privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாதயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

தேசிய குடிமக்கள் பதிவேட்டை கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயார்படுத்தும் வகையில் இந்த மையத்தை அமைத்து, ‘குடியேறிகளை’ வெளியேற்ற அவசரம் காட்டியிருக்கிறது பாஜக அரசு.

-

பெங்களூருவிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள சோண்டேகொப்பா கிராமத்தில் இரண்டு மூலைகளிலும் உள்ள பாதுகாப்பு கோபுரங்களும், நாலாபுறமும் முள்வேலிகளாலும் சூழ்ந்திருக்கும் அந்தக் கட்டிடம், கர்நாடக அரசு அமைத்திருக்கும் ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம்.

உள்ளே சமையலறை மற்றும் குளியலறைகள் கொண்ட ‘L’ வடிவ கட்டிடத்தில் 15 படுக்கைகளுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இறுதி பணிகள் வேகமாக முடிய உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

2019-ம் ஆண்டு ஜனவரியில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்காக கையேட்டின் அடிப்படையில் இந்த தடுப்பு முகாமை உருவாக்கியுள்ளது கர்நாடக அரசு. 2020 ஜனவரி 1-ம் தேதி இந்த மையம் திறக்கப்பட உள்ளது.

கர்நாடக அரசு அமைத்திருக்கும் ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம்.

முன்னதாக, சமூக நலத்துறையால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியாக செயல்பட்ட இந்தக் கட்டிடம், ‘வெளிநாட்டினரின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மையமாக’ மாற்றப்பட்டுள்ளது. கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மையத்தை 2020 -ல் முழுமையாக இயக்கும் வகையில் இதை மாற்ற டிசம்பர் 9-ம் தேதி ஆணை பிறப்பித்தது.

“ஜனவரி 1-ம் தேதி முதல் மக்களை இங்கு அடைக்க முடியும் என கருதுகிறோம். சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியும், ஊழியர்களுக்காக குடியிருப்பு பணியும் முடிக்க வேண்டியுள்ளது. ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன” என்கிறார் சமூக நலத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி.

ஆகஸ்ட் 2018-ல் கைது செய்யப்பட்ட 15 ‘சட்டவிரோத’ வங்கதேச புலம்பெயர்ந்தோர் தொடர்புடைய வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, தடுப்பு மையம் ஒன்றை உருவாக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயார்படுத்தும் வகையில் இந்த மையத்தை அமைத்து, ‘குடியேறிகளை’ வெளியேற்ற அவசரம் காட்டியிருக்கிறது பாஜக அரசு.

“பிற நாடுகளிலிருந்து, குறிப்பாக வங்கதேசத்திலிருந்து ஏராளமான மக்கள் வந்து பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற நகரங்களில் குடியேறியுள்ளனர். எல்லையைத் தாண்டி மக்கள் குடியேறும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்றாகும். நாங்கள் தகவல்களை சேகரித்து வருகிறோம், மேலும் மத்திய உள்துறை அமைச்சருடன் இதை விரிவாக்க விவாதிப்போம்”என்று மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

படிக்க:
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
♦ வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கையேட்டில், ‘சட்டவிரோத’ வெளிநாட்டவர்கள் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவில் இந்த மையங்களில் தடுத்து வைக்கப்படலாம். தேசியத்தை உறுதிப்படுத்தாததால் நாடு கடத்தப்படுவதற்கு காத்திருக்கும் நபர்களும் இதில் அடங்குவர்; வெளிநாட்டு அரசாங்கத்தால் பயண ஆவணங்கள் வழங்கப்படாதவர்கள், மாநில சட்ட நிறுவனங்களால் கண்டறியப்பட்ட ‘சட்டவிரோத’ குடியேறியவர்கள், தீர்ப்பாயங்களால் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள், போலி ஆவணங்களுடன் பயணித்தவர்கள், மத்திய அரசால் நாடு கடத்த உத்தரவிடப்பட்ட வெளிநாட்டினர், விசா விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவர்.

தடுப்பு மையங்களில் அடைக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு கல்வியை தொடர்வதற்கான வசதி, கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல் உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும் எனச் சொல்கிறது கையேடு.

மூன்று மாதங்களுக்கு மேல் யாரும் இந்த மையத்தில் இருக்கக்கூடாது, அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இங்கிருக்கும் பிரச்சினைகளான அடிப்படை கட்டமைப்பு, பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சீர்செய்ய திராணியற்ற அரசு, இங்கிருக்கும் மக்களுக்கானவற்றைப் பிடிங்கி தனது இனவெறியை தணித்துக் கொள்ளப் பார்க்கிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்து குடியேறிகளை திரும்ப அனுப்பவும் செலவழிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பை உணரும்போது சாமானியர்களும் இந்த அரசை எதிர்த்து நிற்கப்போவது உறுதி.


அனிதா
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

  1. மனிதநேய மாண்பு கேலிக்கூத்தாகி விடுகிறது….. மக்கட் பண்புகள் காற்றில் பறக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமாகி போகும் நிலை…. மக்கள் அறம் சார்ந்த கலாச்சாரம் பழுது ஏற்பட்டு மனிதம் சிதைந்து விடும் நாடாக மாறும்….,

  2. *குடியுரிமை திருத்த சட்டம் : 2019.* சரியா?
    ———————–

    ⭐ இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சட்ட திருத்தில் இணைக்காமல் *பிரதமர் மோடி மேடையில் மட்டும் பாதிப்பு வராது* என்று பேசுவதன் நோக்கம் என்ன?

    ⭐ சொத்து இல்லாத, ஆவணம் இல்லாத இந்துக்களுக்கு பாதிப்பு வராது என்று சட்ட சரத்து இணைக்கப்பட்டாதது ஏன்?

    ⭐ கருப்பு பணத்தை தடுக்கத் தான் 500, 1000 மதிப்பிழப்பு என்பதை உங்கள் ஏற்க முடியுமா?

    ⭐ GST வரிக் கொள்கையால் சிறு – குறுந்தொழில் பாதிக்கவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

    ⭐ 90 லட்சம் கோடி மதிப்புள்ள இரயில்வேயில் 150 இரயில்களை மட்டும் 22,500 கோடிக்கு தனியாரிடம் தாரை வார்ப்பது வளர்ச்சி என்று உங்களால் நம்ப முடியுமா?

    ⭐ *திருடனை கண்டு பிடிக்க எல்லாரும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தாகணும் என்று அழைப்பது சரியா?*
    ————————
    *அரசியல் பார்வை,*
    23.12.2019.

  3. ஒரு வேலை இந்த CAA-CAB-NRC சட்டங்களை அமுல்படுத்தினால் கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் திரும்ப ஆட்களே இல்லாத. கட்டிடங்களை மட்டும் கொண்டிருக்கும்.

  4. மக்கள் ஒன்றுபட்டால் இதை அமைத்தவன்களையே அங்கே குடியேற்ற முடியும் ….!

  5. மோகன் பகவத் மற்றும் மோடியிலிருந்து அனைத்து சங்கிகளின் குடியுரிமை பறிக்கப்படும் நாளே இந்நாட்டின் திருநாள்.

  6. இஸ்லாமியர்களுக்கு எதிரான தேசிய நடவடிக்கை எனக் காரணங்காட்டி ”பயங்கரவாத மலர்கள்” (so called) மலரக்கூடிய செடிகளையெல்லாம் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்வதுதான் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவின் உள்நோக்கமா?

Leave a Reply to Selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க