Sunday, April 2, 2023
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஐ.என்.எஸ் அரிஹந்த் : 14,000 கோடி ரூபாய் மற்றும் 30 ஆண்டுகள் ஸ்வாகா !

ஐ.என்.எஸ் அரிஹந்த் : 14,000 கோடி ரூபாய் மற்றும் 30 ஆண்டுகள் ஸ்வாகா !

-

ள்நாட்டிலேயே கட்டப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், கடந்த பத்து மாதங்களாக பழுந்தடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் ஏற்பட்ட பழுதுக்கு “மனிதத் தவறே” காரணம் என கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாக “இந்து” பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் உந்துவிசை இயந்திரப் பிரிவினுள் (Propulsion compartment) தண்ணீர் புகுந்ததே பழுதிற்கு காரணமாம். இயந்திர அறையின் கதவைச் சரியாக பூட்டாததன் காரணமாகவே அதனுள் தண்ணீர் புகுந்து விட்டதாக இந்து பத்திரிகை தெரிவிக்கிறது.

அரிஹந்த் கப்பல் (கோப்புப் படம்)

அரிஹந்த்துக்கு துணையாக ரசியாவிடமிருந்து குத்தகையாகப் பெற்றுள்ள ஐ.என்.எஸ் சக்ரா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் அரிஹந்த் பழுதாவதற்கு முன்பே செயல்படாத நிலையில் உள்ளது. இக்கப்பலில் உள்ள ஒலி வீச்சளவுக் கருவி (Sonar Dome) விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நுழையும் போது இடித்துக் கொண்டதில் சேதமடைந்துள்ளது.

இந்திய கடற்பாதுகாப்பிற்கு போர்தந்திர ரீதியில் வலுவூட்டி வந்த அரிஹந்த் நீமூழ்கிக் கப்பல் தான் அணு ஆயுத ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் ஆற்றல் பரிசோதிக்கப்பட்ட ஒரே நீர்மூழ்கிக் கப்பல் என இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் பெருமையுடன் குறிப்பிடுவார்கள். கடந்த 2016 அக்டோபரில் தான்  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்த் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2009 -ம் ஆண்டு வெள்ளோட்டமிடப்பட்டு, பல்வேறு சோதனைகளை செய்து வந்த அரிஹந்த் கப்பல் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக தொழிநுட்ப பிரச்சினைகளையே சந்தித்து வந்துள்ளது.

இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் மேலும் ஐந்து அரிஹந்த் கப்பல்களைக் கட்ட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தரைதட்டி நிற்கும் அரிஹந்த் கப்பலைக் கட்ட 14,000 கோடியும் 30 ஆண்டுகளும் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய சீன எல்லைத் தகராறு தோன்றிய நிலையில் தான் ஆட்சித் தலைமையில் உள்ளவர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பல் தரைதட்டி நிற்கும் கவனத்துக்கு வந்துள்ளது என ‘தேசபக்தியுடன்’ தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இப்போதும் கூட இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் சீனா குறித்த பரபரப்புச் செய்திகளை தொடர்நது வெளியிட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் தளபதியே சீனாவை வெல்வோம் என சினிமாவில் விஜயகாந்த் மிரட்டுவது போல பேசுகிறார். ஆனால் இவர்களது பலம் என்ன,திறமை என்ன என்பதை ஒக்கி புயலிலேயே பார்த்து விட்டோம். கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற தைரியமற்ற இந்த சிங்கங்கள்தான் நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்பதற்கு எது அளவுகோல்?

கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்.

மேலும் :

  1. விபத்தே நேராத தளவாடத்தை உற்பத்தி செய்வது
    நஷ்டமே ஆகாத கம்பெனி நடத்துவது
    ஆராய்சியே இல்லாமல் புதுமை படைப்பது
    ராணுவத்திற்கு ஐந்து பைசா கொடுக்காமல் , ஏழைகளுக்கு விருந்து படைப்பது
    அனைத்தும் கம்மியோனிஸத்தில் மட்டுமே சாத்தியம்!

