Wednesday, December 11, 2024
முகப்புசெய்திஇந்தியாCAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

அமைதி வழியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப் படும்போது,  அதற்கு தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல்.

-

த்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களுக்கு எதிராக கர்நாடக பள்ளி ஒன்றில் நாடகம் போடப்பட்டதை ஒட்டி அப்பள்ளியின் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது அந்த நாடகத்தில் நடித்த குழந்தையின் பெற்றோரையும், பள்ளி ஆசிரியரையும் கைது செய்திருக்கிறது  கர்நாடக போலீசு.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி 21, 2020 அன்று, தனியார் பள்ளி நிகழ்ச்சியில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஏபிவிபியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பள்ளியின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது கர்நாடக பாஜக அரசு.

படிக்க :
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

மேலும், அந்த நாடகத்தில் நடித்த மாணவர்களை பள்ளிக்குள் நுழைந்து விசாரித்துள்ளது போலீசு. இதில் 9 வயதுக் குழந்தையும் அடக்கம். இந்த விசாரணை குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம், மாணவர்களை விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (30-01-2020) அந்த நாடகத்தில் நடித்த மாணவியின் தாயான நஸ்புனிசா என்பவரையும் அந்தப் பள்ளியின் ஆசிரியை ஃபரீதா பேகம் என்பவரையும் கைது செய்துள்ளது கர்நாடக போலீசு. அவர்கள் இருவர் மீதும் பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் அவமதிப்பது), 505(2) (இருபிரிவினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசுவது), 124A (தேச துரோகம்) 153A (நல்லிணக்க சீர்குலைவை ஏற்படுத்துவது மற்றும் அதற்கு முயற்சிப்பது) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நாடகத்தின் இரு கதாபாத்திரங்களாக நடித்த ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம், “இந்த அரசாங்கம் முசுலீம்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறது.” எனக் கூறுகையில் மற்றொரு குழந்தை, “அம்மா, மோடி நமது தந்தை மற்றும் தாத்தாவின் ஆவணங்களைக் காட்டவேண்டும் என்கிறார்; இல்லையென்றால் நம்மை இந்த நாட்டை விட்டுப் போகச் சொல்கிறார்.” என்று ஒரு குழந்தை கூறுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக ஒரு பதிலைச் சொல்கிறது மற்றொரு குழந்தை; “யாரேனும் ஆவணங்கள் கேட்டால் அவர்களை செருப்பால் அடி!” என்று..

இது போதாதா சங்கிகளுக்கு அடியில் தீப்பிடிக்க ! போலீசில் புகார் கொடுத்து அந்தச் சிறுமியின் தாய் மற்றும் ஆசிரியர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்திருக்கிறது கிரிமினல் கும்பல் !

ஒரு எதிர்க்குரல் அல்ல கோடிக்கணக்கான எதிர்க்குரல்களும் கலகக் குரல்களும் இந்தியா முழுவதும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து எதிர்ப்புக் குரல்களும் அமைதி வழியில் கோலமாக, அமைதிப் பேரணியாக, நாடகமாக வெளிப்படுத்தப் படும்போது,  அதற்கு வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல். கைது, தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

எனினும் நாடு அடங்கத் தயாராக இல்லை. இன்னும் புதுப் புது வடிவங்களில், நமது எதிர்ப்பை வலுவாகவும் விரிவாகவும் கொண்டு செல்லப்படும் போதுதான் விடியல் நமக்கு !

நந்தன்

செய்தி ஆதாரம் : நியூஸ்மினிட்

    • நாம் இருப்பது ஜனநாயக ஆட்சியிலா? பாசிச ஆட்சியின் கீழா? நாடு முழுக்க எதிர்ப்புக் குரல் கைதுகள், ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்கின்றன.

    • இதே கர்நாடகவிலே முன்பு ஒரு பள்ளியில் பாபர் மஸ்ஜிதை உடைப்பது எப்படின்னு டெமோ கொடுத்தாங்க. அப்ப அந்த பள்ளிக்கு அரசாங்கத்துடைய உதவியை தடை செய்யலாமா?

  1. கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே அவர்களின் இந்திய தேசவிரோத செயல்களை மறைக்க எங்களுக்கு தேசம் முக்கியம் இல்லை மக்கள் தான் முக்கியம் என்று கூச்சமே இல்லாமல் பொய்களை சொல்வார்கள்.

