privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?

கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?

"கவர்னர் தாத்தா" -வின் களச் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? வாக்களியுங்கள்...

-

டப்பாடி பழனிச்சாமியின் ‘சீரிய’ ஆட்சியில் ஆளுநரின் பங்கும் ‘மகத்தானது’. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு “ஆய்வு” மேற்கொள்ளச் செல்கிறார். காவல்துறை அதிகாரிகளை அழைத்து சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கிறார். மாவட்ட ஆட்சியர்களோடு நிர்வாகம் பற்றி பேசுகிறார். இதை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்பவர்களின் மேல் “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று இப்போது அறிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்பு என்ன, அதில் அரசியல் சாசன சட்டப்படி கவர்னரின் செயல்பாடுகள் என்ன? போன்றவை பா.ஜ.க-வின் அடிமைகளான ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணையருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் அத்து மீறும் ஆளுநர் குறித்து அவர்கள் ஆத்திரமாவதற்கு பதில் ஆளுநரின் ஆய்வுப் பணியினால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். இந்த மானக்கேட்டிற்கு ”அம்மாவின்” ஆட்சியே பரவாயில்லை என்று திமுக பேச்சாளர்களே சொல்லும் நிலையை ஏற்படுத்தி ”புரட்சித்” தலைவியை புனிதத் தலைவியாக்கியுள்ளனர் அன்னாரின் விழுதுகள்.

போகட்டும். ஆளுநர் ஆட்சியாளராக மாறி வந்த நிகழ்ச்சிப் போக்கு அதன் தர்க்கப்பூர்வ எல்லையை அடைய வேண்டுமல்லவா? தற்போது ‘விபச்சார புரோக்கர் நிர்மலா தேவியின்’ வாயில் விழுந்ததன் மூலம் அந்த உச்சநிலையையும் எய்தி முழுமையடைந்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ”கவர்னர் தாத்தா இல்லை” என்று நிர்மலாதேவி வழங்கிய சான்றிதழின் பொருள் அவரது ‘களச்செயல்பாடுகள்’ குறித்து சொல்லப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது. இது குறித்து விசாரிக்கும் இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்டான தமிழக போலீசாரும் அதை கண்டு பிடிக்கப் போவதில்லை என்பது ஊரறிந்த விசயம்.

இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அடித்துக் கூறிவிட்ட ஆளுநர், அதை நிரூபிக்க தானே முன்வந்து விசாரணைக் கமிசன் ஒன்றையும் நியமித்துள்ளார். இந்த விசாரணைக் கமிசன் ஆளுநரின் யோக்கியதைக்கு ஒரு நற்சான்றுப் பத்திரத்தைத் தயாரித்து அதைத் தனது விசாரணையின் முடிவில் அறிக்கையாக ஆளுநரிடமே சமர்பிக்கும் தன்மீதான பிராதைத் தானே விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்பது தமிழ் சினிமா நாட்டாமைகளே ஒப்புக்கொள்ளும் எளிய நியாயம்.

ஆனால், தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளின் எட்டரை மணி பஞ்சாயத்தார் இதில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தர்க்க நியாயங்களையும் விரிவாகப் பேசி முட்டைக்கு விக்கு போட்டுக் கொண்டிருந்தது தனிக் கதை.

தமிழகத்தில் மோடிக்கு அடுத்து மிக அதிகம் வெறுக்கப்படும் நபர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க எஸ்.வி. சேகர் மற்றும் ஹெச்.ராஜா ஆகியோரோடு போட்டியில் இறங்கியுள்ளார் ஆளுநர். எனினும், ”ஆட்சி” எனும் பெயரில் நடந்து கொண்டிருக்கும் அலோங்கோல நாடகத்தில் எதையும் தாங்கிக் கொள்ளும் ஜென் நிலைக்கு சிலர் சென்று விட்டதையும் நாம் கணக்கில் கொள்ளத் தான் வேண்டும். “இவர்கள் ஒழுங்காக இல்லாத நிலையில் ஆளுநராவது ஆய்வு கீய்வுன்னு ஏதோ செய்யறாருங்களே” என அப்பிராணியாய்ச் சிந்திக்கின்றனர். மெய் உலகில் இவ்வாறு சிந்திப்பவர்கள் வெகு சிலர் தான் என்றாலும் மெய் நிகர் உலகின் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ளவே இந்த கருத்துக் கணிப்பு.

பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது?

  • அதிகாரத்திற்குப் புறம்பாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவது
  • பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை துணை வேந்தர்களாக நியமிப்பது
  • தன் மேலான புகாரைத் தானே விசாரிப்பது
  • பாலியல் குற்றச்சாட்டு
  • கருப்புக் கொடி காட்டுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருப்பது.
  • எதுவுமில்லை. கவர்னர் ரொம்ப நல்லவருங்க.