Friday, July 10, 2020
முகப்பு புதிய ஜனநாயகம் தந்தி டி.வி - ஆர்.எஸ்.எஸ்-ன் தொந்தி டி.வி !

தந்தி டி.வி – ஆர்.எஸ்.எஸ்-ன் தொந்தி டி.வி !

-

ண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.

வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்த ஆய்வாளர் நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”ஆண்டாளைத் தேவதாசி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, என்ன சூழலில் அவ்வாறு கூறியுள்ளீர்கள்?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.

அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

உடனே ஆண்டாளைத் தேவதாசி என்று சொல்வதற்கு முதன்மை ஆதாரம், Primary evidence ஏதும் இல்லை என்று நாராயணனே ஒப்புக்கொண்டுவிட்டது போல தந்தி டி.வி. பிரகடனம் செய்கிறது. நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்.

இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.

  * * *

இனி தந்தி டி.வி. எழுப்பிய பிரைமரி எவிடென்ஸ் விவகாரத்துக்கு வருவோம். பொதுவாக ஆய்வுக்குரிய காலத்தைச் சார்ந்த நூல், சுவடி, கல்வெட்டு போன்றவற்றை பிரமைரி சோர்ஸ் என்று கூறுவர்.

”ஆண்டாள் தேவதாசி என்ற முடிவுக்கு வருவதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா?” என்று கேட்கிறார் அசோக வர்ஷிணி. ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ  பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? இதையெல்லாம் ஜீயரிடம் தந்தி டி.வி. கேட்டதுண்டா?

எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆண்டாள் கதை முதல் பசுமாட்டு மூத்திரத்தைக் குடிப்பது வரை அனைத்தும் நம்பிக்கை என்பார்கள். ”சரி, எதையோ குடித்து நாசமாய்ப் போ” என்று நாம் வேண்டுமானால் அவாளை விட்டுவிடலாம். ஆனால், அவாள் நம்மை விடுவதில்லை. ”நீ குடிக்காமல் இருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது” என்கிறார்கள்.


வேடிக்கையல்ல, நடப்பது அதுதான். ”நீ சூத்திரன் – தாசி மகன் என்பது எங்கள் நம்பிக்கை. நீ சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு, சாமியே செத்து விடும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்கள். இந்த நம்பிக்கையை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. விளைவு – அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.

”40 ஏக்கர் நடராசர் கோயிலும் அதன் சொத்துகளும் எங்களுடையதென்பது எம் நம்பிக்கை” என்றார்கள் தீட்சிதர்கள். அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் சொத்தான கோயிலை அரசிடமிருந்து பிடுங்கி தீட்சிதனுக்கே எழுதிக்கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்றார்கள். மூன்றில் இரண்டு பங்கு மசூதியைக் கொடுக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

அதாவது அவாளுடைய நம்பிக்கையை அவாளுடன் வைத்துக் கொள்வதில்லை. அதை நம் மீதும் ஏவுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. ஆண்டாளை அவர்கள் என்னவாக வேண்டுமானால் கருதிக்கொள்ளட்டும். அவர்களுடைய கருத்துக்கு நாம் அடங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் போடும் உத்தரவு.

நாச்சியார் திருமொழியின் வரிகளில் சொட்டுவது பக்திரசம் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த வரிகளுக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடிச் சொல்ல முயன்றாலே, நீங்கள் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்திய குற்றத்துக்கு ஆளாவீர்கள்.

இதைத்தான் புதிய தலைமுறை டி.வி. பேட்டியில் எஸ்.வி. சேகர் செந்திலிடம் சொல்கிறார். ”இந்தப் பேனா தெய்வம் என்று சொன்னால், இது தெய்வம். இதை விமரிசிக்க உனக்கு அருகதை கிடையாது. இது பேனா, இதுக்குள்ள இங்க் இருக்கு என்ற வாதமே வேண்டாம்” என்கிறார் எஸ்.வி.சேகர்.

டி.கே. நாராயணண்

அதாவது, ஆண்டாள் பிராமணரின் பெண், கோமியம் புனிதம் என்பதெல்லாம் அவாள் நம்பிக்கைகள்.  ஒருவேளை, மாட்டு மூத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதை லேப் சர்டிபிகேட், கல்வெட்டு ஆதாரம் உள்ளிட்ட பிரைமரி எவிடென்ஸ்களுடன் அசோக வர்ஷிணியிடம் சமர்ப்பித்தாலும், நீங்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

பாண்டே வருவார். ”நீங்க சொல்றா மாதிரி இது மாட்டு மூத்திரமாகவே இருந்தாலும், அதை நீங்க மனசில வச்சிக்கலாம் சார். இப்படி மேடையில பேசுவதன் மூலமா இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? செக்சன் 153-அ பிரிவுல இது தண்டனைக்குரிய குற்றம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.

