Tuesday, March 21, 2023
முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !

குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !

தீவிரமடைந்த போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியுள்ளது.

-

மித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். தன்னுடைய பலத்தால் பாஜக அரசு மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அச்சட்டம் அமலாக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிரமடைந்த போராட்டத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியது. குறிப்பாக டிவிட்டரில் இந்த பிரச்சாரம் வெகுவாக நடந்தது.

“நான் ஒரு முஸ்லிம். நான் #CABBill-ஐ ஆதரிக்கிறேன். நாடு முழுவதும் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஆரம்பித்திருக்கும் போராட்டங்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர்கள் மசோதாவைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும் தவறான வழிகாட்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் அல்லது அவர்கள் தெரிந்தே அரசாங்கத்தை ஒரு அரசியல் நடவடிக்கைக்காக குறிவைக்கிறார்கள். ஆனால், நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். ஜெய் ஹிந்த்.” என தெரிவிக்கின்றன இந்த வாசகங்கள்.

அமலாக்கப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் அடக்குமுறையிலிருந்து தப்பிய, முஸ்லிம்களைத் தவிர அனைத்து தெற்காசிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமையை வழங்குகிறது. மத அடிப்படையில் பாரபட்சமான இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நாடு முழுவதும் தீயாகப் பரவி வருகின்றன.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

இந்நிலையில் டிவிட்டரில் பரப்பப்பட்டுவரும் இத்தகைய பதிவுகளின் பின்னணியை ஆல்ட் நியூஸ் இணையதளம் ஆராய்ந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவை அறிவிக்கும் சிலரின் முந்தைய செய்திகளையும்  ட்விட்டர் கணக்குகளின் சுயவிவரங்களையும் ஆராய்ந்தபோது, அவர்களில் பலர் இந்துக்களாக ‘பெருமையுடன்’ பகிர்ந்துகொண்ட பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த காவி ட்ரோல் படையினர் முசுலீம் அடையாளங்களுக்கு  திடீரென மாறியுள்ளனர்.

உதாரணம்: 1

டிவிட்டர் பயனாளி @thegirl_youhate ‘நான் ஒரு இந்து ’ என கடந்த மார்ச்-10 அன்று ஒரு டிவிட்டை வெளியிட்டார்,

“நான் இந்து” எனவும் தன்னை ஆத்திடி பால் என்றும் பல சந்தர்ப்பங்களில் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உதாரணம்: 2

“இந்துக்களின் சக்தி. இந்துவாக இருப்பதில் பெருமையடைகிறேன்” என ஆகஸ்ட் மாதத்தில் @NamanJa82028342 என்பவர் சொன்ன நிலையில், இப்போது ‘நான் ஒரு முஸ்லீமாக குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறேன்’ என்கிறது.

உதாரணம் : 3

‘நான் ஒரு இந்து, நான் ஒரு போது பின்வாங்க மாட்டேன். நான் இந்து மீண்டும் இது இந்துராஷ்டிரம் ஆகும்’ என ஏப்ரலில் முழங்கிய இந்த சங்கி, இப்போது தன்னை முசுலீம் என்கிறார்.

உதாரணம்: 4

அர்பிதா கவுதம் என தன்னை பல முறை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் Khadija என்ற ட்விட்டர் பயனர் இப்போது தன்னை முசுலீம் என எழுதுகிறார்.

போராட்டம் வலுவாகவே இருக்கும் என உணர்ந்திருக்கும் காவி ட்ரோல் படை, திட்டமிட்டு இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளது. தற்போது இதுவும் அம்பலமாகியுள்ளது.


கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

  1. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது அவர்களின் உரிமை அல்ல, சலுகை, அந்த சலுகையை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும் இந்தியாவில் அவர்கள் வைத்த குண்டுகள் பத்தாதா ?

    • நீங்க எவ்வளவு நேர்மையா இருக்கீங்க மணிகண்டன்..! தன்னந்தனி ஆளா இந்து பெயரிலேயே இந்த தேசத்துரோகிகளோட போராடி எல்லோரோட மனசையும் அள்ளிக்கிட்டு இருக்கீங்க..!
      ஆனா இந்த சங்கி நாய்களை பாருங்க.. பேடித்தனமா முஸ்லிம் பேர்ல பதிவு போடுறானுங்க..

  2. அதாவது நேற்றுவரை இந்துக்கள் என்ற போர்வையில் இருந்தவர்கள் இன்று தங்களின் உண்மை மதத்தின் அடிப்படையில் வெளிப்பட்டு தங்களின் உண்மை முகத்தை காட்ட தொடங்கி உள்ளனர்
    அப்படித்தானே…

    • தெரியலீங்க..!
      இந்த மாதிரியான பொறுக்கித்தனங்கள் உங்களை மாதிரியான உயிரினங்களுக்குதான் தெரியும்..

  3. வினவு செய்தி – அறிவிப்புகளை உடன் பெற வேண்டுமா?

    என்று கேட்டுவிட்டு இல்லை ஆம் என்று இரு பதில்களை கொடுத்துள்ளீர்கள். இல்லை என்ற பதிலை அழுத்தினால் அந்த இடம் வேலை செய்வதில்லை. அதாவது ஆம் என்ற பதிலை மட்டும் தான் அழுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறீர்களா?

    • புரியலீங்க..!
      வாக்கு இயந்திரத்துல எந்த பட்டனை அழுத்தினாலும் BJP க்கு ஓட்டு பதிவாகுதே.. அதுமாதிரியா…!

  4. மாெள்ளமாரிகள் … பாேட்டாே ஷாப் செய்து எப்பவாே நடந்ததை இப்ப நடந்ததை பாேல காட்டுவது …தனது உண்மையான பெயரில் பதிவிடாமல் பாேலி பெயரில் பதிவிடுவது …கருத்துக்கு எதிர்ப்ப வந்தவுடன் அட்மின் தவறு என்று காேமணத்துக்குள் ஔிந்துக் காெள்வது …வழக்கு என்றவுடன் நீதிமன்ற காலை நக்கி மன்னிப்பு கேட்பது …எந்த விஷயத்துக்கும் நேரடியா பதில் கூறாமல் திசை மாற்றுவது ….இவனுங்க பிராண்டே அப்படித்தானே …இதில் மட்டும் எப்படி மாறுவானுங்க … ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க