Sunday, January 16, 2022
முகப்பு தலைப்புச் செய்தி ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.

-

சங்கம் கேட்டால் டிஸ்மிஸ் ! ஓசூர் மைக்ரோ லேப் நிர்வாகம் அட்டகாசம் !

சூர், சிப்காட் – 1, பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் micro labs ஆலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடிவரை வர்த்தகம் நடக்கின்ற இந்த ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் 300 பேர் உள்ளனர். உயிர் காக்கும் மருந்து உற்பத்தி என்பதால் தங்கள் உயிரை பணயம் வைத்து பலவிதமான கெமிக்கல்களை கையாண்டு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக இயங்கும் இவ்வாலையில் தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு கேட்டவுடன் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட், விசாரனை, சம்பள வெட்டு என வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது ஆலை நிர்வாகம்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை கோறியதற்காக 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது நிர்வாகம். அப்போது சென்னை தொழிலாளர் ஆணையர் தலையிட்டு பிரச்சனையை தற்காலிகமாக பேசித் தீர்த்து வைத்தார்.

படிக்க :
ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

2011-இல் தொழிற்சங்கத்தை இரண்டாக உடைந்தது நிர்வாகம். நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியான 21 தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், தற்போது 2017 – ல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சங்கம் கோரியவுடன் 23 தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 12 பெண் தொழிலாளர்கள் மீது விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்யும் 56 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் சட்டபூர்வ உரிமைகளை மறுத்து செப்டம்பர் மாத சம்பளத்தில் இருபது நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டு வேலைநிறுத்தத்தை தூண்டுகிறது நிர்வாகம்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சட்டபூர்வ உரிமைகளை கோரினாலே தொழிலாளர் வாழ்வுரிமை பறிப்பது என்றால் நிர்வாகம் என்ன நினைக்கிறது? சட்ட விரோதமாக செயல்பட தைரியம் கொடுப்பது யார்? நிர்வாகத்தின் சட்ட விரோதமான செயல்களை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது நியாயம் இல்லை, ஆகையால் நிர்வாகத்தின் மேற்கண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், கோட்டாட்சியர் இதில் தலையிட்டு நிர்வாகத்திற்கும் சங்கத்திற்குமான பிரச்சினையை தீர்த்துவைக்கக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 22.10.2018 திங்கள் மாலை 5 மணி அளவில் ஒசூர் ராம்நகரில் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் திரு. நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் திரு. சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். திரளான அளவில் எமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற ஆலைத்தொழிலாளர்கள் பெண்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவுச் செய்துள்ளனர்.

தகவல் :
திரு சீனிவாசன், சங்க செயலாளர்,
micro labs பிரவுன் & பர்க் தொழிலாளர்கள் சங்கம்,
ஓசூர். பதிவு எண்: 503/DRP.

 1. ஓசூர் மைக்ரோ ஆலையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் வீடியோ கவரேஜ் செய்தது
  சட்டவிரோதம் இல்லையா?
  மனித உரிமை மீறல் இல்லையா?

  மாநில மகளிர் ஆணையமே தலையீடு!
  மாநில மனித உரிமை ஆணையமே தலையிட்டு!

  மைக்ரோ லேப்ஸ் பிரவுன் & பர்க் தொழிலாளர் சங்கம் ,503 /டிஆர்பி, ஒசூர்.

 2. இந்த கேடுகெட்ட கம்யூனிஸ்ட்களை நம்பினால் இப்படி தான் ஆகும்… முதலில் ஊதிய உயர்வு வாங்கி தருகிறேன் போராட்டம் நடத்த வாருங்கள் என்று அழைப்பார்கள் அடுத்து தொடர் போராட்டம் என்ற பெயரில் கம்பெனியை முடக்குவார்கள், அடுத்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலையில்லாமல் நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள்.

  கம்யூனிஸ்ட்களை நம்பினால் நாசமாக போக வேண்டியது தான். தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதிகள் தான் கம்யூனிஸ்ட்கள்.

  • உழைச்சி சாப்பிடுறவன் சம்பளம் பத்தலனா போராடத்தான் செய்வான். பிரியாணி அண்டா திருடுறதுகளுக்கு அது எங்க தெரிய போகுது.

   சங்கிகளும் நம்மை போல இந்துக்கள் என அப்பாவியாக நம்பும் தொழிலாளிகள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

   • ஊதிய உயர்வு என்பது வேறு, தொழிற்சாலையை செயல்படவிடாமல் முடக்குவது என்பது வேறு, கம்யூனிஸ்ட்கள் அடிப்படை நோக்கம் தொழிற்சாலைகளை செயல்பட விடாமல் முடக்குவது, அதன் பின்விளைவு தொழிலாளிகள் அனைவரும் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வருவது.