எனவே, அவாளுடைய நம்பிக்கையை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில், அவாளுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் நீங்கள் எவிடென்ஸ் தரவேண்டும். அதே நேரத்தில உங்களுடைய எவிடென்ஸ் அவாளுடைய உணர்வைப் புண்படுத்தாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஜீயர் அல்லது சின்ன பெரியவாள் போன்ற அறிஞர்களை ரிசர்ச் கைடாக வைத்துக் கொண்டால் தண்டனையிலிருந்து நாம் தப்பலாம். உண்மையிலிருந்து அவாள் தப்புவார்கள்.

   – தொரட்டி

* * *

பெட்டிச் செய்தி

“குலசேகர ஆழ்வார் மகள் தேவதாசியாம்!
பெரியாழ்வார் மகள் ஆண்டாள் தாயாராம்!!”

தந்தி டி.வி.யின் புலனாய்வுப் புலிகளின் காமெரா, வைரமுத்து மேற்கோள் காட்டிய எம்.ஜி.எஸ். நாராயணனின் கட்டுரையில் ஆண்டாளைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளை வட்டமிட்டுக் காட்டுகிறது. அந்த வட்டத்திற்குள் இருக்கும் மற்ற வரிகள் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் கவனிக்கவில்லை போலும்!

”பக்தி இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கை தேவதாசிகளை ஊக்குவித்ததாகும். கோயிலுக்கு மக்களின் செல்வாக்கைக் கூட்டுவதில் தேவதாசிகளின் பாடலும் அழகும் நடனமும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு தேவதாசியுடன் தொடர்பு இருந்தது. திருக்கைலாயத்தின் வீதிகளில் ஊர்வலம் சென்றபோது தேவதாசிகள் சிவபெருமானுக்கு அளித்த வரவேற்பைத் தான் கண்டதாக சேரமான் பெருமாள் குறிப்பிடுகிறார். மேலும், ஆண்டாளும் ஸ்ரீரங்கம் கோயிலில் வாழ்ந்து மறைந்த ஒரு தேவதாசிதான். குலசேகர ஆழ்வார் தன் மகள் நிலாவைத் தேவதாசியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளித்தார் என்றொரு மரபும் உள்ளது. அவள் சேரகுல நாச்சியார் என்றழைக்கப்பட்டு, அவள் பெயரில் இக்கோயிலில் ஒரு சந்நிதியும் இருக்கிறது” என்று தந்தி டி.வி.யின் காமெரா காட்டுகின்ற நாராயணனின் கட்டுரை குறிப்பிடுகிறது.

பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்துவதற்கு எப்பேர்ப்பட்ட அறிவாயுதங்களைப் பார்ப்பனியம் பயன்படுத்தியிருக்கிறது என்பது இதைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது. அது ஒருபுறமிருக்கட்டும்.

பெரியாழ்வார் வளர்த்த மகள் ஆண்டாளுக்காகப் பொங்கிய ஜீயர், எச்.ராஜா போன்றோரின் ஹிந்து உணர்வு, அடுத்த வரியிலேயே குலசேகராழ்வார் தனது சொந்த மகளைத் தேவதாசியாக அரங்கனுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறதே, அதற்காக ஏன் பொங்கவில்லை? குலசேகராழ்வார் தன் மகளை அரங்கனுக்கு கொடுத்தால், அவளைத் தேவதாசி என்று அழைக்கலாம். ஆனால், பெரியாழ்வார் தன் மகளைக் கொடுத்தால், அப்படிச் சொல்லக்கூடாதா? குலசேகராழ்வாரின் மகள் நாச்சியார் ஆக இருக்கும்போது, பெரியாழ்வாரின் மகள் மட்டும் தாயார் ஆகிவிடுவது எப்படி?

இதற்குப் பெயர் ஹிந்து உணர்வா, சாதி உணர்வா? ஆண்டாள் விவகாரத்தில் தலைவிரித்தாடுவது பார்ப்பன வெறிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன பிரைமரி எவிடென்ஸ் வேண்டும்?

***

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அழிச்சாட்டியம் செய்ய இன்னுமா வரல ஹ்ந்துதுவா மணிகண்டன்,பார்பன அடிமை ரெபெக்கா,மொக்கை ராமன் வவையராக்கள்? காத்துகிட்டு தான் இருக்கேன். பிட்டு கிழவி சிவனுக்கு பெரம்படி கொடுத்து வேலை வாங்கியது போல இவர்களிடமும் விவாத தர்கத்தால் வேலை வாங்க காத்துகிட்டு தான் இருக்கேன். ஓ ரங்கராஜனை மறந்துட்டேனே. அட்வகேட் ரங்காவை மறந்துட்டேனே.வாங்கோ வைணவரே.

