Tuesday, October 14, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்பு#MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் ? கருத்துக் கணிப்பு

#MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் ? கருத்துக் கணிப்பு

#MeToo சினிமா, தொலைக்காட்சி, ஊடகம், இலக்கியம், தனியார் நிறுவனங்கள்....எங்கே பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்? வாக்களியுங்கள்!

-

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் துவங்கியது #MeToo இயக்கம். தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், அதைச் செய்யும் பொறுப்பிலுள்ள ஆண்களை, சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி வருகிறார்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள்! ஈவ்டீசிங் எனும் பதமே பாலியல் துன்புறுத்தலின் தீவிரத்தை தளர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில் முன்னர் சொன்னது ஒரு தவறு, பின்னதோ ஒரு தண்டனைக்குரிய குற்றம்!

இந்த #MeToo இயக்கத்தின் மூலம் இந்தியப் பெண்களுக்கு அவர்களது பணியிட உரிமை, பாதுகாப்பாக பணியாற்றும் உரிமைகள் கற்றுத் தரப்படுகின்றது. போலவே படித்த ஆண்களுக்கும் இப்பிரச்சினையின் பரிமாணத்தை அறிமுகம் செய்கிறது.

தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர். இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையாகவே  இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர்.

இன்றைய கேள்வி: #MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
(மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)

சினிமா
ஊடகம்
தனியார் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
அரசியல் கட்சிகள்
இலக்கியம்
பல்கலைக் கழகங்கள்

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13