    கம்யூனிஸ்ட்கள் வலுவாக இருக்கும் அணைத்து மாநிலத்திலும் இதை பார்க்கலாம் (உதாரணம் கேரளா மேற்கு வங்கம்) அதனால் அந்த மாநிலங்களுக்கு எந்த தொழிற்சாலையும் வருவதில்லை, அந்த மாநில மக்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று அவதிப்படுகிறார்கள்.

    சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொய் சொல்லி மூடினார்கள், இப்போது ஓசூர் மைக்ரோ லேப்… மக்கள் விரோத, தொழிலாளி விரோத கம்யூனிஸ்ட்களால் என்றுமே தீமை தான்.

 3. மணிகண்டன் மைக்ரோ லேப்ஸ் பிரச்சனை படித்த பின் ஓர் தீர்வை முன்வைக்கலாம்.

  ஊதிய உயர்வு வழங்கி

 4. ஊதிய உயர்வு வேண்டும் என சங்கம் கோரிக்கை வைத்தவுடன் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முதலாளிகள் ஏன்

  தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்க அருகதை அற்றவர்களா?

  தொழிலாளர்களின் உழைப்பில் உருவான பொருளை சந்தையில் விற்று கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் ஊதிய உயர்வு கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்?

  தொழிலாளர்களின் உழைப்பை கடலில் கொண்டு கொட்டுகிறார்கள் என்ன அல்லது கோவில் குளங்களுக்கு தர்மம் செய்கிறார்களா என்ன?

  ஊதிய உயர்வு வழங்க முடியாது என காரணத்தை விளக்கி ஒரு கணக்கீட்டை வெளியிட வேண்டியது தானே?

  பெண் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, உரிமை என்று வாயை திறந்தாலே கேமராவை ஆன் செய்கிறார்களே ஏன்?
  நேற்று குளோபல் பார்மா டெக் இன்று microlab!

  சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காதது ஏன் ?
  அற்பக் கூலியை வைத்து சுரண்டுவது ஏன்?

  மணிகண்டா பதில் சொல்?

  • nellaiyappan கம்யூனிஸ்ட்கள் எதை செய்தாலும் அதை முற்றிலும் புறக்கணிப்பவன் நான், அவர்களின் நோக்கத்தில் நேர்மையும் உண்மையும் கிடையாது, இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தீமை செய்வது மட்டுமே கம்யூனிஸ்ட்கள் அடிப்படை கொள்கை.. அதற்கு தூத்துக்குடி விவகாரமே சாட்சி… மைக்ரோலேப் விஷயத்திலும் நிச்சயம் கம்யூனிஸ்ட்களுக்கு தீய
   உள்நோக்கம் எதாவுது இருக்கும் இல்லாமல் இருக்காது.

   மேலும் உங்களின் வார்த்தைகளை எல்லாம் நம்பும்படி இல்லை.

   பெண்களுக்கு எதிராக நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்புகள் அதிகம் காரணம் தொழிற்சாலையை நடத்துபவனுக்கும் தாய் மனைவி பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்… பணி நிரந்தரம் அவர்களின் appointment ஆர்டரில் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமல் எதுவும் சொல்ல முடியாது.

   நிச்சயம் கம்யூனிஸ்ட்கள் தொழிலாளிகளுக்கு எதிரானவர்கள் தான்.

 5. Manikandan அவர்கள் RSS,பா.ஜ.க மற்றும் கார்ப்பரேட்களின் கைக்கூலி என்பதை தொடர்ந்து தனது பதிவுகள் மூலம் நிரூபிக்கிறார்.தான் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரிதான் என்று சுயவாக்குமூலமே கொடுத்துள்ளார் இதற்கு மேல் என்ன வேண்டும்? மணிகண்டன் அவர்கள் என்ன வேலை செய்கிறார் என்று தெரியவில்லை.ஒரு வேளை RSS ன் IT wingல் முழுநேர ஊழியராக இருக்கலாம்? இவரது முதலாளித்துவ விசுவாசம் இப்படி மெனகிடவைக்கிறது…

  • இந்திய கம்யூனிஸ்ட் வரலாறு தெரிந்தவர்கள், (மனசாட்சி உள்ள) யாருமே அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட்களால் இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்டது எல்லாமே தீமைகள் மட்டுமே. கம்யூனிஸ்ட்கள் சீனா பாகிஸ்தான் கைக்கூலிகள், அதையும் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலோ வெட்கமோ இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.

 6. மணிகண்டன் அவர்களே

  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை ஒரு முதலாளி சுருட்டுவது எதிர்ப்பது கம்யூனிஸ்டுகளின் வேலை.
  சீனாவின் கைக்கூலி பாகிஸ்தான் கைக்கூலி என்று சொல்லுவதற்கு இதிலென்ன இருக்கிறது? உழைப்புக்கான கூலியை கேட்டால் கைக்கூலி என்பதா?

  microlab ஆலையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் போட்டோ எடுத்து அதை ஆதாரமாகக் கொண்டு நிர்வாகமே விசாரணை நடத்தி வருகிறது
  மணிகண்டன் இமெயில் ஐடி பதிவிடுங்கள்,ஆதாரம் அனுப்புகிறேன்.

