Saturday, June 15, 2024
முகப்புசெய்திபீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !

பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !

-

பேருந்து பயணத்தில் ஒரு பீகாரியை சந்தித்த போது தெரிந்து கொண்டது – திராவிடத்தால் வாழ்கிறோம்!

பேருந்தின் கடைசி சீட் என்பதால் 6 பேர் அமர்ந்திருந்தோம். பீகாரியுடன் எனக்கு பக்கத்திலிருந்த 30 வயது மதிக்கத்தக்க தமிழர் ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் அதன் அர்த்தங்களை கேட்டேன் அவரும் மொழிபெயர்த்தார்.

மாதிரிப்படம்

நீங்க எந்த மாநிலம்?
பீகார்…..
என்ன ஊர்?
சேக்பூர்…..
அங்க என்ன தொழில்?
விவசாயம் போதிய வேலையில்லை….
என்ன படிச்சிருக்க?
10 வது……

நான் குறுக்கிட்டு சில கேள்விகள் கேட்கிறன் பதில் கேட்டு சொல்லுங்கன்னு கேட்டேன்… நம்ம தமிழர் ஒப்புக்கொள்ள…..

நம்மாளு ஏற்கனவே கேட்ட கேள்விகளால் பீகாரி சலிப்படைந்திருந்தான்!

நான் : இங்குள்ள சில அரசியல்வாதிகள் எங்க மாநிலம் முன்னேறவில்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க அதனால் ஒங்க ஊர் பொருளாதா நிலவரம் பற்றி சில கேள்வி கேட்கிறேன்னு , அதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு கேட்கச் சொல்ல….

நம்ம மொழிபெயர்ப்பாளர் ஜெர்க் ஆகி “அண்ணே எனக்கு அந்த அளவுக்கெல்லாம் இந்தி தெரியாது இவன் ரொம்ப கொச்சை இந்தி பேசறான் புரியலன்னு” ஜெகா வாங்க…..மொழிபெயர்த்தவரின் நண்பர் (அசல் திராவிட வித்து) எனக்கு மொழிபெயர்த்து உதவ வந்தார்!

பிறகு பீகாரியிடம் என் முந்தைய கேள்வியை மொழிபெயர்க்க…..
அவனும் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்…….

இந்திக்காரன் : நீங்க எந்த கேள்வியும் கேட்க வேணாம் வித்தியாசங்கள்தானே நானே சொல்றேன்……னு ஆரம்பித்தான்….!!!

எங்க மாநிலத்துல நகர்ப்புறங்கள்லயே வேலைவாய்பில்லாத நிலை அதிகம். ஆனா இங்க நகரங்கள்ள இருந்து 30கி.மீ தொலைவிலுள்ள குக்கிராமத்தில் நாங்க 80 பேர் வேலை செய்கிறோம். நகரப்பகுதிகளில் 1000க்கணக்கானோர் வேலை செய்கிறோம்…..எங்க ஊர்ல 8 வதுல படித்த பாடத்தை இங்க 1 -வது படிக்கும் அவன் முதலாளி பையன் தனியார் பள்ளியில் பாடமாக படிக்கிறானாம்.

தனியார் பள்ளியிலும் அரசுப்பள்ளியிலும் ஒரே பாடம்தான் அதாவது சமச்சீர் கல்வி என நான் இடைமறித்து சொல்ல அவன் கண்களில் ஆச்சர்யம் தெரிந்தது!!!

இங்க கிராமத்தில் இருக்கும் ரோட்டின் தரம்தான் அங்க நகரத்திலேயே இருக்குமாம்…இங்கு எங்க பார்த்தாலும் நான்கு வழி சாலைகளாக உள்ளது, எங்க மாநிலத்தில் ரொம்ப ரொம்ப குறைவு….

அங்க காசிருந்தால்தான் மருத்துவம். அரசுமருத்துவமனைக்கு செல்வதற்கு பதில் நேரடியாக சுடுகாட்டிற்கே சென்று விடலாம்னு விரக்தியா சொல்லி சிரிக்கான்…..

