Thursday, May 13, 2021
முகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது பிளாண்ட்டின் கட்டுமான வேலைகளை எதிர்த்து அ.குமரட்டியாபுரம் பொதுமக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. 1996 முதல் இயங்கிவரும் இந்த ஆலையில் வெளியேறும் நச்சு வாயுக்களாலும், நிலத்திற்குள் செலுத்தப்படும் அமிலக்கழிவுகளாலும் தூத்துக்குடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட்டை அடுத்துள்ள அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள் நேரடியாக தன் ஊர் அழிவதைக்கண்டு பொறுக்கமுடியாமல் குமுறி வெடித்துள்ளனர். இங்கு 40 வயதான சண்முகத்தாய் கேன்சருக்கு பலி! கருப்பை புற்றுநோயும் பரவுகிறது! ஆலையின் சுற்றுச்சுவர் வரை சென்று ஆடுமேய்த்து வந்த மாடசாமியின் கண் குருடானது!

கருவுரும் பெண்களுக்கு 3 மாதத்திலேயே கருச்சிதைவு தொடர்கதையாகிவிட்டது; தோலில் ஒவ்வாமை; 15 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் தந்த கிணறுகளில் இன்று அமிலநீர்தான் சுரக்கின்றன! இதை குடிக்க முடியாது. குடித்தால் தலைசுற்றும், மயக்கம் வரும். தண்ணீரை விட அடர்த்தியான இந்நீரை கால்நடைகள் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அவை இறக்கின்றன.

இரவில்தான் அதிக அளவு உற்பத்தியும் நடக்கிறது. சல்பர் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வருடத்திற்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்யும் பிளாண்ட்- 1 வாரி வழங்கியவை!  இந்நிலையில் 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் இலக்குடன் பிளாண்ட் – 2 -ன் கட்டுமானத்தை எப்படி அனுமதிப்பது? உயிரைக்கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர் கிராம மக்கள்.

“ஆளுக்கொரு புதுவீடு, 5 லட்சம் பணம்” என்று ஆலை நிர்வாகம் தனது ஆட்களை வைத்து பஞ்சாயத்தும் பேசியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஊரா? – ஊரை அழிக்க கம்பெனி போடும் பிச்சையா? எதுமுக்கியம் என்பதில் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்  தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்தனர்.

ஆலை விரிவாக்கப்பணிகளை தடுக்க கோரி 05.02.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். மத்திய அரசால் தேசிய அளவில் சிறந்த நிறுவனம் என்று பல துறைகளில் பரிசளிக்கப்படும் ஸ்டெர்லைட்டை மூட அரசிடமே மனு தருவது தீர்வைத் தருமா? காற்றும், நிலமும், நிலத்தடி நீரும் கெட்டு, கேன்சரும் சிறுநீரக செயலிழப்பும் ஆஸ்துமாவும் தோல் நோய்களும் பெருகியுள்ள தூத்துக்குடிக்கு தூய்மையான நகரம் என்ற விருது தந்து அழகுபார்க்கிறது அரசு! எனினும் போராட்டத்தை முறைப்படி அரசுக்கு மனுகொடுத்து தொடங்கினர் மக்கள்.

06.02.18-ல் ஸ்டெர்லைட் கட்டுமான வேலை நடக்கின்ற இரண்டாம் வாயிலில் முற்றுகை. நிலத்தடி நீரை விசமாக்கிவரும் ஸ்டெர்லைட் தரும் லாரி குடிநீரை வாங்க மறுத்தனர். 07.02.18-ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து DSP யின் மிரட்டல் “கோர்ட்டுக்கு போங்கள்.இப்படி எல்லாம் கேட்டில் நிற்கக்கூடாது. அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டுருவோம்”. ஊர்மக்களோ “எங்க குடிதண்ணில பாலிடால கலந்துவுட்டுருங்க. ஊர் மொத்தமா செத்துடுறோம்.நீங்கல்லாம் கம்பெனிக்கு காவலா நின்னுக்கங்க” என்று முகத்தில் அறையும்படி சொல்லியுள்ளனர்.