  • பெண்களை புகைப்படம் எடுத்தார்கள் என்று நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை… காரணம் ஒருவரை பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்றால் அவனை பெண்களோடு தொடர்பு படுத்தினால் போதும் என்று சொல்வார்கள்…. முக்கியமாக அனைத்து தீவிரவாத இயக்கங்களும் ராணுவத்திற்கு எதிராக அவதூறு பரப்ப இந்த மாதிரி பிரச்சாரம் செய்வார்கள்.

   உண்மை தெரியாமல் இது இதை நான் நம்பவில்லை, அடுத்து கம்யூனிஸ்ட்கள் எது சொன்னாலும் அது பொய்யாக தான் இருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

   இந்திய கம்யூனிஸ்ட்கள் பெரிய தொழிற்சாலைகளை எதிர்ப்பதற்கு அடிப்படை காரணம் சீனா தான்… இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கி நாட்டை பலவீனப்படுத்துவது இந்திய கம்யூனிஸ்ட்கள் கொள்கை… இதன் மூலம் சீனாவை ஆசியாவின் சக்தியாகவும் இந்தியாவை பலவீனமான தேசமாகவும் மற்ற பார்க்கிறார்கள்.

 7. ஹெச் ஆர் அதிகாரிக்கு ஒரு ஜான் தான் வயிறு ஆனால் சம்பளம் ஒரு லட்சத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார்கள் ஏன்?
  தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது அடக்குமுறையை ஏவி விடுவது இதற்காகத்தான் லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் உங்களுக்கு தெரியுமா?

  சட்டவிரோதமாக ஒப்பந்த தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் பயன்படுத்துகிறார்கள் என்பது என்கிறீர்களா?

  பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்த ஐம்பத்தாறு தொழிலாளர்கள் பணி நிரந்தர ஆணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை எழுப்பி இருக்கிறார்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்? மணிகண்டன் அவர்களே இது ஒரு ஆதாரமாக உங்களால் எடுத்துக்கொள்ள முடியுமா?

  • நீங்கள் ஒரு விஷயத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் என்பது ஒன்று ஆனால் இன்னொரு பக்கமான முதலிய நீங்கள் பார்ப்பது இல்லை… அந்த தொழிலுக்கு தனது வாழ்க்கையையும், தனது சொத்துக்கள், கடன் வாங்கி முதல் போட்டு, அந்த தொழில் வெற்றி பெற இரவும் பகலும் கடினமாக உழைத்து வெற்றி பெற்று வருபவன் தான் முதலாளி. யாருமே தொழிற்சாலையை சுலபமாக நடத்துவது இல்லை… முதலாளியின் மிக கடுமையான உழைப்பையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

   அதனால் தொழிலாளிகளின் நலனை புறக்கணிக்க கூடாது அதே சமயம் தொழிற்சாலையின் (முதலாளியின்) நலனையும் நாம் புறக்கணிக்க கூடாது. தொழிற்சாலைகள் ஒழுங்காக செயல்பட்டால் தான் தொழிலாளிகள் நலமாக இருக்க முடியும்.

   தொழிலாளிகளின் நலன் மட்டுமே எனக்கு தொழிற்சாலையை பற்றி எந்த அக்கறையும் கிடையாது என்பது அழிவிற்கு தான் தான் வழி வகுக்கும்.

 8. வீடியோ எடுத்தது அதற்கான ஆதாரத்தை நான் உங்களுக்கு அனுப்புகிறேன் உங்களுடைய மெயில் ஐடி தாருங்கள் , மணிகண்டன் அவர்களே.

  சிறு வித உற்பத்தியாளர்கள் முதலாளிகள் பற்றிய நெருக்கடி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை அதனை காட்டியே கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை அடக்குமுறையை எப்படி ஏற்றுக் கொள்வது?

  கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனம் உருவான வரலாறை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் டாடாவின் மூலதனம் உருவானது அம்பானியின் மூலதனம் உருவானது அனைத்தும் பொதுமக்களின் பங்குகளிருந்து பொது சொத்துக்களிலிருந்து அரசிடம் இருந்து பறிக்கப்பட்டது .மற்றொரு பக்கம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது ஒருவேளை அந்த தொழில் படுத்துவிட்டால் நடத்தமுடியாது நட்டம் என ஏற்பட்டுவிட்டால் டாடாவோ அம்பானியோ கவலைப்படப்போவதில்லை அத்தனையிலும் பொதுமக்கள் தலையிலும் சுற்றி விடுவார்கள்.
  பொது மக்கள் வரிப்பணத்தில் ஏவிவிடப்பட்ட சேட்டிலைட் என்று அம்பானி முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கிறான் முதலாளி அதாவது அம்பானி இதுல எடுத்த ரிஸ்க் என்ன?

  லாபத்தின் அளவு என்ன ?தொழிலாளரின் கூலி என்ன?
  இதை வரையறுத்து வெளிப்படையாக முதலாளிகள் செயல்படுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?
  செயல்படத் தயாரா?

