முகப்புபார்வைவினவு பார்வைநடிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

நடிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

-

டிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

 • வினவு தளம் சார்பாக தயாரிக்கப்படும் குறும்படங்கள், நகலடி (ஸ்பூஃப்) மற்றும் பாடல் வீடியோக்களில் நடிப்பதற்கு தயாரா?
 • சமூக அக்கறையுடன் நடத்தப்படும் வினவு தளத்தின் வீடியோக்களில் ஊதியமின்றி தன்னார்வத்தோடு நடிக்க விரும்புகிறீர்களா?

உங்களைத்தான் தேடுகிறோம்!

மிமிக்ரி – நடிப்பு – நடனம் துறைகளில் திறமையும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தோள் கொடுங்கள்!
இதுவரை நடிப்பு அனுபவமில்லாமல் இருப்பினும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நடிப்பதற்கு விருப்பமும், அர்ப்பணிப்புமே தேவை.
தொழில்முறை அனுபவம் உள்ள நண்பர்களும் தன்னார்வத்தோடு நமது படைப்புகளில் பங்கேற்கலாம்.

தெரிவு செய்யப்படும் (புதியவர்கள்) நண்பர்களுக்கு, நடிப்பு பயிற்சி பட்டறை நடத்துவதில் அனுபவம் உள்ள எமது தோழர் பயிற்சி கொடுப்பார். நடிப்பில் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக பொருத்தமான பாத்திரங்களில் நடிக்கலாம்.
வாருங்கள்,தோள் கொடுங்கள்.

தற்போது சென்னையில் உள்ள நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். எதிர்காலத்தில் பிற மாவட்டங்களுக்கும் வருகிறோம்.
கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
97100 82506

நன்றி

 1. நல்ல உள்வாங்கும் முயற்சி. வெறுமனே தொலைகாட்சி அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏங்காமல் குறிப்பிட்ட திறமை உள்ளவர்கள் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் வினவு தள தயாரிப்புக்களுக்கு முன்வந்து பங்களிப்பு செய்ய வேண்டும். யார் கண்டது சேனல்களில் போலி ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட கைதட்டல்களை விட உங்கள் திறமைகளை உண்மையானதொரு நோக்கத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பமும் அதே நேரம் உண்மையான மனித சமூக முன்னேற்றதிட்கு பாடுபடும் தோழர்களின் நட்பும் கிடைக்க பெறும்.

 2. அண்ணே நான் வெளிநாட்டில் இருக்கிறேன்
  உண்மையில் ஆர்வமாக இருக்கிறது நடிக்க

  • ஏதாவது விடுமுறைக்கு வரும் போது வாருங்கள்! ஆர்வக் கோளாறில் ஃபிளைட் டிக்கெட் எடுத்துவிட்டு வந்துவிடாதீர்கள் 😆

   • ஆர்வக் கோளாறில் வந்து விடாதீர்கள் ,என்று எழுதினாலும் வாயெல்லாம் பல்லாக இருக்கும் படத்தை வரைந்து இருப்பதன் மூலம் இங்கு ஆர்வக்கோளாறு யாருக்கு என்பது நன்றாக புரிகிறது

 3. நான் சென்னை தான் …
  பைக் ஓட்டத்தெரியாது பரவாயில்லை யா தோழர் ????

 4. அரசியலின் அடித்தளம் நடிப்புதான் என்பதை உணர்ந்து கொண்ட வினவுக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க