“நாம் ஒரு போதும் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் அச்சப்படுவதில்லை என்பதில் பெருமை கொள்கிறேன்… உண்மையில் நாம் இந்த நாட்டைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும்தான் சிந்திப்பதாக நான் எண்ணுகிறேன்.” இது என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு நடிகர் தீபிகா திங்களன்று அளித்த நேர்காணல். முந்தைய நாளன்றுதான் ஏ.பி.வி.பி. ரவுடிகள் ஜே.என்.யூ மாணவர்களை கொடூரமாக தாக்கியிருந்தனர். அது குறித்த கேள்விக்குத்தான் தீபிகா மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இப்படி கருத்து தெரிவித்ததோடு நிற்காமல் அவர் ஜே.என்.யூ பல்கலைக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து தனது ஆதரவையும், தோழமையையும் தெரிவித்தார். சபர்மதி பகுதியில் அவர் மாணவர்களை சந்திக்கும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் அவர் கண்ணையா குமார், மாணவர் சங்கத் தலைவர் ஐய்ஷே கோஷ் மற்றும் போராடும் மாணவர்களோடு இருக்கிறார்.
தீபிகா படுகோனே தனது சாப்பக் திரைப்படத்தின் முன்னோட்ட வேலைகளுக்காக தில்லி வந்திருந்தார். எனினும் மற்ற பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு…” செய்து கொண்டிருக்கும் வேளையில் அவர் நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.
அவர் மட்டுமல்ல பாலிவுட்டின் பிரபலங்களான இயக்குநர் விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், சோயா அக்தர், நடிகர்கள் டாப்சி பன்னு, ரிச்சா சாதா ஆகியோர் மும்பை கார்ட்டர் சாலையில் ஜே.என்.யூ மாணவர்கள் மீதான சங்க பரிவார குண்டர்களின் தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
படிக்க :
♦ CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
இதற்கிடையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாலிவுட் நடிகர்களைச் சந்தித்து சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்து மும்பையில் கூட்டம் நடத்தியிருக்கிறார். அதில் எழுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தீபிகா படுகோனே நடித்த சாப்பாக் படத்தை புறக்கணிக்குமாறு மற்றொருபுறத்தில் சங்கிகள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலிலும் உறுதியாக இருக்கும் தீபிகா படுகோன், அனுராக் காஷ்யப் ஆகியோரின் ஆதரவுக் குரல்கள் வரவேற்கத்தக்கவை.
மதன்
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்.