூடாது!

தமிழ் தி இந்துவின் மூத்த – இளம் பத்திரிக்கையாளர்களும், கட்டுரையாளர்களும் மக்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற பார்ப்பனிய பிற்போக்குத்தனங்களை இதழியல் என்று எந்த தார்மீக அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் தர வேண்டும்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்ட விவசாயிகள் இன்றைக்கு நிர்க்கதியாக இருக்கிறார்கள். காவிரியில் தண்ணீரை மறுத்து விவசாயிகளை வஞ்சித்த பா.ஜ.க கும்பல் தமிழர்கள் மீது நடத்தியது அரசியல் தாக்குதல் என்றால், பார்ப்பனிய தி இந்து தமிழ் பத்திரிக்கை நம் மீது நடத்துவது பண்பாட்டுத் தாக்குதல்!

சென்ற பொங்கலின் போது மாட்டுக் கொம்பை வைத்து நாம் டெல்லிக்கட்டு நடத்திக் கொண்டிருந்தோம். அசந்த நேரத்தில் பார்ப்பனியக் கூட்டம் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்! இப்பொழுதும் மாடு தான்! அவர்கள் சொல்வதுதான் பண்பாடு என்கிறார்கள்! இதற்கெதிராக விழிப்புடன் இருப்பது மட்டுமல்ல! மக்களின் சுயமரியாதைக்குச் சவால்விடும் பண்பாட்டின் பெயரிலான இதுபோன்ற பார்ப்பனிய அசிங்கங்களை அப்புறப்படுத்துவது உடனடி அவசியமாகும்!

மேலும் படிக்க:
லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கணுமா? பசுக்களை வணங்குங்க!

 1. பொங்கலன்று மதியம் பொங்கல், இரவு மாட்டுக்கறி கொத்துபரோட்டா, மாட்டு பின்புறத்தை போட்டார்களா தெரியவில்லை ஆனால் என்ன சுவை.

  • பிறர் நம்பிக்கைகளை இழிவு படுத்துவதுதான் முற்போக்கு என ******** நம்புகிறதா?..

   • பிறர் நம்பிக்கை’ அங்கதாண்டா இடிக்குது, நீங்க என்ன மயித்த வேனான்னாலும் தின்னு கும்பிட்டு போங்க, பொது ஜனங்களை ‘நம்பிக்கை’ என்னும் பெயர்ல செம்மறிகூட்டமாக மாத்த விடமாட்டோம். பீயை பாத்தாலே தெரியும். அதை போன்ற மதத்தை மறுப்பதே ‘முற்போக்கு’ எனும் நிலையில் உள்ளதே இந்த நாடு…

    • கும்பிடறதே பொது மக்கள் தான் என்பது என் கருத்து,, மற்றபடி கம்யூனிஸ்ட்கள் அல “கத்தை” க்கு கட்டவுட்டு சீர்திருத்த உரையாடலுக்கு கெட்டவுட்டு சொல்லும் போது தான் பேரதிர்ச்சி தாக்குகிறது, யூ டூ *****..

   • அது என்ன ஆபாசமா திட்டிநீரா? வினவு வெளியிட்டால் புரியும் இவர்களின் கொதிப்பு.

 2. இதுக்கும் ஒரு கதை சாெல்லுவார்கள் … முன் பக்கம் இருந்த தெய்வம் பின் பக்கம் இடம் மாறியதற்கு …. பாவம் பசு …?

  • ஹி ஹி முன்பக்கம் நின்று வணங்கும்போது மாடு முட்டி விட்டால் என்ன செய்வது!!! (சிவயோகி சிவகுமார்)

 3. It is reported that our Governor is learning Tamil and Tamil culture.He was taken to the beach to do arti for the sea by pouring milk into the sea.He was asked to do puja for the cow.I have not heard any of these things are part of Tamil culture.
  Actually,Pongal is the harvest festival of the Tamils.Tamils used to show their gratitude to the Sun which nurtured their farms.They will decorate their cattle and show their gratitude to them for helping them in their farm operations.They never did arti for the sea nor poured milk into the sea.The cattle would be given their free day on Mattu Pongal day.They never worshiped the cow.
  Fellow Tamils!be alert! these people are trying to appropriate the only true Tamil festival ie Pongal.

 4. லாரில பேட்டரி வ்ச்சிருகுற பெட்டிமேல “ந்ண்பா, தினமும் என்னை கவனி” அப்ப்டினு எழுதியிருக்கும். ஆரியருக்கு மாடுதான் செல்வம். எனவேதான் காலையில் எழுந்ததும் மாட்டொட யோனி சுத்தமாக, சுகாதாரமாக இருக்கா என்று பார்க்கவேண்டியது ஒவ்வொரு ஆரியனின் கடமை. ஆந்த கடமைய திராவிட தமிழன செய்யசொல்வது மைலாபூர் மஃபியாவின் மடமை. அத்ற்க்கு ஜால்ரா அடிப்பது மௌன்ட்ரொடு மஹாவிஷ்னுவின் கயமை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க