அவன் பேர் திரிலோக்தாசனாம்!! இவன் பிறந்த போது இவன் குடும்பத்தார் திரிலோக்ராஜ்னு பெயர் வைத்ததற்காக இவன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தாராம் ஊர்தலைவர். அதனால் திரிலோக்தாசன்னு பெயரை மாற்றி வைத்தாங்களாம்!

பரவாயில்லைங்க இங்க ஊர்தலைவர்னுலாம் யாரும் இல்லை இங்கு பாதுகாப்பான வாழ்க்கை. உழைக்கனும்ங்கற எண்ணமிருந்தால் போதும்ங்க எப்படியும் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம்…… இங்கு வாழ குடுத்து வெச்சிருக்கனும்ங்க. எங்க பார்த்தாலும் காலேஜா கட்டி வெச்சிருக்கீங்க!!! இங்க கல்வி,பொருளாதாரம் வளர்ச்சியில்லைன்னு சொல்றவன்களைலாம் வாய்ல குத்தி பல்லை பேத்து கையில குடுங்கன்னு அவன் சொல்ல!!!

இங்க என்ன ஒரே பிரச்சனையின்னா ரயில்ல ஏறவங்க ரயில் நின்னாதான் இறங்கறாங்க. ஊர்வழியா ரயில் போனா செயின் இழுத்து ரயில நிறுத்தி இறங்கமாட்டேங்கறாங்க !
(சிரிக்கிறான்)

முதல்ல மொழிபெயர்த்த “நாம் தமிழர்” எங்கடான்னு பார்த்தா பயபுள்ள 4 -சீட் தள்ளி போய் உட்காந்திடுச்சி….

அவனும் எவ்வளவோ சொல்ல தயாராக இருக்க……
கேட்க நமக்கும் ஆசையாக இருக்க இறங்க வேண்டிய என் ஊர் வந்ததால் பஸ்சிலிருந்து இறங்கினேன்!!!

-Kathiravan Soundhararajan ஃபேஸ்புக் பதிவுலிருந்து.

 

 1. I am wonder the way you understand the Naam thamizhalar party and tamilnadu. Suppanukku kuppai Kuppanukku thangam. I mean the bihari point of view tamilnadu is better. You have to consider all the aspects not by someone perspective. Kerala is more educated state compared to us and there is no Dravidian party. What about safety and development of natural resources,language,etc,. So many things perish and neglected by Dravidian. Tamil people has to understand all the things and unite.

  • Kerala people give more importance to learn other state languages. Almost all the Kerala students know Malayalam, English, Tamil and Hindi

   In Tamil Nadu, in the name of Dravidan politics and racist political parties like Naam Tamilar, students are not allowed to know Hindi in Government schools. Even if a student wants to learn Hindi in TN Government school its not allowed.

   You can’t compare Kerala with Tamil Nadu.

   At the same time due to communist politics there is no proper job opportunities in Kerala so all the educated Keralites should move to other states and countries for proper jobs. Due to that lot of money comes back to kerala based on those money good social welfare are taken care by people.

   • Mr.Manikandan

    I am not compared Tamilnadu and kerala. I have replied for above article reg Dravidian party is reason for education development in Tamilnadu. Coming back to your perception, if people study Hindi they will get job right? So why north Indian people coming to Tamilnadu for job? Could you tell all hindi speaking state got Self sufficiency in job?

    • வட இந்தியர்கள் தமிழகம் வருகிறார்கள், சரி தமிழகத்தில் தான் இவ்வுளவு வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்கிறீர்களே அப்படி இருந்தும் ஏன் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் தமிழக மக்கள் வட இந்தியாவிற்கு வேலைக்கு போகிறார்கள் ? பலர் நன்றாக படித்து விட்டு பெங்களூரு, புனே, டெல்லி என்று போகிறார்கள் அதேபோல் படிக்காத பலரும் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு போகிறார்கள், இரண்டு தரப்புமே சந்திக்கும் பிரச்சனை ஹிந்தி.