  உற்பத்தி கொள்கை,விற்பனை கொள்கை என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள் . தொழிலாளர்களின் ஊதியக்கொள்கை என அறிவிக்க தயாரா?

  தொழிலாளர்கள் கூலி தானே கேட்கிறார்கள் மொத்த சொத்தையுமா கேட்கிறார்கள்?

  ஓசூர் microlab ஆலையில் சங்கத்திலிருந்து நாங்கள் விலகி விட்டோம் என்று ஒப்புக்கொண்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
  ஏன் தந்தார்கள் தெரியுமா ?

  தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக செயல்படக் கூடாது என்று விரும்புகிறார்களே ஏன்?
  தொழிற்சங்கம் வைத்துக் கொண்டு நிர்வாகத்தை தொழிலாளர்கள் கொடுத்து விட்டார்களா?

  எச்.ஆர் அசோசியேசன் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் இதற்கு தொழிலாளர்கள் குறுக்கே நிற்கிறார்களா?

  முதலாளிகளின் சிரமத்தை பற்றி பேசும் நீங்கள் தொழிலாளர்களின் சிரமத்தை பற்றி ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா என்று ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களை மிகக் கேவலமாக சுரண்டுகிறார்கள் அதைப்பற்றி ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா ஒரு தொழிலாளியின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா அவர்களுக்கும் மனைவி குழந்தைகள் என்று இருக்கிறது உங்களால் உணர முடியுமா

  அருகாமையிலிருக்கும் ashok leyland தொழிற்சாலையில் காண்ட்ராக்ட் தொழிலாளியை 27 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை வாங்கி அந்த தொழிலாளி இருபத்தி எட்டாவது மணி நேரம் விபத்தில் இறந்து போனார்
  8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கிய ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் இல்லையா?
  இந்த அநீதியைக் கண்டித்து சுவரொட்டி கம்யூனிஸ்டுகள் ஒட்டிய பிறகுதான் நிவாரணமே தருவதற்கு முன் வந்தார்கள். மேலும் அந்த ஒப்பந்த தொழிலாளிக்கு சேரவேண்டியமுழுமையான பலன்கள் இன்று வரை போய் சேரவில்லை. இதற்கும் கம்யூனிஸ்டுகள் தான் முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளர் துறையோ நிர்வாகமும் அதிகாரிகளும் யாரும் இறந்து போன தொழிலாளிகளுக்காக நிவாரணம் சென்றடைய வேலை செய்வதில்லை எங்களுக்கு தொழிற்சாலை இயக்குவதுதான் வேலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் தருவது அல்ல என்று உறுதியாக செயல்படுகிறார்கள் , இதற்கு உங்கள் பதில் என்ன ?
  மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இப்படி இருக்கிறது என்றால் சாதாரண கம்பெனிகள் இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

  • சிறு பெரு தொழிற்சாலைகளின் முதலாளிகள் என்ற வித்தியாசம் இல்லை… கார்பொரேட் தொழில்கள் மட்டும் என்ன உழைப்பு இல்லாமலா நடக்கிறது… இன்போசிஸ் வெறும் பத்தாயிரம் ரூபாயில் தொடங்கி இன்று பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள், அந்த முதலாளிகளின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியும்மா ? அவர்கள் பட்ட கஷ்டங்கள், தியாகங்களை எல்லாம் குறைத்து மதிப்பிட முடியும்மா ?

   என்னை பொறுத்தவரையில் தொழிற்சாலை நன்றாக இருந்தால் மட்டுமே தொழிலாளிகள் நன்றாக இருக்க முடியும். போராட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளை முடக்கினால் தொழிலாளிகள் வாழ்வும் சேர்ந்தே முடங்கும்.

   எனக்கு கம்யூனிஸ்ட்களை அடியோடு பிடிக்காது, அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த துரோகங்கள் (செய்யும் துரோகங்கள்) சாதாரணமானது அல்ல. கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டு மக்களுக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் செய்தது இல்லை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஒரு சின்ன உதாரணம் மட்டுமே…

  • என் ஈமெயில் முகவரியை தருவதற்கு இல்லை காரணம் நான் எந்த அமைப்பையும் சேர்ந்தவன் கிடையாது, சாதாரண தனிமனிதர்களின் ஒருவன்.

   எதுவாக இருந்தாலும் வினவு மூலமே பேசுங்கள்

   • Manikandan அவர்கள் எவ்வளவு எளிமையானவர். எத்தனை தன்னடக்கம்!!!

    எச்சரிக்கை: இவரைப் பற்றி யாரேனும் RSS, கார்ப்பரேட் ‘சொம்புதூக்கி’ இல்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்..

    • உங்களை போன்றவர்களுக்கு எதிர் கருத்து சொன்னால் இப்படி தான் பேசுவீர்கள்… ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை.