08.02.18-ல் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். “போராட்டம் முடியும்வரை ஊரிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ” ஊர்சார்பாக பள்ளிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.  “போராட்டம் என்று வந்து பெட்டி வாங்கிகொண்டு நம்மை ஏமாற்றியதே கட்சிகளின் வரலாறு! நாம் இனி கட்சிகளின் பின் செல்லக்கூடாது. ஊர்தான் சுயமாக போராடனும். ஊர்தான் தலைமை தாங்கனும். எந்த முடிவாக இருந்தாலும் ஊர்க்கூட்டம் மூலம்தான் எடுப்பது” என்று முடிவெடுத்தனர்.

தலைக்கு 500 ரூபாய் என்று போராட்ட நிதி திரட்டினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டனர். மறுத்தது ஸ்டெர்லைட்டின் ஏ(கா)வல்துறை! 12.02.18 அன்று 2மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதையே வாய்ப்பாக்கி மையவாடி பேருந்து நிறுத்தம் எதிரில் உண்ணாவிரதத்தை நடத்தினர் கிராம மக்கள். மாலை 5.00 மணி ஆகியும் கலையாத உறுதியை கண்டு கொதித்த அரசு பந்தல் போட்டவரை மிரட்டி பிரிக்க வைத்தது. மைக்செட்காரரை மிரட்டி எடுக்க வைத்தது.

ஓரமாக அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களை கலைத்து சாலைக்கு விரட்டியது போலீசு. MGRபூங்கா வாயிலை ஒட்டி அமர்ந்து விட்டனர் மக்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கொட்டும் பனியில் சாலையோரம் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும் அவர்களுடன் இரவில் தங்கினர்.

 

13.02.18 அன்று காலை போராட்டம் தொடர் முழக்க ஆர்ப்பாட்ட வடிவத்தை எட்டியது. பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகள் சமூக அக்கறை கொண்டவர்கள் வர ஆரம்பித்தனர். கல்லூரி மாணவர்களும் வந்து பார்த்தனர். எங்கே இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாகி விடுமோ என்ற அச்சம் ஸ்டெர்லைட்டுக்கு உண்டு. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இக்கம்பெனி தந்த உணவை திருப்பி அனுப்பியதும், அடுத்த போராட்டம் உனக்கெதிராகத்தான் இருக்கும் என்று எச்சரித்ததும் மறந்திருக்குமா? மாணவர்கள் வந்துவிடக்கூடாது என்று கல்லூரிகளில் கண்காணித்தது மாவட்ட நிர்வாகம்.

மதியம் 11 மணியளவில் போராடியவர்களை தாக்கி கைது செய்ய ஆரம்பித்தது அரசு. இதில் ஒரு மாணவன் உட்பட மூவர் காக்கிகளால் அடிபட்டு சாலையில் சரிந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஊர்மக்களை இரண்டு மண்டபத்தில் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து  அடைத்தனர்.

வாழ்வுரிமைக்காக அமைதியாக எதிர்ப்பை தெரிவித்து போராடிய தங்களை அடிக்கும் போலீசை வெறுப்புடன் பார்த்தனர் மக்கள். அவர்கள் தந்த உணவையும் தொடவில்லை. இத்தகவல் தெரிந்தவுடன் குழந்தைகளுக்கு மட்டும் வெளியிலிருந்து உணவு தயாரித்து தந்தனர் சமூக ஆர்வலர்கள்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களை பார்க்கவிடாதது மட்டுமல்ல, வெளியேயும் நிற்கக்கூடாது என்று கலைத்தனர். அருகிலுள்ள தெருவில் சற்று தள்ளியிருந்த ஒரு கட்டிடத்தின் படியில் அமர்ந்தவர்களிடம் மீடியாவினர் பேட்டி எடுக்க ஆரம்பிக்கவே ASP தலைமையிலான கடமை தவறா காவலர்கள் அங்கும் ஓடிவந்து தடுத்தனர்.

