எச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் !

2
449

பார்ப்பனக் கொழுப்பும் பான்பராக் எச்சிலும் ஒழுக பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற எச்ச ராஜாவுக்கு தமிழகம் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது.

எச்ச ராஜாவைத் தாண்டி அவரது முன்னோர்களான ‘குருஜிகோல்வால்கர்’ வரை துடப்பக்கட்டை பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாய் அய்யோ… எனக்கே தெரியாம நடந்துடுச்சி… அட்மின் பய போட்டு வூட்டு போய்ட்டான்… அந்த நேரத்துல நான் டெல்லி ஃபிளைட்ல இருந்தேன்னு… எஸ்கேப்-ஆக முயல்கிறார் எச்சையார்.

மெய்யுலகிலே மரணஅடி என்றால் பாஜகவை புரட்டி எடுக்கும் மெய்நிகர் உலகில் சொல்லவா வேண்டும். அவற்றில் சில….. உங்களுக்காக…

*****

சிவசங்கர் எஸ்.எஸ்

பெரியார் மீது செருப்பு வீசினால், திருப்பி கருத்தை தான் வீசுவார். பெரியாரின் பெயரன்களை அது போல் நினைத்து விட்டார் போலும் ராஜா. நீ செருப்பை வீசினால், திருப்பி நெருப்பாய் வீசுவோம் என நிரூபித்து வருகிறார்கள் பெயரன்கள். இணையம் கொதிக்கிறது. ஊருக்கு ஊர் எச்.ராஜாவின் படம் எரிகிறது. ஊடகங்களில் காறித் துப்பப்படுகிறது. தன் நிலைத்தகவலை தானே நீக்கி விட்டு, தன் முகத்தில் துப்பப்பட்டதை துடைத்துக் கொள்ள முயல்கிறார். இனி உன் வாழ்நாள் முழுதும் துப்பப்படும். துடைக்க, துடைக்க துப்பப்படும்….

Arul Ezhilan

ஆஹா அதற்குள் சிபிஎம் தோழர்கள் பூணூல் அறுப்பை கண்டிக்கத் துவங்கி விட்டார்கள். தோழர்களே இந்துத்துவத்தை எதிர்க்க 30 ஆண்டுகள் பழைய அணுகல் முறையை நீங்கள் இன்னும் வைத்திருக்கின்றீர்கள். அது துருப்பிடித்திருக்கிறது அதனால்தான் அடிக்கடி உங்களுடைய கைகளை அது பழாக்குகிறது…!

Aazhi Senthil Nathan

மமதா அக்கா எனக்கு பிடிக்கிறதுக்கு காரணம் இருக்கு:

“My ideology may differ with the CPI(M) but I will not tolerate it if someone tries to destroy the statues of leaders like Lenin.”

Aazhi Senthil Nathan

பெரியாரைப் போல ஒரு அதிர்ஷ்டக்கார கெழவன் யாரும் இல்லை. அவரால் பலன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும், அவரால் “பாதிக்கப்பட்டவர்கள்” அவரை மறப்பதில்லை. ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்று கூறுவதுபோல, பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜா, நீ பேசு ராஜா! நீ ராசிக்கார ராஜா இல்லையா? இன்றைக்கு லட்சம் பேராவது வாட்ஸ்அப்பில் பெரியாரைப் பற்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! முகநூலிலிருந்து தொலைக்காட்சிகள் வரை பெரியாரைப் பற்றி பேசுவார்கள். எதற்காக பெரியார் சிலையை நீ உடைக்கணும்னு சொன்னேங்கிறது பத்தி எல்லோரும் பேசணும். அது பத்தி நன்றிகெட்ட இந்த தமிழ்நாட்டுக்கு நல்லா தெரியணுமில்லையா? நல்ல வேலை செஞ்சிருக்க ராஜா! இன்னும் இன்னும் நீ பெரியாரைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் லெனினைப் பத்தியும் நிறைய பேசணும்னு ஸ்ரீராமபிரானை வேண்டிக்கொள்கிறேன்.

