Wednesday, May 12, 2021
முகப்பு செய்தி காவிரி : முதுகில் குத்திய மோடி அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டங்கள் !

காவிரி : முதுகில் குத்திய மோடி அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டங்கள் !

-

காவிரியில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அநீதியான உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பை எதிர்த்து. “காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமைக்கு நெஞ்சில் குத்தியது உச்சநீதி மன்றம்! முதுகில் குத்தியது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி யின் மோடி அரசு! ” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகில், மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள் சங்கர், முருகேசன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, பு.ஜ.தொ.மு சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிப் பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், “விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ் நிலையை நேரில் கண்டால்.. அவர்களின் துயரம் புரிந்தால் இந்த தீர்ப்பின் வஞ்ஜகம் புரியும்.

14.75 TMC தண்ணீரை குறைக்கப்பட்டது என்பது ஒரு லட்சம் ஏக்கரில் நீ பயிரிடாதே என்று பொருள். நிலத்தடி நீர் பயன்படுத்துங்றாங்க. ஆத்துல தண்ணி வந்தால்தான் நிலத்தடி நீர் மட்டம் வரும். இந்த உண்மையை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு உள்ளது. அடுத்து, தண்ணீர் தேசிய சொத்து, யாருக்கும் உரிமை கொண்டாட முடியாது என்கிறது, தீர்ப்பு.

இன்றைக்கு யதார்த்தத்துல தேசிய சொத்துன்னு சொல்ற பேங்க், ரயில்வே, பொதுத் துறை அவ்வளவும் அம்பானி, அதானி தரகு முதலாளி கையில போய்கிட்டேயிருக்கு. தண்ணீர் உரிமை கொண்டாட முடியாதுங்குறது சரி கிடையாது. காக்கா, குருவி, ஆடு, மாடுக்கும் தண்ணில உரிமையிருக்கு. தண்ணீரை காசுக்கு விக்கிற கார்ப்பரேட் கம்பெனிய இந்த நீதிமன்றம் தடை போடல. தண்ணிய அவர்களின் வியாபார பொருளாக நீதிபதிகள் பார்க்கிறார்கள்.

575 TMC தண்ணி அடுத்த 100 வருசத்துல 177 TMC யாக குறைந்து போச்சி. கர்னாடகவுல நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்காம், 97% குடிக்கிற தகுதி உள்ள தண்ணியாம். இந்த விவரங்கள் கணக்கில் எடுக்காம இந்த அரசு அதிகார கட்டமைப்பு எழுதி தந்த தீர்பை அப்படியே வாசித்துவிட்டார்கள் நீதிபதிகள். காவிரி மேலாண்மை வாரியம் விசயத்துல அமைக்காம இருக்கும் RSS மோடி அரசாங்கத்தை நீதிமன்றம் என்ன செய்யப் போவுது? கர்னாடகவுல மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுங்குறாங்க.

அங்க காவிரி நதி நீர் என்பது ஓட்டு சீட்டு அரசியலின் துருப்பு சீட்டு ஆக்கிட்டாங்க. நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வாரியம் இருக்கு. காவிரிக்கு முடியாதுன்னா சரியா? பார்ப்பன எதிர்ப்பு தமிழ் நாட்டின் மீது மோடி கும்பலுக்கு எரிச்சல் இருக்கு என்பது வெளிப்படைய தெரியுது.

பண மதிப்பு நீக்கம், GST ஆதார் இவைகளை திணித்த அரசு அதிகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம இருக்குது என்றால்… இந்த அரசின் செயல்பாடு யாருக்கானது? அந்த பக்கம், RSS மோடி அரசாங்கம் தன்னை ஜெயிக்க வச்ச தரகு முதலாளிகள தப்பிக்கவைக்கவே நேரம் சரியாக இருக்கு. இது இவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்கவே மாட்டார்கள். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாட்டாங்க. ஏன்னா மக்கள் சுயகாலில் நின்று பொழைக்கக் கூடாதுங்றது, மத்திய அரசின் கொள்கை.

நில வளங்களை கொள்ளையடிக்க பாரத் மாலா -ன்னு திட்டம் போட்டிருக்கு அரசு. நதிகள் தேசியமயம், நீர் பயணமுன்னு புளுகுறாங்க. மொத்ததில் தீர்ப்பு உள் நோக்கம் கொண்டது. இந்த அரசு கட்டமைப்பு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி மீத்தேன் , ஹைட்ரோ கார்பன், நிலக்கரிய அள்ளி கிட்டு போக சாகர் மாலா திட்டம் போட்டு வச்சிருக்கு. அதுக்கு ஏற்ற தீர்ப்பு வாசித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் நாம் வாழனுமுன்னா, நாம் போராடணும். தமிழகம் எழுந்து நிக்கணும்.
இது சாப்பாடு விவகாரம். பட்டினியில தள்ளி மக்களை கொன்றுவிட அரசு தயாராக இருக்கு. பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர், உச்சநீதிமன்றம் ஆகிய அனைத்து அதிகரா உறுப்புகளும் தமிழகத்திற்கு எதிரானவைகளாக உள்ளது.

எனவே, மத்திய அரசின் அதிகாரத்தை ஏற்க மறுத்து தமிழகத்தின் தன்னுரிமைக்காக நாம் போராடுவதோடு மட்டுமின்றி இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் அதிகாரமாக எழுந்து மாற்றுக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வது ஒன்றே வழியாகும் என்பதை உணரவேண்டும்” என்பதை அறைகூவலாக அறிவித்துப்பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்,
தொடர்புக்கு : 97880 11784.

*****

ச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பை கண்டித்து புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் சார்பாக பொருளாளர் தோழர். சாந்தகுமார் தலைமையில் 40 க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுக்கை இட்டனர்.

முற்றுகை இட்ட தோழர்களை 28 பேரை கைது செய்து மாவட்ட ஆட்சியர் கோர்டில் நிறுத்தி நிபந்தனை ஜாமினில் அன்று மலையில் விடுதலை செய்தனர். அதாவது அந்த குறிப்பிட்ட டிவிசனில் 6 மாதத்திற்கு அனுமதி பெறாமல் எதும் நடத்த கூடாது என்றும், மீறினால் ஒவ்வொரு நபருக்கும் 25,000 தண்டம் கட்டுவது மற்றும் சிறை தண்டனை என்றும், ஒவ்வொரு மாதமும் கோர்டில் ஆஜராகி எந்த மேற்கண்ட குற்றம் ஏதும் செய்ய வில்லை என்று பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

மக்களின் உரிமைகளுக்காக போராடும் அரசியல் இயக்கங்களை சமூக விரோதிகளைப் போல நடத்தும் இவ்வாறான நடவடிக்கை மக்களுக்கு விரோதமனது இந்த அரசு என்பதை மக்கள் உணர வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

*****

காவிரி நீரில் தமிழகத்தை வஞ்சிக்கும் தீர்ப்பை கண்டித்து விருத்தாசலம் BSNL அலுவலகத்தை 17.02.2018 அன்று மக்கள்அதிகாரம் தோழர்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க