     முதலில் உங்களின் (கம்யூனிஸ்ட்கள்) முதுகில் இருக்கும் அழுக்கை துரோகத்தை துடையுங்கள் பிறகு மற்றவர்களை பற்றி குறை சொல்லலாம்.

 9. Manikandan…..

  //அந்த முதலாளிகளின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியும்மா ? அவர்கள் பட்ட கஷ்டங்கள், தியாகங்களை எல்லாம் குறைத்து மதிப்பிட முடியும்மா ?…//

  எப்படி ..2.0 படத்தில் உடல்நிலை சரியில்லாத போதும் அதனை பொருட்படுத்தாமல் டில்லியில் கடும் வெயிலிலும் நடித்து கொடுத்தவர் ரஜினி என்று அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் பாராட்டினாரே அது போலவா ??? என்னமோ அந்த கூத்தாடி நாய் மக்கள் பிரச்சனைகளுக்காக வெயிலில் நின்று போராடியது மாதிரி வெட்கமேயில்லாமல் பாராட்டினார்கள்.. அதே போன்று கேவலமாக தான் இருக்கிறது இப்போது நீங்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகளை உச்சி முகர்ந்து பேசுவதும் …

  • கார்பொரேட் (அல்லது பணக்காரர்கள்) என்றாலே வெறுக்க வேண்டும் அவதூறு பேச வேண்டும் என்ற இந்த சிந்தனை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தியது.

   ஒரு தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை… அதன் பின்னால் இருக்கும் உழைப்பு தியாகங்கள் உங்களை போன்றவர்களுக்கு புரிவது இல்லை. தொழிலாளிகளுக்கு ஒரு பங்கு வேலைப்பளு என்றால் முதலாளிகளுக்கு 1000 மடங்கு வேலைப்பளு இருக்கும். அதுவும் கார்பொரேட் கம்பெனிகள் என்றால் இன்னும் சிக்கல்கள் நிறைய இருக்கிறது.

   என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, தொழிற்சாலைகள் சரியாக இயங்கினால் தான் தொழிலாளிகள் நலமோடு இருக்க முடியும்… அந்த தொழிற்சாலைகளை போராட்டங்கள் என்று முடக்கினால் தொழிலாளியின் வாழ்க்கையும் முடங்கும்.

   • சரி உங்களை போன்ற 1000 பேரை அதாவது தொழிலாளிகளை திடீர் என்ற எந்த முன்னறிவிப்புமில்லாமல் ஆலை நிர்வாகத்தினர் வேலையை விட்டு நீக்குகிறார்கள்(Lay Off )என்று வைத்துக் கொள்வோம், அதற்க்கு என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழியை சொல்லுங்கள்..

    • நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும், முதலாளிகளும் சரி, தொழிலார்களும் சரி சமூக சேவை செய்யவில்லை, இரு தரப்புமே தங்களின் வேலைக்கு பலனை எதிர்பார்ப்பவர்கள்.

     முதலாளிகளை பொறுத்தவரையில் வியாபாரத்தில் நஷ்டம் இல்லாமல், லாபம் பார்க்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கிறது…. தொழிலாளியை பொறுத்தவரையில் தாங்கள் செய்த வேலைக்கு ஒழுங்காக சம்பளம் வர வேண்டும்… இதில் தொழிற்சாலை லாபத்தில் இயங்கினால் மட்டுமே அதில் வேலை செய்பவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியும்… நீங்கள் கேட்பது போல் சம்பள உயர்வும் கொடுக்க முடியும்… இது எதார்த்த உண்மை.

     திறமை இருப்பவர்களை எந்த தொழிற்சாலையும் தக்க வைத்து கொள்ளவே விரும்பும், முடிந்தளவுக்கு அவர்களை வேலையை விட்டு செல்லாமல் இருக்கவே அனைத்து தொழிற்சாலைகளும் முயற்சி செய்யும்.

     நஷ்டம் ஏற்படும் போது தொழிலாளிகளை குறைப்பது, எனது தொழிற்சாலையை காப்பாற்ற ஒரு நடவடிக்கை.

     வேலைக்கு சேர்ந்த பிறகு ஒழுங்காக வேலை செய்யாமல் (கம்யூனிஸ்ட்களை போல் நேர்மையில்லாமல்) வெட்டி சம்பளம் வாங்குபவர்கள் அனைத்து தொழிற்சாலைக்கும் சுமை தான் அவர்களை நீக்குவது எந்த தவறும் இல்லை.

     முன்னறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது appointment ஆர்டரில் என்ன கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். மேலும் ஒரு தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கும் போது, தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையம் உருவாகிறது. எந்த ஒரு முதலாளியும் இதை விரும்பி செய்வது இல்லை, வேறு வழி இல்லாமல் கடைசி கட்ட நடவடிக்கையாகவே இதை செய்கிறார்கள்.

     இந்த சூழலில் ஒரு தொழிற்சாலையை இயங்க விடாமல் கம்யூனிஸ்ட்கள் முடக்குவது நிச்சயம் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் மிக பெரிய தீமை (துரோகம்).