நாங்க பெரியாரையும் தன்மானத்தையும் மறந்திடும்போதெல்லாம் உன்னைப் போல ஒரு ராஜா தேவைப்படுது. இதோ பாரு. சமீபத்தில மருத்துவ மேற்படிப்பில பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து பண்ணீங்க. தமிழ்நாட்டில எதுவும் வெடிக்கல. அங்கே ஒரு முனகல், இங்கே ஒரு முக்கல். தட்ஸ் ஆல். அந்த அளவுக்கு தூங்கிட்டிருக்காங்க எங்க ஆளுங்க. இவங்கெல்லாம் விழிப்புணர்வு அடையணும்னா நீ – சொல்லக் கூடாது – செய்யணும். போய் ரெண்டு பெரியார் சிலையாவது உடைங்க பாக்கலாம். உங்க லெவலுக்கு நீங்கலெல்லாம் ஒடச்சுட்டுத்தான் போஸ்ட் போடணும் ராஜா. போ, போய் ரெண்டு பெரியார் சிலையை உடை. போட்டோ எடுத்து போடு. நாங்க பாக்கணும்.

செய் ராஜா செய். சேவையெல்லாம் செய். ப்ளீஸ் எங்கள ஏமாத்திடாதே.

Arul Ezhilan

பூணூல் அறுக்கப்பட்டது உண்மைதான். அறுத்தவர்கள் 4 பேர் அவர்களாகவே போய் சரணடைந்திருக்கிறார்கள். எச்.ராஜா உருவாக்கிய வன்முறையின் எதிர்வினை இது. பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச்.ராஜா பதிவிட்ட உடன் அவனை கைது செய்திருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. இந்த வன்முறைகளுக்கு முழு பொறுப்பும் எச்.ராஜா அந்த பொறுக்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்! எச்.ராஜா கைதாகும் வரை பிராமணர்கள் கொஞ்ச நாள் பூணூலை கழட்டி வைத்து விட்டு சட்டை போடாமல் வெளியே வரும் படி பிரமாணர் சங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Gopinath Kubendran

தில் இருந்தால் பெரியார் சிலையை உடைக்கட்டும், அதற்கான விளைவுகளை அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தால். – ஆசிரியர் கி.வீரமணி.
சேதப்படுத்தும் நோக்கில் பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும் – வைகோ.
பெரியார் சிலையை உடைக்க எச்.ராஜா அல்ல அவங்க முப்பாட்டன் வந்தாலும் முடியாது. – திருமா.

எச்.ராஜாக்கு பெரியார் சிலையை தொடும் தகுதி கூட இல்லை. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். – ஸ்டாலின்.
நாளை என்ன நாளை இன்றே முடிந்தால் தொட்டு பார்க்கட்டும். – சுப.வீ
எந்த இனத்திற்காக எச்.ராஜா பேசுகிறாரோ அந்த இனத்துக்குதான் இது ஆபத்தாய் முடியும். இதை அவர்கள்தான் ராஜாவுக்கு உணர்த்த வேண்டும். – கொளத்தூர் மணி.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”. – பாவேந்தர். பாரதிதாசன்.

Suresh Kathan

லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை தமிழ்நாட்டில் உடைக்கப்படும்.

– H. ராஜா, BJP.

நான் பொதுவாக facebook ல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. ஆனால், கெட்ட வார்த்தைகள் பேசும்போது தான் நாம் நாமாக இருக்கிறோம் என்று நம்புகிறவன்.

ஏலே… ராஜா…புடுங்கி… டம்மி பீசு… என் டிங்கி…என் டிஸ்க்கு… டாலாலி டொங்கு…
யே…பீக்காலி… டே…சன்னாடிக் கக்கு…யே மிண்டி… சாலி மூளி… சங்கி மங்கி… போடா… கொங்கிரிக் கிண்டி… சென்னெட்டி மொண்டி…
தொட்டுப் பார்றா…

( புள்ளிகள் உங்களுக்குத்தான்… பிடித்த கெட்ட வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொள்ளவும்)

Keetru Nandhan

தன்னுடைய படத்தை செருப்பால் அடிக்க விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டால், தனது சொந்த செலவில் படங்களை அனுப்புவதாக அறிவித்தவர் தந்தை பெரியார். எதிர்ப்புகளை கொள்கைப் பிரச்சாரத்திற்கான வழியாகப் பார்த்தவர் அவர். ஆனால், அப்படிப்பட்டவர் (நானறிந்த வரையில்) இரண்டு தருணங்களில் வன்முறைக்குத் தயாராகுமாறு தனது தொண்டர்களை அறைகூவி அழைத்திருக்கிறார்.