“இங்கே உட்காரக்கூடாது. ரோட்டில் பேட்டி தர காவல்துறையிடம் அனுமதி வாங்கனும். இல்லை பத்திரிக்கை ஆபீஸ்ல போய் கொடுங்க” என்று தன்  ‘கடமையை’ செய்தார் ASP.   “போராட்டத்தை ஆதரிப்பதும், கூடி நிற்பதும், பேட்டி கொடுப்பதும் எங்கள் உரிமை. நீங்கள் தடுக்க முடியாது” என்று  மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எதிர்த்து பேசவே  போலீசார் பின்வாங்கினர். எனினும் ஊடக நண்பர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவில்லை. எதற்கு வம்பு என்பதைபோல் PRPC தோழர் அரிராகவனை அங்கிருந்து மேலும் தள்ளி அழைத்துச்சென்று பேட்டி எடுத்தனர்.

அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்ட மண்டபத்தில் ஆய்வாளர் ஹரிகரனோ  “உங்களை கோவை, சேலம், வேலூர்னு கொண்டுபோய் ஜெயில்ல போடப்போறோம்.  ஒழுங்கா நாங்க சொல்றத கேளுங்க” என்றிருக்கிறார்.  தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளரான இவரின் மனைவியோ “இவளுங்க பேசுனதையே திரும்பதிரும்ப சொல்றாளுங்க. நம்ம பேச்ச கேக்கறமாதிரி தெரியல்ல” என்று ஆத்திரமடைந்துள்ளார். “டெல்லி திகாருக்கே அனுப்பினாலும் சரி, போராட்டம் தொடரும்” என்று பெண்கள் பதிலடி தந்துள்ளனர்.

இரவு 8 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு என்று 10 பேரை தனியாக அழைத்துச்சென்று அவர்களை தெற்கு காவல் நிலையத்தில் வைத்தனர். நள்ளிரவில் 9 பேரை ரிமாண்ட் செய்தனர். மறுபுறம் மண்டபத்தில் இருந்தவர்களை போகும்படி அறிவித்தனர். எங்களையும் ரிமாண்ட் செய் அல்லது அவர்களையும் வெளியே விடு என்று அறிவித்தனர் ஊர்மக்கள்.

ஆண்கள் வீட்டிற்கு போய்விட்டனர் என்று பெண்களிடமும்,பெண்கள் போய் விட்டனர் என்று ஆண்களிடமும் கூறி சதி செய்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட தனிநபர்களாக உடன் கைதான சிலர்  வெளியே வந்துவிடவே, கிராம மக்களும் குழப்பத்திற்குள்ளாகி வெளிவந்தனர். வெளிப்படையாக அரசு எந்திரம் ஸ்டெர்லைட் பக்கம் நிற்கும் சூழலில், கம்பெனி வேண்டும் என்று சுய உதவிக்குழு மூலம் முத்தையாபுரம் பெண்களை கலெக்டரிடம் மனுகொடுக்க வைத்துள்ள நிலையில், கம்பெனி கையாட்கள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்கவும் கூடும். இந்த முதல்சுற்று அனுபவத்தை கணக்கிலெடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளனர் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்.

அரசிடம் கெஞ்சியோ மனுகொடுத்தோ கார்ப்பரேட்டுகளைக் விரட்ட முடியாது! அனைத்து கிராமங்களும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து விரட்டியாக வேண்டும்! இணைந்து போராட தயாராக வேண்டும் தூத்துக்குடியின் இளைஞர் படை!

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.

 

  1. ஆலையின் சுற்றுச்சுவர் வரை சென்று ஆடுமேய்த்து வந்த மாடசாமியின் கண் குருடானது, கருவுரும் பெண்களுக்கு 3 மாதத்திலேயே கருச்சிதைவு தொடர்கதையாகிவிட்டது, 0 வயதான சண்முகத்தாய் கேன்சருக்கு பலி ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒன்றும் ஆவதில்லையே ஏன் ?

  2. அதானே மணிகண்டன் கேட்பதும் சரி அதானே? ஆய்வு செய்யாமல் எப்படி? மணிகண்டனை ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளே பத்து நாள் ,சுற்றுச்சுவருக்கு வெளியே பத்து நாட்கள் என்று கட்டிப்போட்டு அப்புறம் அவரின் இதயம், நுரையீரல் கிட்னி, கல்லிரல்,விந்து அணுக்கள் என்று பரிசோதனை செய்தால் வரும் மெடிகல் ரிசட் சொல்லபோவுது உண்மைய…!