 2. இரண்டுக்கும் வித்தியாசம் : ” பெரிய வீடு — சின்ன வீடு ” என்பதாக இருக்குமோ ..அவாள் எண்ணத்தில் … ? அதனால் தானோ பெயரில் இந்த பாகுபாடு …?

 3. வினவின் தந்தி டி.வி கட்டுரையில் உள்ள திருகு வேலைகளை பார்போம். நாராயணன் அவருடனான பேட்டியில், அவர் மிக தெளிவாக தான் பதில் அளித்த்திருக்கிறார். எங்குமே, தேவதாசி என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்று தான் கூறுகிறார்.

  மேலும் வினவு கூறி இருப்பது

  ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

  ”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

  மேற்படி செய்தியை புதிய ஜனநாயகம் திரித்து வெளியிட்டுள்ளது,
  “ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் அவனங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரம் உள்ளதா? என்கிற கேள்விக்கு, நாராயணன் தெளிவாக கூறி இருக்கிறார். அதனை அவர் கூறிய படியே ஆங்கிலிலத்தில் அளிக்கிறேன்

  There is no specific mention of aandaal as devadasi.
  There is no specific reference like that, only contextual interpretation. இதற்க்கு என்ன அர்த்தம் என தெரிந்து கொள்ளலாமா.

  அவர் கூறியது, அந்த காலகட்டத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் என்று பெரிதாக ஏதுமில்லை. ஒரு சில இருக்கின்றன(அந்த சிலவற்றிலும் ஆண்டாள் தேவதாசி என இருக்கிறது என்கிற அர்த்தத்தில் கூறவில்லை)மற்றவை எல்லாம் புராண கதை, தேவதாசிகளை பற்றி பாரம்பரிய மற்றும் செவி வழி அதாவது வாய் மொழி செய்திகளை அடிப்படையில் தான் நான் கூறினேன், மற்றபடி பதிவு செய்ய பட்ட வரலாறு ஏதுமில்லை என்று மட்டும் தான் கூறி இருக்கிறார். அதாவது தேவதாசிகள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்பதனை தான் பதிவு செய்கிறாரே தவிர. ஆண்டாளின் பாசுரங்களை பற்றி அவர் எங்குமே குறிப்பிடவில்லை. மேற்படி தாங்கள் கூறியது , “பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன”. இது புதிய ஜனநாயகம் இதழில் விஷமத்தனமாக திரித்து எழுதப்பட்டவை. இப்படி ஒரு வாக்கு மூலத்தை நாராயணன் கொடுக்கவில்லை,அல்லது உங்களின் புரிதல் மோசமாக உங்களின் பக்க சார்பாக இருக்கிறது என வைத்துக் கொள்ள வேண்டும்.
  .
  கடைசியில், அசோகா வர்ஷினி கேட்கும் கேள்வி இது தான், “So am given to understand, that there is no primary evidence , direct evidence that states that andal was a devadaasi, but it’s a understanding you have come from ”

  அதற்க்கு நாராயணன் அவர்கள் தரும் பதில் அதனையும் ஆங்கிலத்தில் தருகிறேன்(அவர் கூறியபடியே); “It’s a matter of inference only.. அதாவது அனுமானம் மட்டுமே”.. இது அனுமானம் மட்டுமே என ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

  மேலும், புதிய ஜனநாயகத்தில் தாங்கள் கூறிய செய்தி

  // ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.//

  நீங்கள் கொடுத்த இரண்டு லிங்கிலும் பார்த்து விட்டேன், நாராயணன் கூறியதை என்ன வெட்டி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கூறலாமே. வெட்டு பட்ட அந்த பேச்சுகளின் யு டியூப் காணொளியை நீங்கள் இங்கே வழங்கி தந்தி டீ.வி யை அம்பாலா படுத்தலாமே.

  பி.கு:- நான் எழுப்பிய இந்த கேள்விக்கு வினவிடம் இருந்து மட்டுமே ஒரு நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். நாராயணன் என்ன ஆதாரத்தை முன் வைக்கிறார், அது எந்த அளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை கூறவும். வேர் யார் எழுப்பும் கேள்விக்கும் பதில் தர மாட்டேன். ஆக. வினவு இது உங்கள் பாகம். Its your turn vinavu. start your prosecution. which should be a responsible annotation.

 4. நல்லா புரியுது ரெபகா கூறும் inference என்ற ஆங்கில வார்த்தைக்கு அவர் கொடுக்கும் அனுமானம் என்ற பொருள்… ஒரு ஆய்வாளரின் வாயில் இருந்து ஒரு விசயத்தை பற்றி inference என்ற வார்த்தை வருது என்றால் அதுக்கு research filed (ஆய்வு துறையில் ) என்ன பொருள் என்றால்

  a conclusion reached on the basis of evidence and reasoning.