     • //நஷ்டம் ஏற்படும் போது தொழிலாளிகளை குறைப்பது, எனது தொழிற்சாலையை காப்பாற்ற ஒரு நடவடிக்கை….//

      மிகவும் தவறான வாதம் … ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக இப்படி நேர்மை இல்லாமல் நீங்கள் அவர்களுக்கு(முதலாளிகளுக்கு) வக்காலத்து வாங்க கூடாது. இது வரை ஆட்குறைப்பு செய்த எந்த நிறுவனமும் முறையாக தன்னுடைய வருடாந்திர வரவு செலவு அறிக்கையை வெளியிட்டது கிடையாது. tcs நிறுவனம் ஆட்குறைப்பு செய்தபோது, அந்த நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கியது குறிப்பிடத்தக்கது… மேலும், ஆட்குறைப்பு செய்வதின் முக்கிய நோக்கம் லாபத்தை பெருக்க வேண்டும் என்கிற பேராசை தானே ஒழிய நஷ்டம் ஏற்பட்டது என்பதெல்லாம் பொய்…

      • வினவு கூட்டத்தினர் அனைவரும் ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு எதிராக கருத்து சொன்னால் உடனே நான் RSS இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று நீங்களாகவே ஏன் முடிவுக்கு வருகிறீர்கள். ஏன் சாதாரண தனிமனிதன் இந்திய கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு செய்யும் அக்கரமங்களை துரோகங்களை சுட்டிக்காட்ட கூடாதா ?

       TCS ல் ட்ரைனிங் கொடுக்கிறார்கள், அப்போதும் ஒருவர் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் வேலையில் இருந்து எடுக்கிறார்கள். சும்மா வேலை செய்யாமல், திறனையும் வளர்த்துக்கொள்ளாமல் இருக்கும் ஒருவருக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும். TCS போன்ற ஒரு கம்பெனியில் நம் திறமையையும் புத்திசாலித்தனத்தையும் நிரூபித்துவிட்டால் எவ்வுளவு சம்பளம் கொடுத்தாவுது நம்மை அந்த கம்பெனியிலேயே தக்கவைத்துக்கொள்ள பார்க்கிறார்கள்… நான் அனுபவபூர்வமாக பார்த்த உண்மை இது.

       • //TCS ல் ட்ரைனிங் கொடுக்கிறார்கள், அப்போதும் ஒருவர் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் வேலையில் இருந்து எடுக்கிறார்கள்.//

        மிகவும் கடைந்தெடுத்த பொய்.. முடிந்தால் இதனை நிரூபித்து காட்டுங்கள் பார்க்கலாம். TCSஇல் ஆட்குறைப்பு செய்ய பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல திறமைசாலிகளே.. முடிந்தால் இதனை ஆதாரபூர்வமாக நிரூபித்துவிட்டு அடுத்த வாதங்களை நீங்கள் தொடரலாம்.. இங்கு திறமை என்பதல்ல முக்கியம், அதற்காக நிறைய பேர் வரிசையில் காத்துகொண்டு வெளியில் நிற்கிறார்கள். 50,000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தவனை தூக்கி விட்டு அங்கே 15,000 சம்பளத்தில் ஒருவனை பணிக்கு அமர்த்தத்தான் இந்த ஆட்குறைப்பு என்னும் நாடகமே…

     • //திறமை இருப்பவர்களை எந்த தொழிற்சாலையும் தக்க வைத்து கொள்ளவே விரும்பும்//

      வேலையை விட்டு நீக்க பட்டவர்கள் அனைவரும் திறமையின்மையால் தான் நீக்கபட்டார்கள் என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? ஒரு தொழிலாளிக்கு இயந்திரத்தை இயக்க அல்லது அலுவல் பணி செய்ய போதிய திறமை இல்லை என்றால், சம்மந்தப்பட்ட அவர் பணி புரியும் நிறுவனம்/ஆலை, அவருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, குறையை போக்கி அவரை பணியில் நீட்டிக்க வேண்டுமே தவிர, வேலை விட்டு துரத்துவது எந்த வகையிலும் நியாயமாகாது. அப்படிபட்ட ஒரு நிறுவனம் இங்கு தேவைஇல்லை தான். மீண்டும் சொல்கிறேன் ஆட்குறைப்பு செய்வது, வரி ஏய்ப்பு செய்வது இதற்கெல்லாம் காரணம் லாபத்தை பெருக்க வேண்டும் என்கிற ஒரே தீய நோக்கம் தானே தவிர மற்றபடி இதில் எந்த நியாயமான காரணமும் இருக்க வாய்ப்பில்லை…

      • இதுக்கு என்ன ஆதாரம் வேண்டியிருக்கு நானே என் டீமில் இருந்த பலரை (திறமையை வளர்த்து கொள்ள பல சந்தர்ப்பங்கள் கொடுத்தும் அவர்கள் வளர்த்துக்கொள்ளாததால்) வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அதேபோல் திறமை உள்ளவர்களை எந்த சூழலிலும் நான் விட்டு கொடுத்தது இல்லை.

