Monday, July 26, 2021
முகப்பு செய்தி லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

-

திரிபுராவில் வெற்றி பெற்ற 48 மணி நேரத்துக்குள் பெலோனியா என்ற நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளி, “பாரத்மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டு கூத்தாடியிருக்கின்றனர் சங்க பரிவாரக் காலிகள். வீழ்த்தப்பட்ட சிலையின் தலையை மட்டும் தனியே துண்டித்து கால்பந்து விளையாடினர் என்றும் கூறுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தி. “இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவெராவின் சிலை” – இது முகநூலில் எச். ராசாவின் பதிவு.

திரிபுராவில் மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களது அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வீடுகள் கொளுத்தப்படுகின்றன. இதுவரை 514 தொண்டர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும், 1539 வீடுகள் சூறையாடப்பட்டிருப்பதாகவும், 196 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும், 208 கட்சி அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், 64 அலுவலகங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்டு கட்சித் தலைமை குற்றம் சாட்டியிருக்கிறது.

இருப்பினும், பாஜக வின் ஆட்சியை “பாசிசம்” என்றே கூறவியலாது என்பது மார்க்சிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்தின் நிலை. மோடி ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் காரணமாக, பஞ்சாபில் காங்கிரசு வென்றதைப் போல மற்ற மாநிலங்களில் ஒருவேளை எதிர்க்கட்சிகள் வென்றாலும், இந்துத்துவ பாசிச அபாயத்திலிருந்து தப்பிவிட முடியாது என்று எச்சரிக்கிறார் பிரபாத் பட்நாயக். அது மட்டுமல்ல, தனது ஆட்சியின் தோல்விகளுக்கு இடையிலும் தேர்தல் வெற்றியை ஈட்டுவது எப்படி என்பது மோடிக்கும் சங்க பரிவாரத்துக்கும் தெரியும் என்றும், மாநில அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சங்க பரிவாரத்தை எதிர்கொள்ள முடியாதென்றும், எச்சரிக்கிறார் பட்நாயக்.


பட்நாயக்கின் எச்சரிக்கையை இங்கே நாம் குறிப்பிடுவதற்கு காரணம், அவர் தேர்தல் அரசியலில் நம்பிக்கை கொண்டவர், மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர் என்பதுதான்.

அக்லக் முதல் கவுரி லங்கேஷ் வரையில் எத்தனை கொலைகள் நடந்த போதிலும், நீதித்துறை உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் அப்பட்டமாக மோடி அரசின் அடிமைகளாக மாறிவிட்ட போதிலும், எல்லா நிறுவனங்களும் பாசிசக் கும்பலின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்ட போதிலும், பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.

உருண்டிருப்பது உயிரற்ற சிலையின் தலைதான். லெனினின் “தலை” கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் தலைக்குள் இருப்பதால் லெனின் மீண்டும் மீண்டும் உயிர் பெறுவார்.
ஆனால், தம் சொந்தத் தலையை இழந்த பின்னர்தான் பார்ப்பன பாசிசம் குறித்து சிந்திப்போமென்று இருப்பவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவர்களுக்கு மார்ட்டின் நீமோலரின் கவிதையை இலட்சத்து ஒன்றாவது முறையாக சமர்ப்பிக்கிறோம்.

“முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.
நான் யூதன் அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்.
நான் கம்யூனிஸ்டு அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்,
நான் தொழிற்சங்கவாதியல்ல, அதனால் நான் பேசவில்லை.
இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
இப்பொழுது எனக்காகப் பேச எவரும் இல்லை”

– மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

 1. தோழர்களே,மார்ட்டின் நீமோலரின் கவிதைக்கெல்லாம் இந்திய பார்ப்பனர்கள் தகுதியானவர்கள் இல்லையென்பது ஒரு அம்பேத்கரிஸ்டாக என் தாழ்மையான கருத்து.

