privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉலகம்7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !

7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவர்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

-

கவல் தொழிற்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான காக்னிசண்ட், மூத்த பணியாளர்கள் 7000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறித்துள்ளது. அதோடு உள்ளடக்கத்தை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள 6000 பணியாளர்கள், பணியிலிருந்து  உள்ளதாக அறிவித்துள்ளது.

நியூ ஜெர்ஸி தலைமையகத்தில் நடந்த வருவாய்க்குப் பிந்தைய கலந்தாய்வு கூட்டத்துக்குப் பின் இந்நிறுவனம் 10,000 – 12,000 வரையிலான மத்திய மற்றும் முதல் மூத்த பணியாளர்களை தங்களுடைய பொறுப்புகளிலிருந்து நீக்க இருப்பதாக கூறியுள்ளது. இதில் 5000 பணியாளர்களை மட்டும் மீண்டும் வேறு பணிகளுக்கு அமர்த்த உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 2,89,900 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் அதாவது 2% பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவார்கள் என நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தை சரிபார்க்கும் பணிகளிலிருந்தும் வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தை சரிபார்க்கும் பணியில் இருக்கும் பணியாளர்களின் பணியிடம் மற்றும் அவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையிலான பணித் தன்மை காரணமாக இந்நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதன்மூலம் 6000 பணியாளர்கள் தங்களுடைய பணியை இழக்க நேரிடும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிக்க:
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !

இந்த வெளியேற்றம் நிறுவனத்தின் தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வருவாயையும் பாதிக்கும். மேலும், அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் இந்த நிலை சீரடையும் எனவும் தெரிவித்துள்ளது.

வருவாய் பாதிப்பு குறித்து கவலை கொள்ளும் காக்னிசண்ட், திடீர் வேலை இழப்புக்கு ஆளாகும் பணியாளர்களின் நிலைமை குறித்து கவலைப்படப்போவதில்லை. சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை சரிபார்ப்பது போன்ற மன உளைச்சல் தரும் பணிகளை செய்து வந்த ஊழியர்களை சுரண்டியதோடு, அந்த விசயம் வெளியே வந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் ஒட்டுமொத்தமாக ஊழியர்களை கைகழுவியுள்ளது காக்னிசண்ட்.


அனிதா
நன்றி : எகனாமிக்ஸ் டைம்ஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க