Monday, June 17, 2024
முகப்புசெய்திஇந்தியாமுசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

குடியுரிமைத் திருத்த மசோதா (2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அறிவியலாளர்கள், அறிஞர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

-

நாடாளுமன்றத்தில் இன்று (09.12.2019) தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அறிவியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் குழு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த மசோதா, முஸ்லிம்களை செயலற்ற முறையில் விலக்குகிறது. இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு சிவில் சமூக குழுக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

மசோதா இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவின் உணர்வை மீறுவதாக அறிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தெரிவிக்கிறது. மூன்று முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து 750 -க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்: சந்தீப் திரிவேதி (டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், மும்பை), ராஜேஷ் கோபகுமார் (கோட்பாட்டு அறிவியல் சர்வதேச மையம், பெங்களூரு) மற்றும் அதிஷ் தபோல்கர் (கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம், இத்தாலி) போன்றோர் இதில் அடங்குவர்

***

நாங்கள் இந்திய அறிவியலாளர்கள் மற்றும் அறிஞர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள்.

சந்தீப் திரிவேதி, அதிஷ் தபோல்கர் மற்றும் ராஜேஷ் கோபகுமார்.

குடியுரிமைத் திருத்த மசோதா 2019 -ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த சம்மந்தப்பட்ட குடிமக்கள் என்ற வகையில் இந்த அறிக்கையை எங்கள் தனிப்பட்ட திறனில் வெளியிடுகிறோம்.

மசோதாவில் சரியாக என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறியோம். ஊடக செய்திகள் மற்றும் ஜனவரி 2019-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் முந்தைய பதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எங்களுடைய அறிக்கை.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்த இருக்கிற நிலையில், அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மசோதாவின் கூறப்பட்ட நோக்கம் அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு அடைக்கலம் அளிப்பதாகும். இந்தப் பாராட்டத்தக்க நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே வேளையில், இந்த மசோதா இந்திய குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான ஒரு சட்ட அளவுகோலாக மதத்தைப் பயன்படுத்துகிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது.

படிக்க:
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
♦ குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

சுதந்திர இயக்க போராட்ட காலத்திலிருந்து தோன்றிய இந்தியா என்கிற கருத்தாக்கம், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, அனைத்து மத மக்களையும் சமமாக நடத்த விரும்பும் ஒரு நாடு என்பதாகும். முன்மொழியப்பட்ட மசோதாவில் குடியுரிமைக்கான அளவுகோலாக மதத்தைப் பயன்படுத்துவது இந்த வரலாற்றில் ஒரு தீவிரமான முறிவைக் குறிக்கும். மேலும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு முரணாக இருக்கும். குறிப்பாக, மசோதாவின் நோக்கத்திலிருந்து முஸ்லிம்களை கவனமாக விலக்குவது நாட்டின் பன்மைத்துவத்தை பெரிதும் பாதிக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு “சட்டத்தின் முன் எந்தவொரு நபருக்கும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ள எந்தவொரு பிராந்தியத்திலும், சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுப்பதை தடைசெய்கிறது என்பதை நாங்கள் கவனத்தில் வைக்கிறோம். இந்த வரைவு மசோதா அரசியலமைப்பின் எழுத்தை மீறுகிறதா என்பது சட்ட வல்லுநர்கள் தீர்மானிக்கு பணியாக இருக்கும்போது, இது அதன் சாரத்தை மீறுகிறது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக, இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறவும், அகதிகள் மற்றும் சிறுபான்மையினரின் கவலைகளை பாகுபாடற்ற முறையில் நிவர்த்தி செய்யும் பொருத்தமான சட்டமாக இதை மாற்றுவதற்கான கோரிக்கையையும் நாங்கள் வைக்கிறோம்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்களின் முழுபட்டியலையும் அறிய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :


அனிதா
நன்றி : தி வயர்.