 2. இட ஒதுக்கீடின் மூலம் பலன் அடைந்திருக்கும் “பிற்படுத்தப்பட்ட” சாதிகளைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களும், அரசு ஊழியர்களும், அரசு அதிகாரிகளும் தமக்குச் சொரணையும் நன்றியுணர்ச்சியும் இருப்பதை நிரூபிக்க வேண்டிய தருணமிது. மாறாக, அவர்கள் இன்னமும் மௌனித்துக் கிடப்பார்களேயானால், எச்ச ராஜாவைப் போலவே, அவர்கள் மீதும் தமிழ்ச் சமூகம் காறி உமிழ வேண்டும்.

 3. //பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும்//

  முற்றிலும் உண்மை – இந்தியாவில் நடக்கும் அனைத்து மக்கள் விரோத செயல்ளுகக்கும் மூல காரணம் பார்ப்பனீயம்தான் என்று தெளிவாகத் தெரிந்தும் அதை யாரும்வெ ளிப்படையாகச் சொல்வதில்லை, மாறாக பாஜக பாஜக என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் பாஜகவை இயக்குவது பார்ப்பனீயம் என்ற உண்மையை வெளிப்படையாகப் பேச வேண்டும்

 4. அப்படி லெனின் மீது பற்று என்றால், லெனின் பிணைத்ததோடு சேர்த்து இந்த சிலையையும் ம்யூஸியத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள்

 5. மணிகண்டனுக்கு செருப்படி கொடுக்கும் புதிய பிஜேபி முதல்வர் :

  புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள பாஜகவின் பிப்லப் குமார் தேப்,

  “மாணிக் சர்க்கார் அனைத்து கட்சியினரும் மதிக்கும் தலைவர். எங்களுக்கு அவர் முன்னோடி. திரிபுராவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரது ஒத்துழைப்பு அவசியம். அவரது வழிகாட்டுதலுடன் திரிபுராவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். அவர் முதல்வர் பதவி விலகியுள்ள போதிலும் எதிர்கட்சி தலைவர் அவர். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சருக்கு நிகரானது. எனவே அவருக்கு உடனடியாக அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்படும். அதுபோலவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அவர்களுக்கான விடுதியில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்டும்’’ எனக்கூறினார்.

 6. குமார்: திரிபுராவை கம்யூனிஸ்ட்கள் 25 ஆண்டுகள் ஆண்டார்கள் என்று சொல்லுங்கள் ஆனால் வளர்ச்சி அடைந்தது என்று மட்டும் சொல்லாதீர்கள். சோவியத் ரஷ்யா மக்கள் என்ன காரணங்களுக்காக கம்யூனிஸ்ட்கள் மீது வெறுப்படைந்து அவர்களை தூக்கி எரிந்தார்களோ அதே காரணங்களால் திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி தூக்கி எறியப்பட்டு இருக்கிறது.

  ஆனாலும் உங்களை போன்ற ஆட்கள் கண்களை மூடி கொண்டு உலகம் இருட்டா இருக்குனு சொல்ல தயங்க போவதில்லை… என்னை பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட்கள் தோல்வியை விட பெரிய சந்தோசம் வேறு ஒன்றும் இல்லை.

 7. மணிகண்டன் , திரிபுராவில் கடந்த இருபது ஐந்து ஆண்டுகளாக வளர்சி இல்லாமை மட்டும் தான் பிரச்சனையா ? இல்ல வேறு பிரச்சனைகளும் இருக்கா? ஏன் கேட்கின்றேன் என்றால் விவாதிக்க அடிபடையையான காரணிகளை நாம் நிர்ணயம் செய்துக்கொள்ள தான். பயப்படாமல் பதில் சொல்லுங்க. மக்கள் நிராகரித்த மாணிக் சர்க்கார் அவர்களை புதிய பிஜேபி முதல்வாராக வரப்போகின்றவர் “அவரது வழிகாட்டுதலுடன் திரிபுராவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும்” என்று கூறக்காரணம் என்ன? திரிபுரா எந்த துறைகளில் எல்லாம் பின்தங்கி இருக்கிறது ? அதற்கான புள்ளிவிவரம் என்ன? கொடுங்க ஆதாரத்துடன் விவாதிக்கலாம்… வழக்கம் போல ஓடிட போறிங்க தானே மணிகண்டன்?

