privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !

குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !

தீவிரமடைந்த போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியுள்ளது.

-

மித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். தன்னுடைய பலத்தால் பாஜக அரசு மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அச்சட்டம் அமலாக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிரமடைந்த போராட்டத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியது. குறிப்பாக டிவிட்டரில் இந்த பிரச்சாரம் வெகுவாக நடந்தது.

“நான் ஒரு முஸ்லிம். நான் #CABBill-ஐ ஆதரிக்கிறேன். நாடு முழுவதும் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஆரம்பித்திருக்கும் போராட்டங்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர்கள் மசோதாவைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும் தவறான வழிகாட்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் அல்லது அவர்கள் தெரிந்தே அரசாங்கத்தை ஒரு அரசியல் நடவடிக்கைக்காக குறிவைக்கிறார்கள். ஆனால், நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். ஜெய் ஹிந்த்.” என தெரிவிக்கின்றன இந்த வாசகங்கள்.

அமலாக்கப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் அடக்குமுறையிலிருந்து தப்பிய, முஸ்லிம்களைத் தவிர அனைத்து தெற்காசிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமையை வழங்குகிறது. மத அடிப்படையில் பாரபட்சமான இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நாடு முழுவதும் தீயாகப் பரவி வருகின்றன.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

இந்நிலையில் டிவிட்டரில் பரப்பப்பட்டுவரும் இத்தகைய பதிவுகளின் பின்னணியை ஆல்ட் நியூஸ் இணையதளம் ஆராய்ந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவை அறிவிக்கும் சிலரின் முந்தைய செய்திகளையும்  ட்விட்டர் கணக்குகளின் சுயவிவரங்களையும் ஆராய்ந்தபோது, அவர்களில் பலர் இந்துக்களாக ‘பெருமையுடன்’ பகிர்ந்துகொண்ட பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த காவி ட்ரோல் படையினர் முசுலீம் அடையாளங்களுக்கு  திடீரென மாறியுள்ளனர்.

உதாரணம்: 1

டிவிட்டர் பயனாளி @thegirl_youhate ‘நான் ஒரு இந்து ’ என கடந்த மார்ச்-10 அன்று ஒரு டிவிட்டை வெளியிட்டார்,

“நான் இந்து” எனவும் தன்னை ஆத்திடி பால் என்றும் பல சந்தர்ப்பங்களில் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உதாரணம்: 2

“இந்துக்களின் சக்தி. இந்துவாக இருப்பதில் பெருமையடைகிறேன்” என ஆகஸ்ட் மாதத்தில் @NamanJa82028342 என்பவர் சொன்ன நிலையில், இப்போது ‘நான் ஒரு முஸ்லீமாக குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறேன்’ என்கிறது.

உதாரணம் : 3

‘நான் ஒரு இந்து, நான் ஒரு போது பின்வாங்க மாட்டேன். நான் இந்து மீண்டும் இது இந்துராஷ்டிரம் ஆகும்’ என ஏப்ரலில் முழங்கிய இந்த சங்கி, இப்போது தன்னை முசுலீம் என்கிறார்.

உதாரணம்: 4

அர்பிதா கவுதம் என தன்னை பல முறை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் Khadija என்ற ட்விட்டர் பயனர் இப்போது தன்னை முசுலீம் என எழுதுகிறார்.

போராட்டம் வலுவாகவே இருக்கும் என உணர்ந்திருக்கும் காவி ட்ரோல் படை, திட்டமிட்டு இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளது. தற்போது இதுவும் அம்பலமாகியுள்ளது.


கலைமதி
நன்றி: ஸ்க்ரால்