 1. என்னை கேட்டால் இந்தியாவில் தோன்றிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க வேண்டும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு ஹிந்து கூட இன்று இல்லை, பாகிஸ்தானில் ஏறக்குறைய அனைத்து ஹிந்துக்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களையும் அழித்தே விட்டார்கள், எஞ்சி இருப்பவர்களுக்கு இந்தியா மட்டுமே அடைக்கலம் கொடுக்க முடியும்.

  பாகிஸ்தானில் எஞ்சி இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று அழிய வேண்டும் அல்லது இஸ்லாமியராக மதம் மாற வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்… அவர்களுக்கு இந்தியா சட்டபூர்வமாக அடைக்கலம் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?

  இந்தியாவின் மதசார்பற்ற சட்டத்தை ஏற்காத இஸ்லாமிய கிறிஸ்துவர்களுக்கு இந்தியா ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும் ? இதற்கு ஏற்புடைய ஒரு சரியான காரணத்தை இவர்களால் சொல்ல முடியும்மா ?

  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அவர்களின் ஷரியத் சட்டம் தான் வேண்டும், ஹிந்துக்களோடு ஒன்றி வாழமுடியாது என்று சொல்லி காஷ்மீர் பிரிவினையை கேட்கிறார்கள்.

  அதேபோல் யேசுவிற்கு ஒரு தேசம் என்று சொல்லி வடகிழக்கு மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் பிரிவினையை கேட்கிறார்கள்.

  இவர்களின் இந்த செயலை யாராவுது மதசார்பின்மை மீது நம்பிக்கை உள்ளவர்கள் தவறு என்று சொன்னார்களா ?

  மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்.

  • /// என்னை கேட்டால் இந்தியாவில் தோன்றிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க வேண்டும், ////

   அப்போ எல்லா பார்பாரப் பயலையும் அவனுங்க அடிவருடி மணிகண்டன்களையும் வெரட்டி விட்றலாமா ? ஈரான்ல இருந்து மாட்ட ஓட்டிட்டு வந்த நாயெல்லாம் இங்க வந்து நாட்டாமை பண்ணுது.

   ////பாகிஸ்தானில் எஞ்சி இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று அழிய வேண்டும் அல்லது இஸ்லாமியராக மதம் மாற வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்… அவர்களுக்கு இந்தியா சட்டபூர்வமாக அடைக்கலம் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?////

   இந்தக் கருணைப் பூனாவை இலங்கையில் இருந்து இங்கு வந்த ஈழத் தமிழர்களுக்கும், பர்மாவில் இருந்து வந்த ரோஹிங்கியா முசுலீம்களுக்கும் காட்ட வேண்டியதுதானே… அப்போ மட்டும் ஏன் எரியுது ?

   ////இந்தியாவின் மதசார்பற்ற சட்டத்தை ஏற்காத இஸ்லாமிய கிறிஸ்துவர்களுக்கு இந்தியா ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும் ///

   ஆர்.எஸ்.எஸ். பாப்பாரப் பசங்கதான் மதச்சார்பற்ற சட்டத்தை ஏற்க மாட்டேன்னு சொல்றான்ங்க… அவனுங்களை அடிச்சு வெரட்டிடலாமா … மணி ஐயர்வாள் !

   ///வாழமுடியாது என்று சொல்லி காஷ்மீர் பிரிவினையை கேட்கிறார்கள்.///

   ஏண்டா ரோட்டுல சும்மா போனவன புடிச்சு 1948-ல் உள்ள இழுத்துப் போட்டுட்டு, இப்பொ அவனுங்க பிரிவினை கேக்குறான்னு சொல்றியே வெக்கமா இல்லையாடா ?

   ////யேசுவிற்கு ஒரு தேசம் என்று சொல்லி வடகிழக்கு மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் பிரிவினையை////

   கெளப்பிவிடு… கெளப்பி விடு./… ஆர்/.எஸ்.எஸ். மாமா பசங்களுக்கு இதுதான சொல்லிக் கொடுத்துருக்கானுங்க…

   கெளப்பி விடு….