 8. குமார்
  திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் நாங்கள் ஏழைகளின் கட்சி என்று 25 வருடங்களாக ஆட்சி செய்தார்கள் அதாவுது 25 வருடங்களாக வளர்ச்சி எதுவும் இல்லாமல் திரிபுரா மக்களை ஏழைகளாகவே வைத்து இருக்கிறார்கள்.

  நான் ஆசைப்பட்ட BMW கார், ஐபோன் X போன்றவற்றை வாங்குவதற்கான வேலைவாய்ப்பு சூழலை பிஜேபி அரசு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது ஆனால் திரிபுராவில் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்கள் உங்களுக்கு ஏன் ஐபோன் X நீங்கள் BSNL பப்ளிக் பூத்தை பயன்படுத்துங்கள் என்று சோசலிசம் பேசுகிறது. இந்த முக்கிய வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்ளாத வரையில் கம்யூனிசம் எங்கேயும் வெற்றி பெற முடியாது… ஆனால் இது உங்களை போன்றவர்களுக்கு புரியுமா என்பதே கேள்விக்குறி தான்.

  ரப்பர் தொடங்களை தவிர திரிபுராவில் என்ன என்ன பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கி இருக்கிறது, நாட்டில் உள்ள மற்ற பகுதி மக்கள் எல்லாம் சாப்ட்வேர் கம்பெனி மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் போது திரிபுராவில் ஒரு IT பார்க் கூட இல்லை, பெரிய தொழிற்சாலை கூட இல்லை…

  திரிபுராவின் மக்கள் தொகை வெறும் 40 லட்சம் தான் மிக மிக சிறிய மாநிலம் அதனால் அது அனைத்து துறைகளிலும் நாட்டின் முன்னோடி மாநிலமாக இருந்து இருக்க வேண்டும் கம்யூனிஸ்ட்களால் பின்னோக்கி சென்ற மாநிலங்களில் (கேரளாவை போல்) திரிபுராவும் ஒன்று.

  கேரளாவில் படித்தவர்கள் அதிகம் ஆனால் கேரளாவில் வேலை பார்க்காமல் வளைகுடா தமிழகம் கர்நாடகா என்று பல இடங்களுக்கு போகிறார்கள் காரணம் கம்யூனிஸ்ட்கள்.

  உங்கள் HDI டேட்டாவை எல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கள்… இந்தியா இளைஞர்களை பொறுத்தவரையில் வசதியான வாழ்க்கை அதற்கு அரசு உதவ வேண்டும், இந்த சித்தாந்தம் புடலங்கா எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

 9. அது என்ன சூழல் மணிகண்டன்? நீங்க இருபது தமிழ்நாடு தானே? இங்கே ஆள்வது என்ன பிஜேபி அரசா? இல்லையே! அதிமுக அரசு தானே? அது எப்படி உங்களுக்கு மட்டும் தமிழகத்தை ஆளாத பிஜேபி அரசு தனியாக உங்களுக்கு மட்டும் தமிழகத்தில் BMW கார், ஐபோன் X போன்றவற்றை வாங்குவதற்கான வேலைவாய்ப்பு சூழலை உருவாக்கி தந்து இருக்க முடியும்? சரி நேரடியாகவே கேட்கின்றேன். உங்க பிஜேபி மத்திய அரசு உங்களுக்கு மட்டும் அப்படி என்ன தனியா சூழலை செய்து கொடுத்து இருக்கு? அதே சலுகையை திரிபுராவுக்கு பிஜேபி அரசு செய்யல? அது என்ன சலுகை தம்பி மணிகண்டன்.?

