privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பிரணவ மந்திரம் தெரியாதவனுக்கு பிசிக்ஸ் ஒரு கேடா !

பிரணவ மந்திரம் தெரியாதவனுக்கு பிசிக்ஸ் ஒரு கேடா !

-

// Stephen Hawking -க்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஏய் தமிழர்களை அழிக்க வந்த நியூட்ரினோவே என்று கூச்சலிடும் அளவிற்குத்தான் தமிழர்களுக்கு பௌதீக அறிவு இருக்கிறது…
“neutrinoனா என்ன?!”
“அந்நிய சதி சார்…”
“நல்லது…” ///

*****

டைம்லனில் இப்படி ஒரு போஸ்ட் பார்த்தேன். யாரோ ஷேர் செய்திருந்தார்கள்.
உடனே இதை எழுதியவர் யார்… என்ன என்கிற ஆராய்ச்சியெல்லாம் பண்ணவேண்டாம்.
விஷயம் என்னவென்றால், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த அன்று இதுமாதிரியான அதிமேதாவி அங்குமுத்துகளின் ஸ்டேடஸ்களை அதிகமாகவே காணமுடிந்தது. நியூட்ரினோ எதிர்ப்பாளர்கள் அல்லது ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சலி போடுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள், அல்லது இவர்களெல்லாம் அறிவியலும் தெரியாத சுற்றுசூழலும் தெரியாத மண்ணாந்தைகள் என்கிற எண்ணங்களோடு போடப்பட்ட பதிவுகள் இவை எனப் புரிந்துகொள்ளலாம்!

முதலில் இங்கே யாருமே நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்கவில்லை, அது மானுடகுலத்திற்கு நன்மை பயக்கும் நல்ல ஆராய்ச்சியாகவே இருந்து தொலைக்கட்டும்! அதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கி அப்துல்கலாம் வரை ஆதரவு தெரிவித்திருக்கட்டும்! தமிழ்நாட்டில் தமிழர்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள்? அதை நிறைவேற்ற மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.

பத்து அணைகள் சூழ்ந்த, ஏராளமான இயற்கைவளங்களும் காட்டு விலங்குகளும் அடர்ந்திருக்கிற மலைப்பகுதியில் இத்தனை பெரிய திட்டத்தை மேற்கொண்டால் என்ன மாதிரியான பின்விளைவுகள் உண்டாகும் என்பதை அறிந்துதானே இங்கே எல்லோருமே நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள்!

அத்தனை பெரிய துளைபோடும்போது உண்டாகிற மாசால் அணைநீர் பாதிக்கப்படும், விலங்குகள் இடம்பெயறும், மனித நடமாட்டம் அதிகம் ஆகும்போது பாதிப்புகள் உண்டாகும் என்பதால்தான். கூடவே அணைநீரை நம்பி இருக்கிற பல நூறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்! இன்னுமொரு முக்கியமான சிக்கல் இந்தியா மாதிரியான இன்னும் அடிப்படை வசதிகளைக் கூட மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திடாத வளரும் நாட்டில் இப்படி ஒரு ஆராய்ச்சிக்கான தேவை என்ன என்கிற கேள்வியும்தான்! இந்திய அணுசக்தித்துறை ஏன் இந்த ஆராய்ச்சியில் பங்குபெற்றுள்ளது என்கிற சந்தேகமும் எல்லோருக்கும் உண்டு!

இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மண்ணாந்தைகள்தான் இப்படி அரைவேக்காட்டுத்தனமாக ஆபாயில்தனமாக… இரண்டும் ஒன்னுதானோ… சரி விடுங்க…

இங்கே எல்லோருக்குமே பொதுசார்பியல் கோட்பாடும், அண்டவியலும், குவாண்டம் இயங்கியலும் பத்து சதவீதம் கூட முழுமையாகத் தெரியாது. எல்லோருக்குமே குத்துக்கு மதிப்பாக கும்ஸாகத்தான் தெரியும். அதை முழுமையாக புரிந்துகொள்கிற ப்ரொபஷனல்கள் வெறும் 0.0001 சதவீதம்தான் இருப்பார்கள். இவ்வகை ஸ்டேடஸ்களைப் போட்டவர்களிடம் போய் “ஹாலோகிராபிக் பிரின்ஸிபிள் பற்றி பத்துவரிக்கு மிகாமல் சொல்லுங்கள்” என்று கேட்டுப்பாருங்களேன். அறிவியல் விஷயத்தில் இங்கே எந்தக்கொம்பனும் கொம்பனில்லை! எல்லோருமே பயணிகள்தான்.

அடுத்து நியூட்ரினோ போராட்டத்திற்கு வருவோம். இங்கே எந்த போராட்டத்திலும் கலந்துகொள்கிற யாரும், அல்லது போராட்டங்களை ஆதரிக்கிற யாரும் அப்படியெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரித்துவிடுவதில்லை. களத்தில் போராடுகிறவனுக்கு நம்மைப்போல லைக்கு கூட கிடைக்காது. பெட்டக்ஸில் ஒவ்வொருமுறையும் தனித்துவமான தமிழ்நாட்டு காவல்துறையின் அடிவேண்டுமானாலும் கிடைக்கும்! ஓரளவு அடிப்படைகளையாவது புரிந்துகொண்டுதான் ஆதரிக்கிறார்கள். அதுதான் களநிலவரம். இந்தப்போராட்டங்களில் நாம் சந்திக்கிற பழுப்பு நிற வேட்டியும் கந்தலான சட்டையுமாக வலம்வரும் எத்தனையோ அண்ணன்களுக்கு நம்மைவிடவும் அறிவியல் அதிகம் தெரியும்.

*****

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்குப் பிறகு இப்படிப்பட்ட அறிவியல் அறிஞர்கள், இயற்பியல் மாமேதைகள், அணுவிஞ்ஞானிகள் எல்லாம் வெளியே வந்து ”ஏ முட்டாள் தமிழினமே… கருந்துளைக்கு பிறந்த கழுதைகளே… உங்களுக்கெல்லாம் பிசிக்ஸ் தெரியுமா… அது தெரியாமல் என்ன மண்டேக்கு நீயெல்லாம் அஞ்சலி போடுகிறாய்’ என்பது மாதிரி நிறைய போஸ்ட்டுகள், கலாய்கள், கேலிகள் மற்றும் கேவலங்களைக் காண முடிந்தது.

“விக்கிபிடீயா பார்த்துதானே ஸ்டீபனை தெரிந்துகொண்டாய்” என்கிற கேவலக்குரல்கள் நிறைய கேட்கின்றன. எல்லா மாமேதை மயிராண்களும் ஏதோ ஒரு காலத்தில் விக்கிபீடியா மாதிரி அடிப்படை ஆவன்னாவைப் பார்த்துதான் ஆரம்பிக்கிறார்கள்.

யாருமே பிறக்கும்போதே கந்தபெருமான் போல பிரணவ மந்திரம் அறிந்து பிறந்தவர்கள் அல்ல! ஸ்டீபனை… ஸ்டீபன் இறந்தநாளில் தெரிந்துகொண்டு தொடங்கினால்தான் என்னவாம்…்

நன்றி : Athisha Vino