     கர்நாடகாவின் உட்புறத்தில் இருக்கும் கிராமங்களில் கூட ஹிந்தி பேசுகிறார்கள் கேரளா மாணவர்கள் ஹிந்தி தமிழ் என்று பல மொழிகளையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள், அவர்களால் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் பிரச்சனை இல்லாமல் போக முடிகிறது.

     திராவிட கட்சிகளும் நாம் தமிழர் போன்ற இனவாத கட்சிகளும் தமிழக மாணவர்களுக்கு பெரும் தீமையை தான் செய்து இருக்கின்றன.

     • தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கடுமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் தான் வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப் படுகிறார்கள். ஏனிந்த பற்றாக்குறை? இரு மாநிலங்களிலும் படித்தவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.(இது கூட இந்த ஓட்டை ஒடசல் திராவிடத்தின் விளைவுதான்)
      அதனால் கூலி வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை. மேலும் நம் தொழிலாளர்களுக்கு வெளி மாநிலத்தவரை விட கூலி அதிகம். பெரும்பாலும் படித்தவர்கள்தான் வெளிமாநில வேலைக்கு செல்கிறார்கள். இவர்கள் ஒரே வருடத்தில் எளிதில் ஹிந்தி கற்றுக்கொள்கிறார்கள்.
      படிக்கும் ஹிந்திக்கும் பேச்சு ஹிந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இங்கு10 வருடம் பள்ளியில் ஹிந்தி படிப்பவர்கள் கூட ஹிந்தியில் பேச முடிவதில்லை. ஆனால் ஒரு வருடம் வெளிமாநிலத்தில் இருந்தவர் ஹிந்தி நன்றாக புரிந்து கொள்கிறார் மற்றும் ஓரளவு பேசவும் செய்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் நிறைய வெளிமாநிலத்தவர் வேலை செய்வதால் கட்டிட பொறியாளர் போன்றோர் இங்கேயே ஹிந்தி கற்றுக்கொள்கிறார்கள்.
      இங்கு ஹிந்தியை அனுமதித்தால் எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்தி என்றாகிவிடும்.
      இதை எப்படியாவது செய்து நமது அடையாளத்தை மாற்றிவிட வேண்டும் என்பது தான் மத்திய அரசுகளின் திட்டம்

   • Learning Hindi is not the problem here in TN. But loosing our identity is the problem. It is possible in North Indian schools to teach Southern language in their schools ? (Just for curiosity I asked this question)

    You can not FORCE me to study Hindi or any other language.

   • Hindi is a state language, there is no need to learn that language. Tamil Nadu has improved in all fields when compare it some 60 years ago. Second rich state in India is Tamil nadu next to Maharastra. there are 24 medical college run by Tamil nadu government in India no other state has such number of medical colleges. Language is not at all issue.
    EVERYONE SHOULD LEARN THEIR MOTHER TONGUE AND ONE OR TWO INTERNATIONAL LANGUAGE IF YOU WANT TO GO ABROAD. THERE ARE 23 NATIONAL LANGUAGES IN INDIA AND HINDI IS NOT SOMETHING SPECIAL. WHY DONT YOU ASK NORTH INDIAN TO LEARN TAMIL, ONE OF THE oldest, indigenous language of India.

  • சொமாலியா கூட எப்படி ஒப்பிட முடியும் சகோதரரா?
   இந்தியாவுக்குள்ள இருக்குற மாநிலங்களத்தானே ஒப்பிட முடியும்!

  • திராவிடத்தால் தமிழகம் வீழ்ந்து விட்டது என்கிறார் சீமான். வீழ்ந்த தமிழகத்தை ஒரு தமிழன் ஆட்சி செய்தால் நிமிர்ந்துவிடும் என்கிறார். அதற்காக சுத்த தமிழரான அவரை ஆட்சி செய்யச்சொன்னால், தமிழ் மக்களுக்காக அந்த தியாகத்தை செய்வதற்குக்கூட சித்தமாக இருக்கிறார்.(இப்போது ஆட்சி செய்யும் இரட்டையர்கள் கூட சுத்தமான அக்மார்க் தமிழர்கள்தான் என்பது அவர் மண்டையில் ஏனோ ஏறவில்லை!)
   இந்த ஓட்டை ஒடசல் திராவிட ஆட்சியால் கூட தமிழகம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை பதியத்தான் இந்த ஒப்பீடு.