  //நான் ஆசைப்பட்ட BMW கார், ஐபோன் X போன்றவற்றை வாங்குவதற்கான வேலைவாய்ப்பு சூழலை பிஜேபி அரசு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது ஆனால் திரிபுராவில் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்கள் உங்களுக்கு ஏன் ஐபோன் X நீங்கள் BSNL பப்ளிக் பூத்தை பயன்படுத்துங்கள் என்று சோசலிசம் பேசுகிறது.//

 10. மணிகண்டன் மனித வள குறியீட்டு (HDI)எண்ணை மையமாக வைத்து அதன் அடிபடையில் பேசவே வேண்டாம் என்று சொல்லிட்டீங்க மகிழ்ச்சி… எங்கடா இவன் குஜராத் HDI எண்ணை திரிபுரா உடன் ஒப்பீடு செய்து பார்துவிடபோறான் என்ற கவலை தானே மணி… கவலையே படவேண்டாம்… ஊருக்கே தெரியும் HDI விசயத்தில் குஜராத் மாநிலம் தமிழகத்தை விட திரிபுராவை விட பின்தங்கி தான் இருத்தது என்ற விசயம்.

  கல்வி அறிவை பார்த்தால் கூட குஜராத்தை விட திரிபுரா மாநிலம் முன்னேறி தானே இருக்கு. கிட்ட தட்ட 98% கல்வி அறிவு பெற்ற மாநிலம் தான் திரிபுரா… நீங்க உங்க மோடியின் குஜராத் மமாநிலத்தின் கல்வி அறிவை பற்றி கொஞ்சம் வாயை திறந்து பேசுங்க பார்கலாம்.என்ன வயித்த கலக்குதா மணி… போயிட்டு வந்து பேசுங்க…!

 11. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்சியை எப்படி பார்ப்பீர்கள் மணி? உங்கள் தனிபட்ட வளர்சியாகவா? இல்ல ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்சியாகவா ? ஒட்டுமொத்தம் என்றால் அங்கே HDI போன்ற புள்ளியியல் விவரங்களை நாம கணக்கில் எடுத்துதானே வேணும்! கார்லேசன், எக்ஸ்டர்புலேசன் எல்லாம் அந்த விவரங்கள் மீது போட்டு பார்த்து தானே ஆகணும் மணி.

 12. மணிகண்டன் உங்க பிஜேபி அரசு கூட்டணியில் உள்ளே தெலுங்கு தேசம் கட்சிகே முன்பு ஒத்துக்கொண்டநிதிஉதவி வாக்கு உறுதிகளை நிறைவேற்றுவதில் நடுவிரலை காட்டுது… ஏமாத்துது..விவரங்கள் வேண்டுமா? நொந்துபோய் பேசறாரு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு.

  1.மாநில பிரிவினையின்போது அறிவிக்கப்பட்ட 19 அம்ச திட்டங்களை நிறைவேற்ற ஏன் மத்திய அரசு தயங்குகிறது? மாநிலத்தை பிரிக்கும்போது, எதிர்க்கட்சியில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு போன்றோர், மாநில பிரிவினையால் ஆந்திராவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஆதலால், 10 ஆண்டு வரை அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென பேசினர்.

  2.அதன் பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. தற்போது 4 ஆண்டுகள் ஆகியும், சிறப்பு அந்தஸ்தோ, அல்லது சிறப்பு நிதியோ ஒதுக்கப்பட வில்லை. தேசிய உடைமையாக்கப்பட உள்ள போலாவரம் அணைக்கட்டு கட்டி முடிக்க ரூ.58 ஆயிரம் கோடி தேவை. இன்னமும் இதற்கு மத்திய அரசு ரூ.42 ஆயிரம் கோடி வழங்க வேண்டி உள்ளது. விசாகப்பட்டினத்தில் ரயில்வே தனி மண்டலம் அமைக்க வேண்டும். ஒரு தலைநகரை உருவாக்க குறைந்த பட்சம் ரூ. 42 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால் வெறும் ரூ.1,500 கோடி வழங்கி விட்டு, செலவு விவரங்கள் சரியில்லை என இப்போது கூறுவது வேடிக்கையாக உள்ளது.

