தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இலண்டன் ஆல்ட்விச்சில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பு ஃபாயில் வேதாந்தா (வேதாந்தாவை மூடு) , ஐக்கிய முடியரசின் தமிழ் மக்கள்,  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம், தெற்காசிய ஒற்றுமைக் குழு, தமிழர் ஒற்றுமை, பறை – சுதந்திரத்தின் குரல் மற்றும் வீரத் தமிழர் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் இப்போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் மீது இலண்டனிலும் இந்தியாவிலும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இப்போராட்டம் நடத்தப்படவிருக்கிறது. இலண்டனில் உள்ள தமிழ்மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யவும்.

தொடர்புக்கு
சமரேந்திர தாஸ்
07941 475103 (இலண்டன்)

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க