 2. Poor vinavu ! Pathetic condition,, don’t you find anything better to post against seeman,, I’d we compare TN vs African nations we are still miles ahead pls do that… If there is some progress in TN its inspire of these robbers rule not because of…

 3. திராவிட இயக்கங்களால் தான் கல்வி அனைத்து சாதி மக்களும் சென்று சேர்ந்தது. அது சரி! ” நாம் தமிழர்” ஆங்கிலத்தில் மறுமொழி இட்டுள்ளீர்கள். மொழி மீது உங்கள் பற்று புல்லரிக்க வைக்கிறது.
  நீங்கள் தான் மொழியை காப்பாற்ற போறீங்களா?
  கேரளா பார்ப்பன பொதுவுடைமை பூமி.
  அங்கே பார்ப்பன நம்பூதிரிகள் இருக்கும் தெருவில் “சூத்திரர்கள்” ஆகிய “அண்ணண்” சீமான் சொல்லும் நாடார் சாதி மக்கள் ஒரு கையால் தங்கள் பாதம் பட்ட இடத்தை துடைப்பம் கொண்டு நெருக்கடியும், மற்றொரு கையில் கொட்டாங்குச்சியை (அல்லது வேறு பாத்திரம்) ஏந்தி பார்ப்பன நம்பூதிரிகளிடம் பிச்சை பெற்று தான் உணவருந்த வேண்டும். இதே மக்கள் வைக்கம் ஊரில் உள்ள கோவிலில் நுழைய தடை விதித்தது பார்ப்பன இந்து மதம். அங்கு அப்போது அவர்களுக்காக போராடி சிறை சென்றார் பெரியார். அதன் காரணமாக “வைக்கம் வீரர்” என்று இன்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் நாம் தமிழரின் மூதாதையர்கள் அப்போது (இப்போதும்) பார்ப்பனர்களின் காலில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடந்தவர்கள்தான். கேரளாவில் பிரபல நடிகர் “பீரேம் நசீர்” ஆல் ச.ம.உ. ஆக கூட முடியவில்லை. ஆனால் இங்கே பார்ப்பன பாசிஸ்ட் ஆன எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார். சரியாக சொன்னால் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள் அனுமதிக்க பட்டதே அவரின் காலத்தில் தான். இதை நான் சொல்லவில்லை, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனரும் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய ஜி.விஸ்வநாதன் சைதை துரைசாமியின் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் அவரே(ஜி.வி. யே) கூறியது. கேரளாவில் நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்க்கிறார்கள். இங்கே அவர்களை “ஆழ்வார் பேட்டை ஆண்டவராகவும்”, ” போயஸ் கார்டன் புத்தராகவும்” தமிழக பார்ப்பன , சூத்திர ஊடகங்கள் ஊதி பெருக்குவதால் வந்த வினை தான் இப்போது கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழா. நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
  நன்றி.
  மணிகண்டன்,
  பெரியாரியல் மாணவர்.

  • மணிகண்டன், உங்க பேர கொஞ்சம் லைட்டா மாத்தி வச்சுக்கோங்க நண்பரே!
   இங்க ஏற்கனவே உங்க பேர்ல ஒரு மாம்ஸ் வந்து களமாடிக்கிட்டு இருக்காரு!
   அவருன்னு நெனச்சு தோழர்கள் உங்கள போட்டுத் தள்ளிரப் போறாங்க!

   • சரிங்கண்ணா. இனி தேமா(மாமரத்தின் பூ) என்கிற பெயரில் பதிவிடுகிறேன். முதலில் என் பதிவு வினவால் நீக்கப்பட்டதாக நினைத்தேன். எனேக்கே பார்ப்பன எதிர்ப்பாளரான புத்தரை பார்ப்பன ஆதரவாளரோடு ஒப்பிட்டது வருத்தமளிக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அதை “போயஸ் கார்டன் பரமானந்தா” என்று மாற்றுமாறு வினவை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி!
    தேமா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க