privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாCAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

அமைதி வழியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப் படும்போது,  அதற்கு தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல்.

-

த்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களுக்கு எதிராக கர்நாடக பள்ளி ஒன்றில் நாடகம் போடப்பட்டதை ஒட்டி அப்பள்ளியின் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது அந்த நாடகத்தில் நடித்த குழந்தையின் பெற்றோரையும், பள்ளி ஆசிரியரையும் கைது செய்திருக்கிறது  கர்நாடக போலீசு.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி 21, 2020 அன்று, தனியார் பள்ளி நிகழ்ச்சியில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஏபிவிபியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பள்ளியின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது கர்நாடக பாஜக அரசு.

படிக்க :
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

மேலும், அந்த நாடகத்தில் நடித்த மாணவர்களை பள்ளிக்குள் நுழைந்து விசாரித்துள்ளது போலீசு. இதில் 9 வயதுக் குழந்தையும் அடக்கம். இந்த விசாரணை குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம், மாணவர்களை விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (30-01-2020) அந்த நாடகத்தில் நடித்த மாணவியின் தாயான நஸ்புனிசா என்பவரையும் அந்தப் பள்ளியின் ஆசிரியை ஃபரீதா பேகம் என்பவரையும் கைது செய்துள்ளது கர்நாடக போலீசு. அவர்கள் இருவர் மீதும் பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் அவமதிப்பது), 505(2) (இருபிரிவினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசுவது), 124A (தேச துரோகம்) 153A (நல்லிணக்க சீர்குலைவை ஏற்படுத்துவது மற்றும் அதற்கு முயற்சிப்பது) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நாடகத்தின் இரு கதாபாத்திரங்களாக நடித்த ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம், “இந்த அரசாங்கம் முசுலீம்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறது.” எனக் கூறுகையில் மற்றொரு குழந்தை, “அம்மா, மோடி நமது தந்தை மற்றும் தாத்தாவின் ஆவணங்களைக் காட்டவேண்டும் என்கிறார்; இல்லையென்றால் நம்மை இந்த நாட்டை விட்டுப் போகச் சொல்கிறார்.” என்று ஒரு குழந்தை கூறுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக ஒரு பதிலைச் சொல்கிறது மற்றொரு குழந்தை; “யாரேனும் ஆவணங்கள் கேட்டால் அவர்களை செருப்பால் அடி!” என்று..

இது போதாதா சங்கிகளுக்கு அடியில் தீப்பிடிக்க ! போலீசில் புகார் கொடுத்து அந்தச் சிறுமியின் தாய் மற்றும் ஆசிரியர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்திருக்கிறது கிரிமினல் கும்பல் !

ஒரு எதிர்க்குரல் அல்ல கோடிக்கணக்கான எதிர்க்குரல்களும் கலகக் குரல்களும் இந்தியா முழுவதும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து எதிர்ப்புக் குரல்களும் அமைதி வழியில் கோலமாக, அமைதிப் பேரணியாக, நாடகமாக வெளிப்படுத்தப் படும்போது,  அதற்கு வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல். கைது, தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

எனினும் நாடு அடங்கத் தயாராக இல்லை. இன்னும் புதுப் புது வடிவங்களில், நமது எதிர்ப்பை வலுவாகவும் விரிவாகவும் கொண்டு செல்லப்படும் போதுதான் விடியல் நமக்கு !

நந்தன்

செய்தி ஆதாரம் : நியூஸ்மினிட்