privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?

-

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நூலை வெளியிட உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் பாஜகவின் காது குளிர ஐஸாக உருகியிருக்கிறார் ரஜினி. “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மிகவும் சிறப்பான நடவடிக்கை; அது குறித்த அமித்ஷாவின் பாராளுமன்ற உரை அற்புதம்; மோடியும் அமித்தும் அர்ஜுனன் – கிருஷ்ணன் போல; அதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த இரகசியம்” என்று போற்றிப் புராணம் பாடியிருக்கிறார் ரஜினி.

இந்த போற்றி ஃபுளோவில் பார்த்திபன், பகவான் என்று உவமை பேசினாலும் அதிலும் பாதுகாப்பாக உளறியிருக்கிறார் ரஜினிகாந்த். இருவரில் யார் பகவான், யார் பார்த்திபன் என்று சுட்டியிருந்தால் பிரச்சினை. அதனால் அந்த விசயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சேஃப்பாக செப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

காஷ்மீரே இழவு விழுந்த வீடு போல தத்தளிக்கும் போது இந்த நடிகரோ நீரோ போல மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிடில் வாசிக்கிறார். இணையம், தொலைபேசி, செல்பேசி, பத்திரிகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு போட்டு, பாதுகாப்புப் படைகள் மட்டும் காஷ்மீரின் தெருக்களில் வலம் வரும் வேளையில் ஒரு புயலுக்கு முந்தைய அமைதி போல காஷ்மீர் காணப்படுகிறது. காஷ்மீர் மக்களின் வாயையும் வயிற்றையும் கட்டிவிட்டு அங்கே எதிர்ப்பு குரலே இல்லை என நாடகமாடுகிறது அரசு. அந்த நாடகத்தை பொய்யென விரைவிலேயே காஷ்மீர் மக்கள் நிரூபிப்பார்கள்.

வெங்கய்யா, நூல் விழாவில் அடிமை எடப்பாடி அரசின் இரட்டையரும் கலந்து கொண்டு பாஜகவைப் போற்றி புராணம் பாடியிருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி – பாஜக – அதிமுக கூட்டணிக்காக பாடுபடும் துக்ளக் குருமூர்த்தியும் அந்த விழாவில் இருந்தார்.

படிக்க:
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

அதிமுக-வின் பாராளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முன்னர் ஒருமுறை அங்கே பேசும் போது “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று பாடி தனதும், அதிமுகவினதும் வக்கிரத்தை காட்டியது போல இங்கே ரஜினி எனும் திரை நடிகர் காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?

இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி:

காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ?

பாஜக-விற்கு சொம்படிக்க
அதிமுக-பாஜக-ரஜினி கூட்டணிக்காக
காஷ்மீரில் சொத்து வாங்க
முஸ்லீம் வெறுப்பு
அனைத்தும்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப் :

வாக்களிக்க…