  1. இராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிவித்தபோது, “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். ஒவ்வொருவரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் நாள் குறித்து அறிவிப்பேன். அக்கிரகாரம் எரிய வேண்டும்” என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தார்.
  1. காமராஜரைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அவரைப் பாதுகாப்பதற்காக இயக்கத்தவர்கள் எல்லோரும் 6 அங்குல நீளத்திற்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

இரண்டு முறையும் எச்சரிக்கும் முகமாக இவ்வாறு அறிவித்தாரே தவிர, அதை செயல்படுத்தவில்லை. இந்த இரண்டு தருணங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கோபத்துக்கு ஆளானார் என்றால், இரண்டும் தமிழர்களின் கல்வியோடு தொடர்புடையவை.

  1. குலக்கல்வித் திட்டம் நம்மை மீண்டும் நிரந்தர அடிமையாக்கிவிடும்.
  2. குலக்கல்வியை ஒழித்து, ஊர்தோறும் பள்ளிகள் திறந்து நமது கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராஜர்.

கல்வியறிவு கிடைத்தால், நமது மக்கள் பகுத்தறிவு பெற்று, இன இழிவுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்பதில் பெரியார் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அதற்கு ஊறு வரும்போது துடித்து எழுந்தார். இன்று, நீட் தேர்வினால் நமது பிள்ளைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதோடு, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் அமைதியாக இருக்கிறோம்.

பெரியார் சிலைகளைக் காப்பதில் தமிழகம் துடித்து எழுந்தது உள்ளபடியே பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தகட்டமாக, அவர் உயிரினும் மேலாக மதித்த கல்வி உரிமையைக் காப்பதிலும் இந்தத் துடிப்பு தொடர வேண்டும்.

Aazhi Senthil Nathan

லெனின், பெரியார், அம்பேத்கர் – மூணு பேருக்கும் சேர்த்து ஓரே இடத்தில் சிலை வைக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த இடத்துக்கு ‘திரிபுர மைதானம்” என்று கூட பெயர்வைக்கலாம்!

Villavan Ramadoss

எச்சையார் ஒன்றும் ஏமாளியோ, லூசுக்கூமுட்டையோ இல்லை. இன்று ஊடக விவாதமாக இருந்திருக்க வேண்டியது ரஜினி மேட்டர்தான். ஆனால் சுத்தமான அய்யர் வகையறா ராஜா அசால்ட்டாக அந்த வாய்ப்பை அய்யங்கார் மருமகன் ரஜினியிடம் இருந்து பறித்துவிட்டார்.

கூட்டணி வைத்து பாஜகவுக்கு ஓரிரு சீட் கிடைத்தாலும் அது நாடார் லாபிக்கு செல்லவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஓவராக பேசி அதற்கும் ஆப்பு வைத்தாயிற்று. இரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்துக்கு ஒரே ட்வீட்டில் சங்கு ஊதும் வல்லமை வேறு யாருக்காவது உண்டா?

இதாண்டா அய்யர் வம்ச ராஜதந்திரம்

Abdul Hameed Sheik Mohamed

சிலைகளை உடை – கவிதை

உடை
சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் தோன்றும்
சிலைகள் இடத்தில்
சிலைகள் மீளும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் கண் திறக்கும்
சிலைகள் பேசும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் கைத்தடி சுழலும்
சிலைகளின் செருப்பு உயிர்த்தெழும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் நிழல்கள் உடையாது
சிலைகளின் குரல்கள் உடையாது
சிலைகளின் சொற்கள் உடையாது
சிலைகளின் சரித்திரம் உடையாது

சிலைகளை உடை
சிலைகளைக் கண்டால்
உனக்கு துர்கனவுகள் வருகின்றன
உன் குற்றங்கள் உன் நினைவுக்கு வருகிறது
உன் அகங்காரத்தில் விழுந்த அடியை உன்னால் மறக்க முடியவில்லை
சிலைகள் உடைந்தால்
உன் பழம்பெருமைக்கு திரும்பிவிடலாம் என்று
யாரோ சொன்னதை நீ நம்பிவிட்டாய்
சிலைகள் உன்னைப்பார்த்து சிரிப்பது
உன் காதுகளில் விழவில்லை

