ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு இறுதி வெற்றி கிடைத்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர். பல ஊடகங்களும் அதை வழிமொழிகின்றன.
உண்மையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? காவிரி நியூஸ் விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம்.
ஸ்டெர்லைஐட் ஆலையை மூடுமாறு எடப்பாடி அரசு போட்டிருக்கும் அரசாணை நாக்கு வழிக்க கூடாது என்பதை, அனைத்து சாதி அர்ச்சகர் ஆணையை சான்று காட்டி நிரூபிக்கிறார் கற்பகவிநாயகம். அதே போன்று போராடிய மக்களை தீய சக்தி என்று பேசும் அதிமுக சமரசத்தை கடுமையாக கண்டிக்கிறார். நடுநிலை பத்திரிகையாளர் என்று வேசம் போடும் கோசல்ராமை போலீசு ஆதரவு பத்திரிகையாளர் என்று போட்டுடைக்கிறார்.
பாருங்கள்.
தந்தி யை தவிர்த்து மற்ற ஊடகங்களில் மக்கள் அதிகாரம் அதிகம் பங்கேற்கவேண்டும்
நேற்று News 18 tamil சேனலயும் தோழர்கள் தியாகு மற்றும் ராஜு விவாதத்துல பங்கேற்றனர். திரும்ப திருமப சமூக விரோதிகள் கலந்து விட்டனர் அதனால்தான் துப்பாக்குச்சூடு என்று அப்பட்டமாக பொய் சொல்றாங்க. மக்களை முட்டாளுக்குவதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.
விவாதத்தின் இடையில் ரஜினி மருத்துவமனையில் சென்று பார்த்ததை போட்டு காண்பிக்கின்றனர். எல்லோரும் வாய் நிறைய சிரிப்புடன் கை குலுக்குவது, செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிகள் பார்க்க நெருடலாக அமைந்தது. விவாதத்தில் பேசும் கருத்துக்களை விட அக்காட்சிகள் வேறொன்றை உணர்த்தியது.