    கம்யூனிஸ்ட்களால் பல இன்னல்களை இந்திய மக்கள் அனுபவித்து இருக்கிறார்கள், அந்த இன்னல்களுக்கு மேலும் ஒரு கம்யூனிச பங்களிப்பு கொரோனா வைரஸ்…

    தேசங்களை கடந்து மக்களை நேசிக்கிறோம் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்கள் எதற்காக இது போன்ற உயிர்கொல்லி ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் எதற்கு இது போல் மனித இனத்தை அழிக்கும் செயல்களில் இறங்கி இருக்கிறார்கள் என்பதற்கு அனைத்து கம்யூனிஸ்ட்களும் பதில் அளிக்க வேண்டும்.

    கம்யூனிஸ்ட்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் மனித இனவிரோதிகள் என்பதற்கு இந்த கொரோனா வைரஸ் மேலும் ஒரு ஆதாரம்.

  2. வினவு, கேரளா முதல்வர் விஜயன் போன்றவர்கள் சீனாவிற்கு எதிராக இந்தியா செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று (சீனா அரசின் சார்பாக) மிரட்டினார்கள்.

    கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களே, மனித இன துரோகிகளே கொரோனா வைரஸ்க்கு உங்களின் பதில் என்ன ?

    • பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். வினவு எங்கே, எப்படி மிரட்டியது என ஆதாரம் தர வேண்டும். கேடபவன் எல்லாம் கேனையன் என்று
      நினைத்துக் கொண்டு எழுதுவீர்களா?

  3. காஷ்மீர் இஸ்லாமியருக்காக போலியாக உருகும் கம்யூனிஸ்ட்கள் ஏன் சீனா இஸ்லாமியர்களை கண்டுகொள்ளவில்லை. சீனா Uighur இஸ்லாமிய பெண்களை “Mass Rape” செய்வதாக செய்திகள் வருகிறதே அதற்கு உங்களின் பதில் என்ன. சீனா அரசாங்கம் அதற்கு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறோம் என்று அதிகாரபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்…

    ஆனால் எந்த ஒரு Uighur இளம் பெண்ணும் ஒரு சீனன் அவளோடு படுக்க விரும்பினால் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவளையும் அவள் குடும்பத்தையும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்லி சீனா போலீஸ் கைது செய்யும்.

    சீனா இஸ்லாமியர்கள் மீது ஏன் வினவு கூட்டங்கள் கருணை காட்டவில்லை ? சீனா இஸ்லாமியர்கள் மீது பாக்கிஸ்தான் ஏன் அக்கரை காட்டவில்லை ? ஏன் எந்த ஒரு இந்திய முஸ்லிமும் சீனா Uighur இஸ்லாமியர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை ?

    “China uighur mass rape” என்று google செய்து பாருங்கள்.

    • சீனாவில் கம்யூனிச ஆட்சியா? உன்னுடைய சகபாடியின் ஆட்சி. நீங்கள் எழுதத் தொடங்கினாலே பொய்களையும், அவதூறுகளையும் மட்டுமே எழுதுவது எனத் தொடங்கி விட்டீர்கள் போல. கொயபல்ஸ் முறையிலான இந்தப் பொய்கள் உண்மைகளாகிவிடும் என்பதல்ல வரலாறு. நூறாண்டுகளாக உங்கள் பொய்களை மக்கள் நம்பவில்லை. இன்றைக்கும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதுதான் நாடு முழுதுமான போராட்டமாகத் தொடர்கிறது. உனது அடியாட்களை ஏவி, துப்பாக்கி சூடு நடத்தி ஒடுக்கப் பார்த்தாலும் தொடர்கிறது. இங்கு ஜனநாயக்ம் இருந்தால் இன்னேரம் ஷாவும் மோடியும் களி தின்று கொண்டிருப்பார்கள். நீங்களும் அடங்கி
      ஒடுங்கி பம்மிக் கிடப்பீர்கள். மத்தியில் நம்ம ஆட்சி என்கிற மிதப்பில் உதார் விட்டுத் திரிகிறீர்கள். எவ்வளவு நாள் தொடர்கிறது என பார்க்கத்தானே போகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க