சிலைகளை உடை
சிலைகள் என்பது சிலைகள் அல்ல
சிலைகள் என்பது கல்லால் ஆனதல்ல
சிலைகள் என்பது உலோகத்தால் ஆனதல்ல
சிலைகள் எமக்கு கும்பிட அல்ல
சிலைகள் எமக்கு களவாட அல்ல

சிலைகளின் அடியில் ஒன்று கூடுகிறோம்
சிலையில் எங்கள் ஆயுதங்களைத்தேய்த்து
கூர் தீட்டுகிறோம்
சிலைகளில் மோதி
எங்கள் பலத்தை சோதித்துக்கொள்கிறோம்
எங்களை வழிநடத்த ஒருவன் தேவைப்படுகிறது
அந்த சிலையை உடை
அந்தச் சிலைக்குள் இருப்பவன்
துயில் கலைந்து எழுந்துவருவான்
எங்கள் படையணியை
வழி நடத்திச் செல்வான்

சிலைகளை உடை
உடைத்துவிட்டு
நீ வீடு திரும்பும் வழியில்
நாங்கள் காத்திருக்கிறோம்
சிலைகள்போல

-மனுஷ்ய புத்திரன்

_______

தந்தை பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்! -மருத்துவர் இராமதாசு அறிக்கை

திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன்னோடி லெனினின் சிலைகள் அகற்றப்படுவதை சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.இராஜா கூறியிருக்கிறார். மேலும், தந்தை பெரியாரை சாதிவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

வினாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம் தான் எச்.ராஜாவின் முகநூல் பதிவு ஆகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள எச்.இராஜா போன்றவர்கள் எதையாவது பேசி அரசியல் விளம்பரம் மற்றும் பரபரப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தந்தைப் பெரியாரைப் பற்றிக் அநாகரிகமான விமர்சனங்களை இராஜா முன்வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை பேசியும் அதற்காக அவர் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எச்.இராஜாவின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையையும், சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவர் போராடி இருக்காவிட்டால் தமிழகத்தில் பறிக்கப்பட்ட சமூக நீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதற்காக தந்தைப் பெரியாரை கோடிக்கணக்கான கரங்கள் வழிபடுகின்றன; கோடிக்கணக்கான வாய்கள் வாழ்த்துகின்றன. அத்தகைய பெரியாரின் சிலையை எச்.இராஜா போன்றவர்களால் நெருங்கக் கூட முடியாது என்பதே உண்மை.

தந்தைப் பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவதற்கு அல்ல…. அசைக்கக்கூட முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தொண்டர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இதை அறைகூவலாகவே விடுக்கின்றனர்.

தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிலையை அகற்றுவோம் என்று கூற எச்.இராஜா போன்றவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்பது தான் மிகப்பெரிய வினா. அதிமுக இடம் கொடுத்ததால் எச். இராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். தந்தைப் பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய எச்.இராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும், சட்டம் & ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச்.இராஜாவை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

Parimala Rajan

பெரியார் சிலை மீது எவன் கை வைத்தாலும் எங்கள் குறி சங்கர மடத்தின் மீது தான் பாயும் ! ஜாக்கிரதை !

Villavan Ramadoss

எதுக்கு சொறிநாயோட சண்டைன்னு சிலர் ஒதுங்கிப் போகலாம்.
சொறிநாயோடு எப்படி சண்டை போடுவது என சிலர் பயந்து சும்மாயிருக்கலாம்.
சொறிநாய்தானே என்ன பண்ணிடும்னு சிலர் அலட்சியமாக இருக்கலாம்.
போயும் போயும் சொறிநாயோட சண்டை போடனுமா என கூச்சப்பட்டு சிலர் அமைதியாய் இருக்கலாம்.

எதிர்வினையும் உணர்வும் வேறாக இருப்பினும் எங்கள் எல்லோருக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் அனைவருமே சொறிநாய்கள்தான். அந்த சொறிநாய்களை கல்லெடுத்து அடிக்கும் காலம் வரும்போது இங்கே எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள். சுபம்.