   • //அப்போ எல்லா பார்பாரப் பயலையும் அவனுங்க அடிவருடி மணிகண்டன்களையும் வெரட்டி விட்றலாமா ? ஈரான்ல இருந்து மாட்ட ஓட்டிட்டு வந்த நாயெல்லாம் இங்க வந்து நாட்டாமை பண்ணுது.// இது கிறிஸ்துவர்கள் கட்டிவிட்டு இருக்கும் வடிகட்டின பொய்

    //இந்தக் கருணைப் பூனாவை இலங்கையில் இருந்து இங்கு வந்த ஈழத் தமிழர்களுக்கும், பர்மாவில் இருந்து வந்த ரோஹிங்கியா முசுலீம்களுக்கும் காட்ட வேண்டியதுதானே… அப்போ மட்டும் ஏன் எரியுது ?// இலங்கையில் வந்த தமிழர்கள் இங்கே குண்டு வைத்து அப்பாவி மக்களை கொலை செய்து இருக்கிறார்கள். எங்கள் நாடு ஏன் ரோஹிங்கியா முசுலீம்களை ஏற்க வேண்டும் அவர்கள் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் செல்ல வேண்டியது தானே.

    //ஆர்.எஸ்.எஸ். பாப்பாரப் பசங்கதான் மதச்சார்பற்ற சட்டத்தை ஏற்க மாட்டேன்னு சொல்றான்ங்க… அவனுங்களை அடிச்சு வெரட்டிடலாமா … மணி ஐயர்வாள் !//

    உலகத்திலேயே 80% சதவீதம் ஒரு மத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்தியா மட்டுமே உண்மையான மதசார்பற்ற நாடாக இருக்கிறது, இதற்கு முழு காரணம் ஹிந்து மக்களின் பெருந்தன்மை.

    மதசார்பின்மை என்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதையும் ஒரு காரணமாக காட்டி காஷ்மீரில் பிரிவினையை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்துவ பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சில நாடுகளில் அரசியல் சட்டப்படி மதசார்பின்மை இருந்தாலும் அந்த நாடுகளில் கிறிஸ்துவம் தவிர வேறு மதங்களே கிடையாது. இஸ்லாம் செய்தது போல் வேரடி மண்ணோடு பூர்விக மக்களின் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை அழித்து விட்டு கிறிஸ்துவம் வந்து இருக்கிறது.

    //ஏண்டா ரோட்டுல சும்மா போனவன புடிச்சு 1948-ல் உள்ள இழுத்துப் போட்டுட்டு, இப்பொ அவனுங்க பிரிவினை கேக்குறான்னு சொல்றியே வெக்கமா இல்லையாடா ?// காஷ்மீர் மன்னர் இந்தியாவோடு சேர்ந்து கொள்கிறோம் என்று அவராகவே காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். காஷ்மீரை ஆக்கிரமித்த பாக்கிஸ்தான் அந்த இடத்தில் இருந்து விலக வேண்டும் என்று சொல்லி ஐநா தீர்மானம் சொல்கிறது… பாக்கிஸ்தான் விலகிய பிறகு இந்தியா அங்கே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது ஐநா தீர்மானம். இன்று வரையில் பாக்கிஸ்தான் அதை செய்யவில்லை, அது ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்த அனைத்து ஹிந்துக்களை கொலை செய்து அழித்து இருக்கிறார்கள். அதேபோன்ற செயலை இந்தியாவும் செய்து இருக்கலாம் ஆனால் இந்தியா பாகிஸ்தானை போன்ற காட்டுமிராண்டி தேசம் அல்ல.

    //கெளப்பிவிடு… கெளப்பி விடு./… ஆர்/.எஸ்.எஸ். மாமா பசங்களுக்கு இதுதான சொல்லிக் கொடுத்துருக்கானுங்க…///

    யேசுவிற்கு ஒரு தனி தேசம் என்ற கோரிக்கையை வலியுறுத்து பல வருடங்களாகவே பிரிவினையை கேட்டு கொண்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

    காஷ்மீரில் நடந்தது போலவே வட கிழக்கு மாநிலங்களில் இருந்தும் ஹிந்துக்களை இன அழிப்பு செய்து விரட்டி அடித்து இருக்கிறார்கள்.

    முதலில் கிறிஸ்துவ மிஸ்சிஓனரிகளால் வட கிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.

