privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமுசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

குடியுரிமைத் திருத்த மசோதா (2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அறிவியலாளர்கள், அறிஞர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

-

நாடாளுமன்றத்தில் இன்று (09.12.2019) தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அறிவியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் குழு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த மசோதா, முஸ்லிம்களை செயலற்ற முறையில் விலக்குகிறது. இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு சிவில் சமூக குழுக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

மசோதா இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவின் உணர்வை மீறுவதாக அறிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தெரிவிக்கிறது. மூன்று முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து 750 -க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்: சந்தீப் திரிவேதி (டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், மும்பை), ராஜேஷ் கோபகுமார் (கோட்பாட்டு அறிவியல் சர்வதேச மையம், பெங்களூரு) மற்றும் அதிஷ் தபோல்கர் (கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம், இத்தாலி) போன்றோர் இதில் அடங்குவர்

***

நாங்கள் இந்திய அறிவியலாளர்கள் மற்றும் அறிஞர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள்.

சந்தீப் திரிவேதி, அதிஷ் தபோல்கர் மற்றும் ராஜேஷ் கோபகுமார்.

குடியுரிமைத் திருத்த மசோதா 2019 -ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த சம்மந்தப்பட்ட குடிமக்கள் என்ற வகையில் இந்த அறிக்கையை எங்கள் தனிப்பட்ட திறனில் வெளியிடுகிறோம்.

மசோதாவில் சரியாக என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறியோம். ஊடக செய்திகள் மற்றும் ஜனவரி 2019-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் முந்தைய பதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எங்களுடைய அறிக்கை.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்த இருக்கிற நிலையில், அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மசோதாவின் கூறப்பட்ட நோக்கம் அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு அடைக்கலம் அளிப்பதாகும். இந்தப் பாராட்டத்தக்க நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே வேளையில், இந்த மசோதா இந்திய குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான ஒரு சட்ட அளவுகோலாக மதத்தைப் பயன்படுத்துகிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது.

படிக்க:
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
♦ குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

சுதந்திர இயக்க போராட்ட காலத்திலிருந்து தோன்றிய இந்தியா என்கிற கருத்தாக்கம், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, அனைத்து மத மக்களையும் சமமாக நடத்த விரும்பும் ஒரு நாடு என்பதாகும். முன்மொழியப்பட்ட மசோதாவில் குடியுரிமைக்கான அளவுகோலாக மதத்தைப் பயன்படுத்துவது இந்த வரலாற்றில் ஒரு தீவிரமான முறிவைக் குறிக்கும். மேலும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு முரணாக இருக்கும். குறிப்பாக, மசோதாவின் நோக்கத்திலிருந்து முஸ்லிம்களை கவனமாக விலக்குவது நாட்டின் பன்மைத்துவத்தை பெரிதும் பாதிக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு “சட்டத்தின் முன் எந்தவொரு நபருக்கும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ள எந்தவொரு பிராந்தியத்திலும், சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுப்பதை தடைசெய்கிறது என்பதை நாங்கள் கவனத்தில் வைக்கிறோம். இந்த வரைவு மசோதா அரசியலமைப்பின் எழுத்தை மீறுகிறதா என்பது சட்ட வல்லுநர்கள் தீர்மானிக்கு பணியாக இருக்கும்போது, இது அதன் சாரத்தை மீறுகிறது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக, இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறவும், அகதிகள் மற்றும் சிறுபான்மையினரின் கவலைகளை பாகுபாடற்ற முறையில் நிவர்த்தி செய்யும் பொருத்தமான சட்டமாக இதை மாற்றுவதற்கான கோரிக்கையையும் நாங்கள் வைக்கிறோம்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்களின் முழுபட்டியலையும் அறிய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :


அனிதா
நன்றி : தி வயர்.