Umamaheshvaran Panneerselvam

பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்னதும் கொதித்தெழுந்தது பாதிக்கும் மேல் ஆத்திகர்கள்.
பெரியார் சிலையை உடைத்த கயவனை புரட்டி எடுத்ததில் பாதிக்கும்மேல் ஆத்திகர்கள்..
பெரியாரைப் போற்ற நாத்திகனாய் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.
சமூகநீதிக்கு நன்றியுள்ளவனாய் இருந்தாலே போதும்…

இதெல்லாம் சிலையை பிடித்துக்கொண்டு சித்தாந்தம் என்றால் “கூறு எவ்வளவு ரூபாய் ?” என்று கேட்கும் அற்பர்களுக்கு புரியாது.
பெரியார் என்பவனை ஒற்றைக் கிழவனாக அவர்கள் பார்க்கிறார்கள். பெரியார் இங்கே ஏற்படுத்தியிருப்பது Nuclear Fission. சமூகநீதியின் Chain Reaction.

ஹோமகுண்ட புகையால் Radiation குறையும் என்று நம்பும் ஈத்தரைகளுக்கு ஈ.வெ.ராவை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் சமூகநீதி தான் ஆன்மிகம்.
அதை விஞ்சிய வழிபாடு வேறில்லை.

தமிழகத்தின் அரசியல் என்பது சமூகநீதியை சுற்றி தான்.
ஆன்மிக அரசியல் என்றாலும் அது இது தான்.

Anbe Selva

பலவருடம் முன்னால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணா மெசின் நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்தது தங்கள் நடத்தும் பள்ளியின் முன்னால் இருக்கும் பெரியார்சிலையை அகற்ற உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் கோரியது வழக்கானது நீதியரசர் சந்துரு முன்னால் விசாரிக்கபட்டது அப்போது நீதியரசர் சொன்ன வரிகள் இவை;

“ஏன் அவரின் உயிரில்லாசிலை உங்களை பதட்டபடவைக்கிறது அவர் வர்ணாசிரம முறைகளை அடித்து நொறுக்கியதை குழந்தைகளுக்கு கற்பியுங்கள் சாதிமதங்கள் இந்த நாட்டின் பீடித்தநோய் என அவரை அடையாளபடுத்தி குழந்தைகளுக்கு போதியுங்கள் அவர் அகற்றபடவேண்டியவரல்ல நினைவு கூற படவேண்டியவர் என வழக்கை தள்ளுபடி செய்தார் ”அம்பேத்கார் ஓளியில் என் தீர்ப்புகள் புத்தகத்தில் நீதியரசர் சந்துரு

முத்துராமலிங்க தேவரை பின்பற்றுவதாக சொல்லும் எச்ச ராஜா, முத்துராமலிங்க தேவரின் சாதி மக்களுக்கும் உரிமையான மருத்துவ படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு நேற்று நீக்கப்பட்டதற்கு எதிராக பேசமாட்டான், மாறாக அவர்களுக்கு அந்த உரிமையை கிடைக்காமல் தடுப்பதையே காலம்காலமாக செய்துவரும் கும்பலாகவும் இருக்கிறான்.

ஆனால் பெரியாரோ, முத்துராமலிங்க தேவரை கடுமையாக விமர்ச்சித்தவராக இருந்தாலும், தேவர் சாதி உள்ளிட்ட BC, MBC, SC, ST மக்களின் கல்வி & வேலை உரிமைக்கும் சாகிற வரைக்கும் போராடியவராய் இருக்கிறார். பார்ப்பனிய நரித்தனம் என்பது நயவஞ்சகமானது என்பதை விளங்கி கொள்ளும் இடம் இதுதான்.

தனது சனாதன தர்மத்துக்கு ஆபத்து என்றவுடன் தாங்கள் மதிக்கும் முத்துராமலிங்க தேவர் சாதியை சேர்ந்த தாயை தேவடியாள் என்று பொதுவில் திட்டியவன், வைரமுத்துவை கீழ்த்தரமாக மிரட்டியவர்கள் இப்போது பெரியார் விஷயத்தில் அரசியல் ரீதியாக கார்னர் செய்யப்பட்டவுடன் பெரியாருக்கு எதிராக தேவர் சாதி மக்களை திரும்புகிறான்.