 2. இந்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்கு கூட இந்திய குடியுரிமை கொடுக்க வகை செய்கிறது. அப்படியிருக்கும்போது இந்த சட்டத்தை எதிர்த்து ஏன் இப்படி ஒரு கட்டுரை வினவில் வெளிவர வேண்டும்? மேற்கண்ட மூன்று நாடுகளிலும் மத சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் மாற்று அரசியல் சித்தாந்தம் உடையவர்கள் கூட கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். மற்றவர்களுக்கு தாங்கள் வழங்காத ஒன்றை மற்றவர்களிடம் இஸ்லாமியர்கள் எதிர்பார்க்க கூடாது. நாம் அடுத்தவர்களுக்கு எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்க முடியும்.

   • நல்லவர்கள் என்று சொல்வதைவிட நவீன உலக பார்வையோடு நிறைய இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் குரல் எடுபடுவதில்லை. மற்ற மதங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவான எதிர்க்குரல் கொடுப்பவரகளுககு வலுவான ஆதரவு உண்டு. இடமும் உண்டு. இந்துத்துவத்திற்கு எதிரான உங்களை மாதிரியான ஆட்களே ஒரு உதாரணம்.

  • பெருசு .. அப்படியே ஈழத் தமிழருக்கும் கொடுக்குறதுக்கு என்ன வந்துச்சாம் ..

   அதுக்கும் சேர்த்து பதில் சொல்லுமைய்யா….

   • இலங்கையில் மத ரீதியாக மட்டுமல்லாமல் பல வகைகளிலும் தமிழர்கள் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டார்கள். இப்போது அப்படி இல்லை. அங்கு இப்போது நடப்பதை suppression என சொல்ல முடியாது. Confrontation என தான்
    சொல்ல முடியும் என மத்திய அரசு விளக்கம் கொடுக்கிறது. அதை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 3. பாகிஸ்தானிலில் 47 % ஆக இருந்த இந்துக்கள் இன்று 1 %… அங்கு அச்சுறுத்தப்படும் சிறுபான்மையினருக்காகவே இந்த மசோதா.

  பிரிவினைவாதத்தால் இசுலாமியர்களுக்கு பாகிஸ்தான், வங்க தேசம், காஷ்மீர் என்று தேசத்தையே பல துண்டுகளாக உடைத்து கொடுத்தது போதாது போல் இன்று அங்கிருந்து திரும்ப வரும் இசுலாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தேச துரோகிகளால் மட்டுமே கூற முடியும்.

  • கொஞ்சம் Statistics கொடுக்கு முடியுமா மாணிக்கவேல் ?

   பாகிஸ்தான்ல எந்த வருசம் 47% பேர் இந்துக்களா இருந்தாங்க ? புளுகுணித்தனம் பண்ணக் கூடாது மாமாணிக்கவேல்.

   ஊர்ல இருக்க எல்லா தேசத்தையும் இந்து தேசம்னு பூணூலை வச்சி கோர்த்துண்டு நீர் பிணாத்திண்டு இருந்தேள்னா என்ன பண்றது வோய் ?

   • அப்படியே 47 % க்கு கம்மியா இருந்துட்டாலும், உங்க இசுலாமிய தேசத்துல தங்க தட்டுல தான் வெச்சு தாங்குறாங்களா? அதான் பிரிவினைவாதத்தை ஆதரிச்சு பல நாடுகளாக உடைச்சு கொடுத்துட்டாங்க இல்லை? யார் என்ன பெனாத்தினாலும் இதுக்கு மேல பிரிவினைவாதத்தை ஆதரிக்க முடியாது டோய்.

    • அப்போ சும்மா அடிச்சுதான் விட்டீரா ஓய் ..

     உம்ம கம்பெனி அதான் வோய் – ஆர்.எஸ்.எஸ். ஃபார்முலாவே OVOP தான …

     மாரிதாஸ் தொடங்கி மாணிக்கவேல் வரைக்கும் வாயில வர்றத அடிச்சி விடுறது… வெக்கமா இல்லையா வோய்… பொய் சொல்றதுக்கு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க