  3.மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டவே ரூ. 11,300 கோடி தேவை. ஆனால், வெறும் ரூ.421 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஐஐடிக்கு ரூ. 3,300 கோடி தேவை. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது.

  இப்ப விசயத்துக்கு வரேன்… தன் கூடாளிக்கே அதன் அரசுக்கே ச்ந்திரப்பாபுவின் ஆந்திரா அரசுக்கே உரிய நிதியை கொடுக்காத மதிய அரசு பிஜேபி எப்படிங்க திரிபுரா கம்யுனிஸ்டு அரசுக்கு நிதி உதவிகளை அளித்து இருக்கும்? மாநில அரசுகளுக்கு சேரவேண்டிய உரிய நிதியை வழங்க மாட்டிங்க ஆனால் வளர்சி வேணும் என்று ஒப்பாரி வைப்பீர்கள்… எப்படிங்க இப்படி உங்களால் மட்டும் பேச முடியுது.?

 13. “இந்தியா இளைஞர்களை பொறுத்தவரையில் வசதியான வாழ்க்கை அதற்கு அரசு உதவ வேண்டும், இந்த சித்தாந்தம் புடலங்கா எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.”- என்கிறார் மணிகண்டன். நல்லது.இந்திய இளைஞர்களை இப்படிச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதும் ஒரு சித்தாந்தம்
  காட்டுகின்ற வழிகாட்டல்தான். அதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

 14. சந்திரபாபு நாய்டுவின் தவறுகளுக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்க முடியாது, நாயுடு தனது அரசியல் லாபத்திற்காக விவசாய கடனை ரத்து செய்து அதற்கான இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயம் இல்லை.

  மேலும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது Finance commission முடிவு செய்வது, மத்திய அரசு நினைத்தது போல் பணத்தை தூக்கி கொடுத்து விட முடியாது, இது நாய்டுவிற்கும் தெரியும் ஆனால் தேர்தலை சந்திக்க, மத்திய பணம் கொடுக்கவில்லை அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்வதற்கு இந்த மலிவான அரசியலை செய்கிறார்.

 15. மணிகண்டன்,பிஜேபி மதிய அரசு கூறி செய்கின்றேன் என்று ஏற்றுக்கொண்ட வாக்குரிதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை எனில் புதியதாக உருவான மாநில அரசு எப்படிங்க கட்டுமானங்களை அமைக்க முடியும்? என்னுடைய பின்னுட்டத்தில் தெளிவாக தானே சொல்லியிருக்கேன்..

  மாநிலத்தை பிரிக்கும்போது, எதிர்க்கட்சியில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு போன்றோர், மாநில பிரிவினையால் ஆந்திராவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஆதலால், 10 ஆண்டு வரை அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென பேசினர். அதனை தானே நிறைவேற்ற கோருகின்றார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு! தேசிய உடைமையாக்கப்பட உள்ள போலாவரம் அணைக்கட்டு கட்டி முடிக்க ரூ.58 ஆயிரம் கோடி தேவை. இன்னமும் இதற்கு மத்திய அரசு ரூ.42 ஆயிரம் கோடி வழங்க வேண்டி உள்ளது. விசாகப்பட்டினத்தில் ரயில்வே தனி மண்டலம் அமைக்க வேண்டும். ஒரு தலைநகரை உருவாக்க குறைந்த பட்சம் ரூ. 42 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால் வெறும் ரூ.1,500 கோடி வழங்கி விட்டு, செலவு விவரங்கள் சரியில்லை என இப்போது கூறுவது வேடிக்கையாக உள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டவே ரூ. 11,300 கோடி தேவை. ஆனால், வெறும் ரூ.421 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஐஐடிக்கு ரூ. 3,300 கோடி தேவை. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது.