எவ்வளவு தந்திரமான எங்களையே ஹாண்டில் செய்துட்டாரே என்றுதான் பெரியார் மீது அந்த கும்பலுக்கு வரலாற்று வன்மம்.. அந்த தந்திரத்தை நாமும் கற்றுக் கொள்வோம்..

Villavan Ramadoss

அந்த போஸ்ட் என் அட்மினுக்குத்தான் பிறந்தது. இனிஷியல் மட்டும்தான் என்னுது. – எச்.ராஜா.

அன்சாரி முஹம்மது

காவிகள் ஏதோவொரு மறைமுக சதித்திட்டத்தின் பின்னணியில்தான் விளையாடி பார்க்க நினைக்கிறார்கள். வினையை அறுவடை செய்யப்போகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். இது குஜராத் அல்ல. இது திமுக ஆட்சியாக இருந்திருந்தால் இவன் இதுவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டிருப்பான். ஆனால், நடப்பது காவி அடிமைகளின் ஆட்சி என்பதுதான் இந்த மண்ணின் சாபக்கேடு.

Vikkranth Uyir Nanban

யாருக்கும் தெரியாம நைட்ல சிலைகிட்ட போய் வீரத்தை காட்டுனா அந்த கல் எப்படி தடுக்கும்.. வைகோ காலைலயே சரியா சொன்னாரு யாருக்கும் தெரியாம நைட்லதான் வருவானுங்கன்னு..

அட முட்டா காவி கபோதீஸ்… இந்த சிலையை இந்த நாள்ல உடைக்க போறேன்னு சொல்லிட்டு வா.. நாங்களும் வர்றோம் பாத்துக்லாம்ன்னுதான் சொன்னோம்.. இப்போ என்னடா பொதுமக்கள்ட்ட மாட்டி அடிவாங்கியிருக்கீங்க.. இவனுங்களுக்கு கேம் ரூல்சே தெரியல… விட்டா வீட்டுல பெரியார் சிலை செஞ்சு வீட்லயே ஒடைச்சிப்பானுங்க போல..

Palani Shahan

இந்த நொடி வரை வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்கவேண்டிய சூழல்… திமிறி எழுந்த கிழவனே ராஜாவின் திமிரை அடக்கினார். இப்போது தெரிகிறதா தமிழிசை, இது பெரியாழ்வார் பூமியா, பெரியார் பூமியா என்று?

பதிவை நீக்கியுள்ளார் எச்.ராஜா. நேற்று முன்தினம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மூக்கறுபட்ட எச்.ராஜா, அந்தப் பதிவை முகநூலில் இருந்து நீக்கினார். இன்று பெரியார் பற்றிய தனது பதிவையும் நீக்கியுள்ளார். அதுவும் சில மணி நேரத்திற்குள்.

ஒரு முகநூல் பதிவையே தாக்குப் பிடிக்க இயலாதவரெல்லாம் மத்தியில் ஆளும் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கிறார். இவரையெல்லாம் நம்பி தேசபக்தர்கள் கொஞ்ச நேரத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார்கள். ஆனாலும் கலங்கவே மாட்டார்கள். ஏனென்றால் ‘துப்பினால் துடைத்துக்கொள்வோம்’ என்கிற ரகம்தானே பா.ஜ.க.வினர்.

Abdul Hameed Sheik Mohame

பிக் ப்ரேக்கிங் நியூஸ்:

தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து எச்.ராஜா நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பில் எச்.ராஜாவின் அட்மின் நியமிக்கப்பட்டார். அமித் ஷா உத்தரவு

ஸ்டாலின் பெலிக்ஸ்

H Raja ஷர்மா ஜி,

லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கும் நீங்கள், ‘ரஷ்ய தொழில் நுட்பத்துடன் கூடிய அணுவுலை நமக்கு தேவையா?’ என்று ஏன் கேட்கவில்லை? நாக்பூரில் இருக்கும் RSS விஞ்ஞானிகளை வைத்து நாம் ஏன் ஒரு அணுவுலை அயோத்தியில் உருவாக்க கூடாது!!!

AD Bala

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னருக்கு எதிராக 1917ம் ஆண்டு பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. முடியரசை வீழ்த்திய கையோடு புரட்சித் தீயை அணைத்துவிடவேண்டும் என்று முதலாளித்துவம் விரும்பியது.