    வழுக்கை தலையில் முடி வளர மருந்து விளம்பரம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல 🙂

    • //விபத்தே நேராத தளவாடத்தை உற்பத்தி செய்வது//

      முதலாளித்துவ பிள்ளையான லாபவெறி மற்றும் அதன் பிள்ளைகளான லஞ்சம் ஊழல் போன்றவையே இது போன்ற இந்திய இராணுவ சந்தி சிரிப்புகளுக்கு காரணமாவது அடிக்கடி வெளிப்பட்டும், உடனே ஆஜராகி கம்யூனிசத்தை பிராண்டவேண்டியது. அவை இல்லாத கம்யூனிச சமூகத்தில் விபத்தே நடக்காத தளவாடம் சாத்தியமா தெரியவில்லை ஆனால் இந்தளவு ஓட்டை கப்பல்களும் டாங்கிகளும் உற்பத்தி செய்யபடாது.

      //நஷ்டமே ஆகாத கம்பெனி நடத்துவது//
      லாப நட்டம் என்றவையே கம்யூனிச சமூகத்தில் அர்த்தம் இழக்கும் போது, உங்கள் கருத்தும் இப்போது அர்த்தம் இழக்கிறது.

      //ஆராய்சியே இல்லாமல் புதுமை படைப்பது//
      என்ன பேச்சு இது? சோவியத் ஆராய்ச்சி பண்ணாமலா கிட்டத்தட்ட எல்லா ஆரம்ப விண்வெளி சாதனைகளை (முதல் செய்மதி,முதல் விலங்கு,முதல் மனிதன்..etc) செய்தது?? ஆராய்ச்சி பண்ணாமலா அணுபிணைவு ரியாக்டர் செய்தார்கள், அராய்ச்சி பண்ணாமலா இரு சோவியத்கள் லேசருக்கு நோபல் பரிசு பெற்றனர்? உடைக்கபடுவத்துள் சிறிது காலத்துக்குள் இந்தளவு புதுமைகளை படைத்தது.

      //ராணுவத்திற்கு ஐந்து பைசா கொடுக்காமல் , ஏழைகளுக்கு விருந்து படைப்பது//
      ஒரு கம்யூனிச சமூகத்தில் மக்களுக்கும் இராணுவத்துக்கும் வித்தியாசம் மிக மிக நுண்ணியது (செம்படை போல) இந்த நிலையில் யாரிடம் புடுங்கி யாரிடம் கொடுப்பது என நீங்கள் தான் புதிதாக ஐடியா கொடுக்கணும்.

        • அமெரிக்காவில் எடுத்ததட்கெல்லாம் பள்ளி சிறுவர் முதல்கொண்டு வளர்ந்தவர்வரை கம்யூனிசசமூகம் ஏதோ எட்ட முடியாத கனவுலகம்,போகபூமி (அவர்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் Dreamland, Utopian ) என்று அவநம்பிக்கை விதைப்பதை அப்படியே இங்கு செய்து பார்க்கிரீர்போல!! செல்லாது செல்லாது .

    • இராமன் அய்யா,

      சொந்த காசே போடாமல் பொது மக்களோட பணத்தில் ஜல்சா பாடும் முதலாளிகளை பத்தி இந்த கட்டுரை எதுவும் தப்பா சொல்லலையே. அப்புறம் ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம் வருதுனே தெர்ல.

      ஒருவேளை ரசியானு ஒருவார்த்தை வருது அதனால தானா? ரசியா கம்யூனிச நாடு இல்லைன்னு உங்களோட செவிட்டு காதில் ஊதி பல நாட்கள் ஆகுது.

      வழுக்கை தலையில முடி வளராதுனு தெருஞ்சு தானே உங்க முதலாளித்துவம் கோடிக்கணக்கில் அதுக்கு விளம்பரம் செய்யுது. அதையே நீங்க ஒப்புதல் வாக்குமூலமாக போடுறீங்களே மை லார்ட்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க