  இப்படி எல்லாம் ஏமாற்றுவது கயமைத்தனம் அல்லவா மணி? அப்புறம் எப்படி மாநிலங்கள் முன்னேறும்?

 16. When Modi was the CM of Gujarat,he used to blame the UPA govt of adopting step-motherly treatment in the matter of financial allocation.In the process,he used to get more Central allocation than his demand from the then Planning Commission Dy-Chairman.But,he never spent the allocation for social sector fully.That is why the HDI index in that State was always poor.
  In the Tripura case,out of the State govt’s demand for Rs64215 crores under 14th Finance Commission,only Rs31309 crores were allotted according to former Finance Minister of Tripura, MrBhanulal Saha.He has stated that there was certainly a design and a tendency on the part of the NDA govt to lead Tripura to a “revenue deficit”trap and the NDA regime was in the process hampering many welfare schemes and developmental projects in the State.On the pretext of recommendations of the 14th Finance Commission,the Centre and Niti Aayog discontinued the “Special Category State”status to all north eastern states.The impact was felt the worst in Tripura.The Central govt assured that 90;10 funding pattern would be restored,but nothing happened,added Saha.
  “Instead of helping a far-flung border State,there was a design in the Central govt’s and the
  BJP leadership approach.They tightened fund allocations on one side and on the other side,the BJP President visited Tripura in the first week of May,2017 and made utter false allegations that our govt was not making use of the central allocations”-Saha.

 17. சூரியன் சார், மிக எளிய தமிழில் இந்த விசயத்தில் கேள்வி எழுபியதற்கே மாங்க மடையர் மாதிரி பதில் அளித்துக்கொண்டு இருக்காரு நம்ம தம்பி…. நீங்க வேற நல்ல ஆங்கிலத்தில் விவரங்களை கொடுத்து கேள்வியை எழுப்புகிண்றீகள். தம்பிக்கு புரியும் என்றா நினைகிறீகள்…BMW கார் வைத்து இருக்கார், சைனா ஐபோன் வைத்து இருக்கார் என்பதால அவர் பெரிய அறிவாளி என்று நினைச்சிக்கிட்டு இங்கே அவர்கிட்ட கேள்விய எழுப்புவீர்கள் என்றால் ஏமாந்து தான் போவிங்க.. வேண்டுமானால் பாருங்க பதில்வரும்….என்னாது திரிபுரா இந்தியாவில் தான் இருக்கா என்ற ரேஞ்சிக்கு கேள்வி எழுப்புவாறு பாருங்க நம்ம தம்பி மணி…

 18. Manikantan,Why we should throw HDI index into the dust bin?Tripura is the only State where free education up to college education was made available for the past 20 years by the then CM Manick Sarkar.Tripura (94.65%)exceeded Kerala (93.91) in literacy.This feat was achieved through a focus on the state’s tribal population-so much so that SC &ST in Tripura actually have a higher average literacy rate than the general population.Alongside,the State raised a police force composed mainly of young tribals to deal with the conflict.The Communist regime wanted Centre’s help to turn Tripura into a Centre of Education for the region.And they wanted an International Airport in the State capital Agartala.They wanted the fruits of economic development through the exploration of Tripura’s abundant natural gas resources.They also wanted to link Tripura’s Ashuganj river port with the Chittagong port in Bangladesh.And that was why Manick Sarkar requested the PM on his first visit to Tripura in Dec,2014 to address his cabinet colleagues.
  Due to consistent efforts taken by Sarkar,the Airport Authority of India have started the work for the upgradation of the Agartala airport.Tripura govt has provided 72 acres of land for the purpose.The upgradation work is expected to be completed before 2019.
  Tripura’s GDP is better than the BJP ruled Arunachala Pradesh and Manipur.
  Manick Sarkar won the Quaide Millath Award for integrity in Politics and Public life last year.
  Manikantan says that BJP made him to have the capacity to own BMW car and I-phone.But throughout the country,millions of youth are unemployed.Especially in TN,about 89 lakhs people registered their names in employment exchanges and waiting to get employed.Out of those 89 lakh people,thousands are aged more than 57 years and many thousands are engineering graduates.They are dreaming to get decent jobs and not dreaming to own BMW cars as the “lucky” Manikantan.