       TCS போன்ற கம்பெனிகள் சராசரியாக ஒரு developer க்கு மாதம் 3000 டாலர் சார்ஜ் செய்கிறார்கள் (இந்தியா ரூபாயில் சுமார் 2 லட்சம் வரும்) அதனால் இங்கே சம்பளம் என்பது ஒரு விஷயமே கிடையாது… எனக்கு தெரிந்து பலர் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் டீமில் உள்ள மற்றவர்களின் வேலையை வைத்து காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி விட்டு திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

    • முதலில் பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எம்.ஜி.ஆர் காலத்து மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்… நீங்களும் அவர்களை போல் உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற positive சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

     பல தொழிற்சாலைகள் தடங்கல்கள் இல்லாமல் இயங்கினால் தான் பல குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை மறக்க வேண்டாம். தொழிற்சாலைகளை போராட்டங்கள் என்ற பெயரில் முடக்குவது தவறு, தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு எதிராக செய்யப்படும் மிக பெரிய பாவம் போராட்டம்.

     • //முதலில் பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எம்.ஜி.ஆர் காலத்து மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்… //

      பணக்கார்கள் கெட்டவர்கள் தான், மகாத்மா காந்தி கூறியதை போன்று, தன்னுடைய அடிப்படை தேவை போக அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்திருப்பவர்கள் அனைவருமே திருடர்கள் தான். எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டுமல்ல, உபநிஷத காலம் தொட்டே அதிகம் செல்வத்தை குவித்து வைப்பவனை கேடு கெட்டவன் என்று தான் சொல்கிறார்கள், ஹிந்துத்துவாவாதியாகிய உங்களுக்கு இது தெரியாதது ஆச்சர்யமே. ஈசாவாஸ்ய உபநிஷதத்தை ஊன்றி படிக்கவும் … அனைத்து உயிர்களையும் சமமாக நேசிக்க தெரிந்தவன் தான் உண்மையான இந்துவாக இருக்க முடியும்.

      • தவறில்லை, லாபம் வந்தால் தான், தொழிலாளிகளுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியும், அதற்காக லாபம் சம்பாதிக்க சில நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை.

       உங்கள் குடும்பத்தில் வரவுக்கு மீறி நீங்கள் செலவு செய்யும் போது, கடன் வாங்குகிறீர்கள் அதுவும் போதவில்லை என்னும் போது இயல்பாகவே நீங்கள் எதில் செலவை குறைக்கலாம், எதில் சிக்கனப்படுத்தலாம் என்று சிந்திக்கிறீர்கள். ஒரு சிறு குடும்பத்திற்கே இப்படி இருக்கும் போது பல நூறு தொழிலாளிகள் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் சிக்கன நடவடிக்கையில் இறங்க கூடாதா ?

       என் தேவை என்ன என்பதை பற்றி நீங்கள் முடிவு செய்ய முடியாது அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்… எனது கனவு Audi A6 கார் வாங்க வேண்டும் என்பது, மற்றவர்கள் எல்லாம் நடந்து போகும் போது நீ மட்டும் ஏன் காருக்கு ஆசைபடுகிறாய் என்று நீங்கள் கேட்பது சரியல்ல, அது எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் விருப்பத்தில் தலையிடும் செயல், அதற்கு உங்களுக்கு உரிமையும் இல்லை. நான் அடுத்தவர்களிடம் இருந்து திருடவில்லை ஏமாற்றவில்லை, என் உழைப்பில், நான் சம்பாதித்த பணத்தில், நான் வாங்கும் கார்…

       • வரி ஏய்ப்பு செய்வதில் தவறில்லை என்று சொன்ன பிறகு, உங்களிடம் பேச ஒன்றுமில்லை தான். Audi கார் வாங்குவதில் தவறில்லை, அனால் அதை நீங்கள் வாங்குவதற்காக செய்யும் அனைத்து சமூக விரோத செயல்களையும் தடுத்தே தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்ல ஒரு முதலாளி தொழில் தொடங்குகிறான் என்றால் அவன் வெறும் தன்னுடைய ஆலையை மட்டும் நம்பி ஆரமிக்கவில்லை. அதற்க்கு மூல பொருளான இந்நாட்டின் மலை காடுகளில் உள்ள இயற்கை வளங்களை நம்பி தான் ஆலை துவங்குகிறான்.. ஆகவே ஒரு சமூகத்துக்கே சொந்தமான இயற்க்கை வளங்களை சூறையாடி தனக்கான செல்வங்களை சேர்ப்பவனை அய்யோக்கியன் என்றல்ல இன்னும் மோசமான கெட்ட வார்த்தைகளில் கூட பேசலாம்.

