privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

நீதி கிடைக்கப்போவதில்லை என்றாலும், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

-

யோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கும் சொந்தமானது என்பது குறித்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அயோத்தியில் ஏதேனும் ஒரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டலாம் என்றும் மனுதர்மத்தின்படி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

தீர்ப்புக்கு முன்பே, தீர்ப்பை முன்கூட்டி அறிவித்த காவிகள், தீர்ப்பு எப்படியிருந்தாலும் அதை முசுலீம்கள் ஏற்க வேண்டும் என அறிவித்தார்கள். கடந்த ஆறாண்டுகளாக முசுலீம்களை குறிவைத்து அரங்கேற்றப்பட்ட கும்பல் வன்முறைகளால் பீதிகொண்டுள்ள முசுலீம்கள், தீர்ப்பை அநீதியானது என்றாலும் ஏற்கிறோம் என அறிவித்தார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்பது கேள்வியாக எழுந்தநிலையில், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம் அதுகுறித்து முடிவெடுத்துள்ளது.

“அடிப்படை மதிப்புகள் சேதமாக்கப்பட்டு தேசிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குவது இழப்பை ஈடுசெய்யாது, ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தாது என நாங்கள் நினைக்கிறோம்” என லக்னோவில் நடந்த சட்ட வாரிய கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.

முசுலீம்களின் மத நடைமுறைக்கு மசூதிகள் அவசியம் எனக் கூறியுள்ள வாரியம், “இதே மசூதியை வேறு இடத்தில் கட்டுவது இசுலாமிய சட்டம் அனுமதிக்கப்படாது. எனவே, நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவுசெய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்
♦ எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

லக்னோவில் உள்ள மும்தாஜ் டிகிரி கல்லூரியில் நடந்த வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம் என்ற அமைப்பு ஒரு மனுதாரர் அல்ல. இந்த வழக்கில் மனுதாரர்களாக இருந்த எட்டு முசுலீம்களில் ஒருவரின் ஆதரவாவது இருந்தால் மட்டுமே வாரியம் சீராய்வு மனுவை செய்ய முடியும்.

இந்த வழக்கின் மூத்த மனுதாரரான ஹாசின் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி, அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார். அதுபோலவே, ஹாஜி மெக்பூப் என்பவரும் இதே முடிவை அறிவித்துள்ளார்.

மூன்றாவது மனுதாரரான முகமது உமர் மட்டும், சட்ட வாரியம் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். “தீர்ப்பில் சில முரண்பாடுகள் உள்ளன. மேலும், திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். சட்ட வாரியத்தின் மூத்தோர் என்ன சொல்கிறார்களோ, அதைச் செய்வேன்” என அவர் தெரிவித்தார்.

உத்தர பிரதேச சன்னி வக்ஃப் வாரியம் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அதில் மேல்முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.

நீதி கிடைக்கப்போவதில்லை என்றாலும், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. குறைந்தபட்ச ஜனநாயக உரிமையைக்கூட செய்யக்கூடாது என சட்ட வாரியத்துக்கு உ.பி. அமைச்சர் மிரட்டல் விடுக்கிறார். பொதுசமூகம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.


  அனிதா
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்.. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க