Saturday, July 20, 2024
முகப்புசெய்திஇந்தியாஅயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

அயோத்தி இறுதி விசாரணை - ஆஜ் தக் தொலைக்காட்சி வெளிப்படையாக தனது வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் முன்பே தீர்ப்பெழுதும் வஞ்சகம்.

-

யோத்தியில் பிரச்சினைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த இறுதிகட்ட விசாரணை புதன்கிழமையோடு முடிந்தது. இந்துத்துவ அமைப்புகளுக்கு பிரச்சினைக்குரிய நிலத்தை விட்டுத்தர தயார் என வக்ஃபு வாரியம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள் அயோத்தி தீர்ப்பை எழுதத் தொடங்கிவிட்டன வடமாநில ஊடகங்கள். நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்காகவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டாலும், ராமன் அங்குதான் பிறந்தார் என்பதை நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்குவதைப் போல இந்துத்துவ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன இந்த ஊடகங்கள்.

வழக்கம்போல, முசுலீம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என சுட்டி, இந்துக்களுக்கு எதிராக முசுலீம்கள் என்கிற வெறுப்புப் பிரச்சாரத்தையும் அவை செய்யத் தவறவில்லை.

அயோத்தி இறுதி விசாரணையை ஒட்டி, ஆஜ் தக் தொலைக்காட்சி ஒளிபரப்பிய விவாதம் குறித்த ட்விட்டர் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இவை: ‘பிறந்த இடம் நமது, ராம் நம்முடையவர், இந்த மசூதி மக்கள் எங்கிருந்து வந்தார்கள்?’.

பூசி மெழுகி மறைமுகமான பிரச்சாரம் செய்தது போய், இப்போது நேரடியாக வெறுப்பில் இறங்கிவிட்டன இந்த ஊடகங்கள். ஆஜ் தக் தொலைக்காட்சியின் மேற்கண்ட ட்விட்டுக்கு காவி ட்ரோல்கள் ஆர்ப்பரித்த நிலையில், காவிகளை எதிர்த்து வரும் பலர் தங்களுடைய எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.

ஆஜ் தக் – இன் செயல் வெட்கக் கேடானது என்கிறார் ஸ்வரா பாஸ்கர்.

பிரதீக் சின்ஹா : நிச்சயம், இந்தியாவை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் வகித்த பங்கைப் பற்றி ஒரு நாள் யாராவது பேசுவார்கள். இதை ஒப்புக்கொள்ள மக்களும் இருப்பார்கள் என நம்புகிறேன். மேலும், இதை ஒருபோது மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என அப்போது சபதம் எடுப்பார்கள்.

படிக்க:
மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !

ஆகாஷ் பானர்ஜி: செய்தி ஊடகங்களில் பார்த்த மிகக் கேவலமான ஒன்றை நீங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு நாள் நம்மை நாம் இப்படி கேட்டுக்கொள்வோம்… ‘எப்படி நம்மை ஒருவர் இப்படி பிரிக்க முடியும்’ என்று. அதற்கு முன், ஊடக வெறுப்பின் விதைகளை நாம் பாதுகாப்பது முக்கியம். அப்போதுதான் எதிர்கால சந்ததி அதிலிருந்து கற்க முடியும்.

ஆஜ் தக் மட்டுமல்லாது, டைம்ஸ் நவ் போன்ற சில ஆங்கில தொலைக்காட்சிகளும் வெறுப்பு விதைகளை விதைத்தன.

மணிஷா பாண்டே: டைம்ஸ் நவ் ‘தாமதமாகும் நீதி, ஏளனம் செய்யப்படும் இந்து’ என்றும் ‘மசூதி வழக்கறிஞர் எல்லையை மீறுகிறார்’ என்றும் செய்தி வெளியிடுகிறது.
டைம்ஸ் நவ் நிர்வாக இயக்குனர் செய்தி ஒளிப்பரப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இப்படியான நிலையில், தேசிய ஒளிபரப்பு தர ஆணையம் வெளியிடும் வழிகாட்டி எத்தகைய நகைச்சுவையாக இருக்கும் என்பதை சொல்ல முடியுமா?

மற்றொரு ட்விட்டில் மணிஷா : இது கோயிலுக்கான வெளிப்படையான ஒரு கவுண்டவுன்தான்; இவர் மெய்நிகர் சாராயுவில் அமர்ந்திருக்கிறார்.

முன்னதாக, தேசிய ஒளிபரப்பு தர ஆணையம் ( the National Broadcasting Standards Authority – NBSA) அயோத்தி வழக்கு குறித்து காட்சி ஊடகங்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என வழிகாட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மசூதி இடிப்பு காட்சிகளோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதைக் கொண்டாடுவது போன்ற காட்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது என்றும் செய்தி வெளியிடும்போது சில உண்மைகளை ஆராய்ந்து எழுத வேண்டும் என்றும் விவாதங்களில் தீவிரமான கருத்துக்கள் எதுவும் ஒளிபரப்பக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனாலும், ஆஜ் தக் தன்னுடைய வெறுப்பு ட்விட்டை நீக்கவில்லை. ஆட்சியாளர்களின் கூட்டணியில்தான் நாங்களும் இருக்கிறோம் என்ற திமிருடன் அந்த ட்விட்டை ஆஜ் தக் நீக்காமல் விட்டுவைத்துள்ளது.

தேசிய ஒளிபரப்பு தர ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


கலைமதி
நன்றி: சப்ரங் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க