ஆனால், போர் வேண்டாம், சமாதானம் வேண்டும், உழைக்கும் மக்களுக்கு அரசிலும், தொழிற்சாலைகளிலும் உரிமை வேண்டும் என்ற முழக்கத்தோடு புரட்சியின் அடுத்த கட்டத்தை திட்டமிட்டு நடத்தியவர் லெனின். அதன் மூலம் வெற்றிகரமாக உலகின் முதல் உழைக்கும் மக்களின் அரசைப் படைத்தது மட்டுமல்ல, உலகப் போரின் தீ மேலும் பரவாமல் தடுக்க உதவியவர் அவர்.

கம்யூனிசம் பரவும் என்ற அச்சமே உலகில் மக்கள் நல அரசு என்றக் கருத்தாக்கம் பரவவும், தொழிலாளர் உரிமைகளை மதிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகவும் காரணமானது. முதல் உலகப் போரின் போது ஜாருக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி கடைசியில் கம்யூனிசப் புரட்சியாக மலர்ந்தது ஆளும் வர்க்கங்களுக்குப் பாடமானது. கம்யூனிசம் உலகம் முழுவதும் பரவும் என்ற அச்சத்தை லெனின் உருவாக்கிய ரஷ்யா தந்துகொண்டே இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம். மேற்கத்திய நாடுகளின் காலனிகளில் எழுந்த நெருக்கடிகளும் அதிருப்தியும் புரட்சிக்கு வித்திட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். அப்புறம் ரஷ்யாவில் நடந்த கதைதான். அது காலனி ஆதிக்க எதிர்ப்போடு நின்றிருக்காது. கம்யூனிசப் புரட்சிகளாகி இருக்கும். இந்த அச்சமே, ஆண்ட நாடுகள் தங்கள் அடிமை நாடுகளில் சாதகமான அரசமைப்பை விட்டுவிட்டு, வெளியேறக் காரணமானது. இந்தியாவும் அப்படியே விடுதலை பெற்றது.

விடுதலை பெற்ற முந்தைய காலனி நாடுகளுக்கு ராணுவத் தொழில் நுட்பங்களையும், அறிவியல், வானியல் நுட்பங்களையும் வழங்கி ஒத்துழைத்தது லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன்.

முதல் முதலில் இந்தியர் ஒருவரை – ராகேஷ் ஷர்மா – விண்வெளிக்கு இட்டுச் சென்றது ரஷ்ய விண்கலம் சோயுஸ்தான். இன்று ஓங்கி நிற்கும் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கும், ராணுவ ஏவுகணைத் திட்டங்ககளும் கம்யூனிச ரஷ்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தையாக நடை பழகியவைதான்.

இப்படி ஏழை நாடுகளின் அறிவியல் வளர்ச்சியில் உறுதுணையாக ரஷ்யா நிற்கக் காரணம் அது கம்யூனிச ரஷ்யாவாக இருந்ததுதான்.

நாம் பெற்றுள்ள குறைந்தபட்ச அரசியல் உரிமைகளுக்கும், பணியிடத்தில் நாம் அனுபவிக்கும் குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகளுக்கும், மக்கள் நல அரசு எனும் கருத்தாக்கத்தின் சுகத்துக்கும் பின்னால் லெனின் என்னும் மனிதரின் வியர்வை கொஞ்சம் இருக்கிறது.

அவர் ரஷ்யத் தலைவர் அல்லர். உலகத் தலைவர்.

Parimala Rajan

காவிகளே,

நீங்கள் கை வைப்பது எங்கள் தலைவர்களின் சிலைகள் மீதல்ல, இந்திய ஒன்றியத்தின் இறுக்கத்தின் மீது.

“உடைந்து போகும்”

Villavan Ramadoss

இதுவரைக்கும் கலவர ரிஸ்க்கைதான் சூத்திரவாகிட்ட தள்ளிவிட்டேள்,…இப்போ கருத்தோட ரிஸ்க்கையும் சூத்திரவாகிட்ட தள்ளிவிடறேள்… அட்மின் நீக்கம் – எச்சையார்.

அழகப்பன் அப்துல் கரீம்

அழுத்தமான பதிவு!

