privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

இதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.

-

விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த மாதம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்திய ஜே.என்.யூ மாணவர்கள், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக இறுதி செமஸ்டர் தேர்வை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த மாதத்தில் ஆணை பிறப்பித்தது மத்திய அரசு. அதனைக் கண்டித்தும் அந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெறக் கூறி கடந்த நவம்பர் 11 அன்று ஜே.என்.யூ மாணவர்கள் நீண்ட பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு முன்னதாக தங்களது பல்கலை வளாகத்திலேயே அவர்கள் நடத்திய கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதையே தடுக்க முயற்சித்தது ஜே.என்.யூ நிர்வாகம். நவம்பர் 11 பேரணியைத் தடுக்கும் விதமாக பல்கலைக்கழகப் பகுதியிலும் பேரணி திட்டமிடப்பட்ட வழி நெடுகிலும் தடுப்பரண்களையும் போலீசுப் படையையும் குவித்து வைத்தது மத்திய பாஜக அரசு.

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீசு. (கோப்புப் படம்)

தடைகளை மீறி நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு. மேலும் மாணவர் பிரதிநிதிகளையும் கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் பொதுக்குழு கூட்டத்தில், இறுதித் தேர்வு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகவலை ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினர் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

ஏற்கெனவே கடந்த நவம்பர் 30 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மாணவர்கள் யாரும் பங்கேற்காததால் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல நவம்பர் 25 – 26 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த Mphil மற்றும் Phd படிப்புக்கான சினாப்சிஸ், மாணவர்கள் புறக்கணித்ததால் தள்ளிவைக்கப்பட்டது.

இத்தகைய தேர்வுப் புறக்கணிப்புக்கு ஜே.என்.யூ பல்கலையின் எந்தத் துறையினரும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பல்வேறு மொழிகள் குறித்த ஆய்வுக்கான மையம், வரலாற்றுப் படிப்பு, சமூக மருந்தியல், சமுதாய நலம், கலைகள் மற்றும் அழகியல், சட்டம் மற்றும் ஆட்சியியல், அரசியல் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இந்த தேர்வு புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

படிக்க:
விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
♦ உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

இதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.

இதற்கிடையே கட்டண உயர்வை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், கடந்த திங்கள்கிழமை (02-12-2019) அன்று பேரணி நடத்தினர். டில்லியின் ஜன்பத் பகுதியில் தொடங்கிய பேரணி டில்லி சாஸ்திரிபவன் அருகே போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சங்க பரிவாரத்தின் ஆட்சியில் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்ற எந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு மாணவர்களிடம் அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தி போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு மாணவர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.


-நந்தன்
நன்றி : தி வயர்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க