privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !

காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !

-

காஷ்மீரில் 3 அப்பாவி மக்களை படுகொலை செய்த ராணுவ அதிகாரி மீதான விசாரணையை நிறுத்தி வைக்க மார்ச் 5 (5-3-2018) அன்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி தங்கள் வீ டுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள் ஷோபியன் வட்டாரத்தைச் சேர்ந்த கன்வப்ரா பகுதி மக்கள். அங்கு வந்த ராணுவத்தின் 10 கர்வால் ரைபிள் படையினர் கருப்புகொடியை அகற்ற வலியுறுத்தியுள்ளனர். மக்கள் அதை மதிக்கவில்லை இராணுவத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் அமைதியாக கருப்புகொடி ஏற்றிய மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவத்தின் இத்தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரழந்தனர். சில பத்திரிகைகளில் போஸ்டரை நீக்க இராணுவத்தினர் கோரியதாகவும் மக்கள் அதை நீக்க மறுத்ததால் இராணுவத்தினர் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பதிலுக்கு மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் காஷ்மீரில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியது. தொடர்ச்சியான போராட்டங்களினால் காஷ்மீரின் ஆளும் பா.ஜ.க-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி வேறு வழியில்லாமல் நீதித்துறை விசாரணைக்கு(magisterial inquiry) உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேற்கண்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டு அதை வழிநடத்தியது மேஜர் ஆதித்திய குமார் என்ற ராணுவ அதிகாரி ஆவார். இந்நிலையில் குமாரின் தந்தை கரம்வீ ர் சிங் தன் மகன் மீது நடைபெறும் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார். இவர் லெப்டினல் கார்னலாக இருந்து ஒய்வு பெற்றவர் ஆவார்.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரித்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘மருத்துவ கல்லூரி ஊழல் புகழ்’ தீபக் மிஷ்ரா, நீதிபதி கான்வில்கர், நீதிபதி சந்திருசத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி போலீஸ் இவ்வழக்கில் மேஜர் ஆதித்ய குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மேஜர் குமார் மீதுமட்டுமல்ல மூன்று அப்பாவி மக்களை கொன்ற துப்பாக்கி சூடு குறித்தும் எவ்வித விசாரணையும் செய்ய கூடாது என்று ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இராணுவ தாக்குதலுக்கு பதிலாக கல்வீச்சில் இறங்கிய இளைஞர்கள்

இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் நிலைமை ஆலமரத்தடி பஞ்சாயத்தை விட மிக மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது.

நேற்று இவ்வுத்தரவு வெளியான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் என்று இராணுவத்தினர் சுட்டுக்கொன்றவர்களில் பலர் கிராஸ்பயரில் கொல்லப்பட்டவர்கள் என அம்மாநில முதல்வர் மெபூபா முஃப்தி உறுதிபடுத்தியுள்ளார். தீவிரவாதியும் அவனது கூட்டாளிகளும் கொல்லப்பட்டார்கள் என இராணுவத்தினர் தெரிவித்திருந்த நிலையில் தீவிரவாதியுடன் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் என குறிப்பிட்டுள்ளார் அம்மாநில முதல்வர்.

வழக்கம் போல விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளது எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி. இந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் தடை செய்யும்.

இதை புரிந்துகொண்டதால் தான் காஷ்மீர் மக்கள் நீதிமன்றங்களுக்கு பதில் தெருக்களில் தங்களால் முடிந்த அளவிற்கு கற்கலால் பதிலளிக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்
J&K CM Mehbooba Mufti contradicts Army’s claim, calls those killed in Shopian civilians
‘Army officer, not ordinary criminal’: SC stays inquiry against officer in Shopian firing

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க