”எச்.ராஜா எந்த இனத்திற்காக பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.”

– தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

Dhalapathi Raj

ஈவெரா சிலைகளை அகற்றுவோம்!
-எச்.ராஜா ட்விட்டர் பதிவு.

‘அவனுக்கு என்ன நாலு செக்யூரிட்டியோட சுத்திண்டு இருக்கன். நம்மவா நாளைக்கு ரோட்டுல நடமாடுறதா வேணாமா?’
-பார்ப்பனர்கள் பீதி!

எச்.ராஜா ட்விட்டர் பதிவு உடனடியாக நீக்கம்!
-தற்போதைய செய்தி.

பாப்பானுக்கு முன்புத்தி கிடையாது!
-பெரியார்.

Arunachalam Elagnairu

லெனின் புரட்சி செய்தார்
சிலை வைத்தார்கள்..

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்தார்.
சிலை வைத்தார்கள்.

பெரியார் மூடத்தனத்தை எதிர்த்தார்
சிலை வைத்தார்கள்.

காந்தி விடுதலைப்போரில் முன்நின்றார்
சிலை வைத்தார்கள்

அண்ணா திராவிட நாடு என்றார்
சிலை வைத்தார்கள்.

ஒங்க கட்சியில் இப்பிடி ஒருத்தர் இருந்தா சொல்லுங்க..சிலை வைச்சுடலாம். மசூதிய இடிச்சவன் .. பாதிரியார எரிச்சவன்.. தேசத்த காட்டிக்குடுத்தவன், பிரிட்டிஷ்காரன்கிட்ட மன்னிப்பு கேட்டவன் இப்பிடியான ஆளா இருந்தா எப்பிடிப்பா சிலை வைப்பாங்க..

போ..போயி..பெரியார் சிலையாண்ட பத்து தோப்புக்கரணம் போட்டுட்டு போ..

Syed Abdul Kadhar

நபியை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய போது, கிளர்ந்தெழுந்த தமுமுகவும் தவ்ஹீது ஜமாதும், பெரியாரை இழிவு படுத்தும் போதும் கிளர்ந்தெழ வேண்டும் என்கிற நப்பாசை எழுகிறது. அது தேவையும் கூட.

சிறுபான்மையினர் மீதான ஆர்.எஸ்.எஸ் வன்முறைகளுக்கெல்லாம் ஒரு தடுப்பணையாக பெரியார் இருக்கிறார். அந்த தடுப்பணை உடைக்கப்படும் போது, ஆபத்து யாருக்கு என்று சொல்லித் தெரிய வேண்டுமா?

Vijayasankar Ramachandran

திரிபுராவில் லெனின் சிலையை நான் ஊரில் இல்லாதபோது அட்மின்கள் தகர்த்துவிட்டனர். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

Vijayasankar Ramachandran

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்தியாவும் சிரியா மாதிரி ஆகிவிடும் என்று பகிரங்கமாக மதவாத அரசியல் பேசியிருக்கிறார் ஆன்மீகம் பேசும் சிரி சிரி ரவிசங்கர். இரு மதக் குழுக்களிடையே பதட்டம் ஏற்படுத்தும் இந்தக் கருத்து இந்திய தண்டனையியியல் சட்டத்தின் 153A யின் கீழ் தண்டனைக்குரியது.

Section 153A:- Promoting enmity between different groups on ground of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் சண்டே அப்சர்வர் என்கிற பத்திரிக்கைக்கு இந்த சுவாமி அளித்த பேட்டியில் தெய்வீகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. “தெய்வீகம் எல்லா இடத்திலும் இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் உள்ளேயும் இருக்கிறது” என்றார்.
இதை அடுத்து அயோத்திப் பிரச்சினையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல், ‘ராமர் பிறந்த அந்த இடத்தை நாம் எப்படி அவர்களுக்கு விட்டுத்தர முடியும்” என்று பதிலளித்தார். தெய்வீகம எல்லா இடத்திலும் இருக்கிறதென்றால், அயோத்திதான் புண்ணிய பூமி என்று எப்படிச் சொல்லலாம் என்று நிருபர் கேட்கவில்லை.
இது வாழும் கலையா? வம்பு வளர்க்கும் கலையா?

 

சந்தா