        • உங்களின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா ? வினவை மட்டுமே படித்தால் இப்படி தான் கண்டதையும் கற்பனை செய்ய தோணும்.

 10. முன்னர் இந்த மணிகண்டன் என்ற பெயரில் ஒரு மாமா வந்து பேசிக்கொண்டு இருக்கும். அது இவ்வளவு “தெளிவாக” எல்லாம் பேசாது. இப்போது வேறோன்றை அமர்த்தியிருக்கிறார்கள் போல . . !
  இதுகளை விவாதத்தில் வெல்லவோ புரியவைக்கவோ முடியாது. இதுகள் உமிழும் பொது கருத்துக்களை வினவு வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கோணத்தில் தோழர்கள் பதிலளித்தால் போதும் என கருதுகிறேன்.

 11. //உங்களுக்கு எதிராக கருத்து சொன்னால் உடனே நான் RSS இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று நீங்களாகவே ஏன் முடிவுக்கு வருகிறீர்கள். ஏன் சாதாரண தனிமனிதன் இந்திய கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு செய்யும் அக்கரமங்களை துரோகங்களை சுட்டிக்காட்ட கூடாதா ?//

  செய்யலாம், ஆனால் நீங்கள் சாமானிய மனிதர் கிடையாது.. சாமானியர்கள் இப்படி முதலாளிகளுக்கு ஜால்ரா அடிக்க மாட்டார்கள். நீங்கள் ஹிந்துத்துவ அமைப்பின் வார்ப்பு தான், அதில் எவ்வித சந்தேகமும் யாருக்கும் இங்கு கிடையாது… எனக்கும் வினவின் மீது சில விமர்சனங்கள் உண்டு அது வேறு, ஆனால் அதற்காக சமூக விரோதிகளான முதலாளிகளுக்கு சொம்படிக்க எனக்கு தெரியாது. சாதாரண தனி மனிதன் என்பவனுக்கு ஆக சிறந்த ஒரு தகுதி இருக்கின்றது, அது நிச்சயம் உங்களுக்கு கிடையாது.. நன்றி..

  • பணக்காரர்களுக்கு எதிரான உங்களின் கருத்து பொறாமை உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கிறது… என்னை பொறுத்தவரையில் முதலாளிகள் பக்கம் நியாயத்தையும் பார்க்க வேண்டும் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு முதலாளிகள் என்பவர்கள் எப்போதுமே தியாகம் செய்ய வேண்டும், கம்பெனி நஷ்டம் அடைந்தாலும் முதலாளி நடு தெருவிற்கு வந்தாலும் தொழிலாளியை கவனிக்க வேண்டும். இது வேண்டுமானால் உங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் துளியும் சாத்தியம் இல்லாத விஷயம் இது.

   தொழிற்சாலை லாபம் ஈட்டினால் தான் தொழிலாளிகள் நலமாக இருக்க முடியும். போராட்டங்களின் மூலம் தொழிற்சாலைகளை மூடுகிறோம் என்று கம்யூனிஸ்ட்களை போல் செயல்பட்டால் தொழிலாளிகளுக்கு மட்டும் அல்ல சமூகத்திற்கும் தீமை. —- இது அசைக்க முடியாத உண்மை.

  • நீங்கள் என்னை RSS இயக்கத்தை சேர்ந்தவன் என்று நினைத்தாலும் எனக்கு கவலையில்லை காரணம் நான் என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கிறேன்… அதனால் நீங்கள் என்னை பற்றி என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை.

 12. என்னை திட்டுவது, கேள்வி கேட்பது எல்லாம் இருக்கட்டும் மேடம், முதலில் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை தலித்துகள் தலைமை பொறுப்புகளில் (பொலிட் பீரோ) இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? எதனால் பிராமணர்களே அதிகமாக உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

  • ஏனென்றால் பிராமணர்கள் “யோக்கியர்கள்” அதனால் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். . .
   நான் கரெக்ட்டா பேசுறேனா மணிகண்டன் . . .

  • Manikandan….

   உங்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல …. அப்படி புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் ,,, நம் நாட்டின் இயற்கை வளங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும், பாரத தாயின் செல்வங்கள் அதன் புதல்வர்களுக்கே பயன்பட வேண்டும் எந்த தனி மனிதனின் பேராசைக்குமல்ல .. இதனை உணர்த்த தான் நான் இவ்வாறு உங்களுடன் விவாதய்க்க நேர்ந்தது…மற்றபடி ஒன்றுமில்லை..

  • //முதலில் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை தலித்துகள் தலைமை பொறுப்புகளில் (பொலிட் பீரோ) இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? //

   நல்ல கேள்வி, இதற்க்கு கம்யூனிஸ்டுகள் தான் பதில் அளிக்க வேண்டும் … நான் கம்யூனிஸ்ட் கிடையாது, உண்மை எதுவோ அதனை ஏற்றுக் கொள்வேன். எனக்கு சரி என்று படாததை நிராகரிப்பின் அவ்வளவே …

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க