 19. The poverty rate in Tripura was reduced from 40% to 17.4% between 2004 to 2010 according to the erstwhile Planning Commission.(Since poverty reduction is not the aim of the present regime,the Planning Commission itself was abolished and the so called “think tank”Niti Aayog was brought into existence.This think tank wanted level playing field for private sector in all fields.Soon,it may recommend abolition of all passenger trains saying that those trains are un-economical)By making full use of the Tripura Land Reforms and Rehabilitation Act,1960 and Forests Rights Act,2006,7147 acres were restored to the tribal people.Similarly,the princely lands and surplus lands under land ceiling act to the total extent of 35000 acres were distributed to 37000 landless poor.Tripura is one of the states where public distribution system is working successfully.(In Gujarat and Maharashtra,ration shops are run by private individuals and not by the Civil Supplies Department of the state govt.Hence ration shops would be kept open only at the whims and fancies of these individuals).If only the lies of BJP that the past Tripura govt has not abolished poverty, have any iota of truth,how Tripura people voted Marxists to power for 25 years?

 20. அட நீங்க வேற சூரியன் சார்…., மணி மாதிரியான ஒத்த ஆளு மொத்தமா எல்லாத்தையும் அதாங்க bmw சீனா ஐபோன் வாங்கனால் தான் அது முன்னேற்றம்… மொத்தமா எல்லாரும் முனேறினால் அது கம்யுனிசம்.. நம்ம மணிக்கு மொத்தம் பிடிக்காது…ஒத்த தான் பிடிக்கும்….!

 21. //The poverty rate in Tripura was reduced from 40% to 17.4% between 2004 to 2010//

  Then people should have felt better and continued to elect the Party responsible for it.
  Am I missing something?

  Got it, Propaganda machine Soorian doesnt have voting rights at Tripura 🙂

 22. சூரியனை நக்கலடிக்கும் ராமன், அவரின் பிரச்சாரத்திற்கு பதில் சொல்லுங்களேன் உங்களுக்கு திராணி இருந்தால்!

 23. Raman instead of refuting the data given by me,calls me propaganda machine.
  Vidya Subrahmaniam in her THE HINDU article today,”Adversary to advantage” has written about the BJP’s election victories in the North East.”The BJP bosses have perfected a formula which delivers victory by any means.This comprises punishing hard work,inducing defections to form a government with or without election,a loyal television media ever willing to skewer the Opposition,an army of social media trolls (like Raman)and brilliant use of messaging platforms like WhatsApp to communicate both real and fake news.In Tripura,the BJP fielded a dozen defectors,most of whom won.Earlier,it had followed the same strategy in UP.The defectors had held important positions in the parent party,and took with them their massive support base.”
  “The BJP’s conquest of Northeast started with the defection of Himanta Biswa Sarma.who had been a minister in the Congress govt in Assam”(This Sarma played his role well in Assam and also in the Northeast)”The party induced wholesale defection of Congress MLAs in Arunachal Pradesh (Remember the suicide committed by CM Kali Ko Bul)”
  “But can the razzmatazz of winning and snatching elections indefinitely help the BJP?Can strategy alone substitute for delivery on the ground?And what of the image that its cadre are inherently violent,reinforced by the recent attacks on Lenin and Periyar statues?”
  In Assam,the BJP supported the local people and assured that illegal Muslim migrants would be driven away.In Tripura,the BJP took a different stand.It assured that citizenship rights would be given to Hindu migrants from Bangladesh.It has entered into pre=poll alliance with a tribal party which is struggling to get a separate State.BJP never talked about Hindutva or ban on beef in these States particularly in Meghalaya and Nagaland where christian population is 83% and 88% respectively.