  An inference is an educated guess.Inference is the process of inferring things based on what is already known.

  An inference is a conclusion that you draw about something by using information that you already have about it.

  ரெபெக்காவின் புரிதல் படி inference என்பதன் பொருள் அனுமானம் என்றால், ஆய்வுதுறையில் அதற்கு உரிய பொருள் முடிவு (conclusion). நாராயணன் சரியாக தான் சொல்லியிருக்கார். ஆதாரங்களின் அடிபடையில் நாராயணன் வந்த முடிவு ஆண்டாள் தேவதாசி என்பது.

  ரிசர்ச் மெத்தேடாலாஜி (research methodology) படிங்க ரெபெக்கா இன்னும் நல்லாவே புரியும்.

 5. Hi Rebecca,

  I know for sure you are not going to reply to me. Still, i put my questions. Let Vinavu answer for your question. But Vinavu has asked a few more questions along with their contro. article. Can you answer those?

  ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா?

  -Balaji

 6. நண்பர் பாலாஜி, ரெபெக்காவின் அறிவு, சிந்தனை எல்லாம் எதனை நோக்கி இருக்கு என்றால் தன் கருத்து சரியோ அல்லது தவறோ என்பதனை பற்றியதாக அல்ல. அடுத்தவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு எல்லாம் இவருக்கு பொறுமையும் கிடையாதுங்க. உங்களுடன் விவாதிக்க வேண்டும் என்றால் தராதரம் எல்லாம் பார்பார் இவர். உங்க கருத்துகளால் இரண்டு மூன்று முறை அடித்து சாத்து சாத்து என்று சாத்தினீர்கள் என்றால் உங்க கருத்தின் வலிமை கண்டு அதனால் அவருக்கு எழும் ஈகோ -தான் என்ற அகங்காராம் காரணமாக பதில் சொல்ல முயலுவார். உங்க கருத்துகளால் நல்லா சாத்துங்க… அப்பத்த்தான் பதில் வரும்… அப்படி தான் இவரை வேறு ஒரு விவாதத்தில் ஆண்டாளை பற்றி பேச வைத்து இருக்கேன். மொக்கையா ஓலரிகிட்டு இருக்கார் அங்கே.

 7. //ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா?//

  கல்வெட்டு இருக்கிறது, ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் சென்று பார்க்கவும். அங்கு இருப்பதாக கேள்வி. மற்றும் பல வைணவ மடங்கள் பழமையான ஓலை சுவடிகளை பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள். நேரில் சென்று பார்த்து வரவும்.

  //அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா?//

  இதனை நீங்கள் இந்துக்களிடம் சென்று கேட்கவும்… நான் வினவிற்கு தான் பதில் சொன்னேன்

 8. ரெபெக்கா, ஆண்டாள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கு பிரைமரி சோர்ஸ் கல்வெட்டு இருக்கிறது, அதனை ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் சென்று பார்க்கவும் என்று நீங்க சொல்வதனை விட அதில் என்ன விசயம் இருக்கு என்று தெளிவா சொல்லுங்க ரெபெக்கா! மொக்கை போடாமல் சொல்லுங்க. ஓலை சுவடிகள் என்றால் அதற்கு பெயர் என்ன அதாங்க அந்த ஓலைசுவடி நூலின் பெயர் இருக்குமே அதனையும் சொல்லுங்க மேரி. குத்து மதிப்பா பேசும் உங்களை போன்றவர்களுக்கு எங்க ஊரு பாசையில் கேணை ,கோமாளி மற்றும் மோடிமுட்டி என்று பெயருங்க.

 9. வினவிடம் நான் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர்கள் தரப்பில் இருந்து வரவில்லை. இங்கு உலவும் அல்லட்டை சிலாட்டைகள், அரைவேக்காடுகள் போன்றவற்றிடம் இருந்து நான் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆக, வினவின் கூற்று திரிபுவாதம் தான் என்கிற முடிவிற்கு வருகிறேன். நன்றி..

 10. நீங்களே ஒரு பொம்பள பொறுக்கியா, லும்பனின் பெண் பாலாக லும்பியா தான் வினாவில் வந்து ஒலாவிகிட்டு இருக்கீங்க… இதுல மத்தவங்க சொல்லும் பதில் எல்லாம் எப்படி உங்க காதுக்கு கேட்க்கும்… சொல்லுங்க பார்கலாம்.. பாப்பானின் அடிமையா கூலிக்கு மாரடிக்கும் வேலைய எவன் எந்த பார்பன ஹிந்துத்துவா இயக்கம் உங்களுக்கு கொடுத்தது? யாரோட கைக்கூலி நீங்க?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க