    மணிகண்டன் உங்களை கூட்பிடராக அந்த ஊரு மக்கா…. சும்மா சின்ன ஆராய்ச்சி தான்… ப்ரீ தான்…வாங்கோ மணி…!

    • வழக்கம் போல் உங்களை போன்றவர்களின் ஆதாரமற்ற புரளி தான் இது.

      கேன்சர் வியாதி இப்போது ஆலைகள் இல்லாத இடங்களிலும் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனாலும் உங்களை போன்ற ஆட்கள் தூத்துக்குடியில் கேன்சர் வந்தால் அதை ஸ்டெர்லைட் தலையில் கட்டு, கல்பாக்கம் கூடங்குளத்தில் கேன்சர் வந்தால் அங்கே உள்ள அணு மின் நிலையத்தின் தலையில் கட்டு என்பது போல் ஆதாரம் இல்லாத பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

      • சரி மணி,
        அப்ப குமாரோட challenge ஐ ஏத்துக்க வேண்டியதுதானே நாணயத்தோட.

      • கௌவுக்கும் கௌபாய்க்கும் வேண்டுமென்றால் கேன்சர் ஒரே வகை. ஆனால் மருத்துவ ரீதியில் அதுல ஏகப்பட்ட வகைகள் இருக்கு. இடத்துக்கும் உணவுக்கும் காத்துக்கும் தண்ணிக்கும் கூட சுருக்கமா சொன்னா சூழ்நிலைக்கு தக்கப்படி கேன்சர் வரும்.

        புனித கங்கை தண்ணிய குடிச்சா உடனே கேன்சர் வருமுன்னு அறிஞர்கள் சொல்றாங்க..படிச்சு பாருங்க என்ன கேன்சர் வருமுன்னு.

        ஆனா ஒங்களுக்கு ஒன்னும் பிரிச்சினி இல்லை மாம்ஸ்….உங்களுக்கு ஒங்க கோமாதாவோட சர்வரோகநிவாரணி இருக்கு…ஒண்ணுக்க புடுச்சு குடிச்சா காயச்ச காமலைல இருந்து கேன்சர் வரைக்கும் எல்லாம் குணமாகும்.

      • மணிகண்டன்.., இந்த அளவுக்கு உங்களை கார்த்திகேயனும், செல்வமும் இன்சல்ட் செய்வாங்க என்று தெரிந்து இருந்தால் என்னுடைய பின்னுட்டத்தையே பதிவு செய்து இருக்க மாட்டேன்… சரி இப்ப நிலைமை கைய விட்டு போயிடுச்சி….என்ன செய்ய?வேறவழி இல்ல… நீங்க சவாலை ஏத்துகிட்டு தான் ஆவணும்… பத்தும் பத்தும் இருபது நாட்களுக்கு ஓசி சாப்பாடு உங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளும் புறமும்…மைரோபாயாலிசி மற்றும் பயோ டேக் படிப்புகளில் எலிக்கு செய்வது போன்று சின்ன சின்ன சோதனைகளை உங்க கிட்டேயும் செய்யவேண்டி இருக்கு…பரிசோதனை முடிவுகளில் எந்த எந்த ஆர்கனில் என்ன என்ன கேன்சர் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்…

        குறிப்பு: என் நண்பன் மைரோபயாளிஜிச்டு அவன் HOD வேற அந்த துறையில் முயலின் இதயத்துக்கு ஊசி மூலம் நோய்கிருமிகளை ஏற்றி அப்புறம் அந்த முயலுக்கு ஆண்டி பயாட்டிக் கொடுத்து கிருமி தோற்று குறையுதா என்று சோதனை செய்வான் பாருங்க… அதே போன்ற சில சோதனைகளும் இருக்கு…. வாங்க வாங்க சிக்கிரம் வாங்க மணி…!

        கமான் மணி கமான்…, ஸ்டெர்லைட் ஆலை தன் கற்பை (சுற்று சூழல் கற்பை) நிருபிக்க உங்களை தான் நம்பிக்கிட்டு இருக்கு….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க