 24. //Then people should have felt better and continued to elect the Party responsible for it.
  Am I missing something?//

  That is the human nature-even good spouse with you ,you look at others?
  You give all comforts to your son(Most of),still he will not understand you.
  Even in Russiya common people do not know in other countries How people suffer,that is why Yelstin and Putin has come.

 25. @SHANMUGAM K

  //Even in Russiya common people do not know in other countries How people suffer,that is why Yelstin and Putin has come.//

  how did you know this information ?

 26. My friend just came from georgea breakaway nation of USSR. HE told me that the country is very poor and they are predominantly relying on tourism income.
  Houses are very small compare to kanyakumari districk peoples home.

 27. //Yes I have extensively travelled in USSR before 1991.//

  I assume you are a comrade who visited there to enforce the propaganda.
  I assumed since your travel stopped after 1991

  //Even in Russiya common people do not know in other countries How people suffer,that is why Yelstin and Putin has come.
  //

  Too bad, USSR banned foreign films and commoners dint get a chance to peek out the hell.

  And again , Communists structure is very hard to break out,it is hijacked by power hungry Putin and oligarchy.

  They are yet to taste the true democracy and freedom to do and own business.

 28. //Too bad, USSR banned foreign films and commoners dint get a chance to peek out the hell.//

  Yes we know how our film shows actual life/or culture of the people.
  Even these films are not fit to show in our country.
  just we Indians know these MASALA films only for the so called entertainment

 29. @SHANMUGAM K

  Good going comrade! All you need is a the power to decide what people should be watching and what they should be reading , what is fit what is not. You are right on track..

  By the way, USSR had these powers, May I know why they dint enlighten their population how fortunate the were?

 30. //They are yet to taste the true democracy and freedom to do and own business//
  //I assumed since your travel stopped in 1991//
  This gentleman contradicts himself.What was the change in USSR after 1991?Whether that change can be effected without providing true democracy and freedom?Can he explain the fundamental characteristics of neo liberalization?

 31. @SHANMUGAM K

  USSR authorities authorized showing “Death of a Salesman” in order to show people how Americans are suffering. BUT USSR audience were surprised how come someone owning a house, a fridge, TV, nice furniture and a car is suffering!

 32. //Now it is not USSR ,it is Putins Russia not of Communists USSR.
  //

  You have to read again to get context. It answers that USSR people dint know the difficulties of people in other countries. You see USSR has tried to show how others suffer but sometimes truth wins.

  Once pillaged by communism and it will be long battle to get to individual freedom.Corrupt Institutions setup by communism, people who were groomed to take authority, connected people who knew how system works , will not let their privileges go easily.

  Oil oligarchy and KGB trained Putin should be seen in that context.

  We have to thank Ambethkar who wrote constitution which prevents power grab ,a hallmark of socialism .

 33. Oligarchy now applies to capitalism and not socialism as evidenced by the expansion of industrial empires of Ambani and Adhani throughout India.Aircel got extinguished due to predatory offers given to Jio mobile users.In the process lakhs of Aircel customers are affected in TN alone.Is it not power grab by proxy?

 34. //In the process lakhs of Aircel customers are affected in TN alone.Is it not power grab by proxy?//

  One business improves business by increasing customer service, another
  inefficient business bankrupts. And customer will get better service and improved quality of life. This is how standard free economy works.

  Powergrab/Oligarchy skews this process by penalizing one business and favoring another business.Now read the aircel bankruptcy statement if that has happened and write here.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க