privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

-

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3 மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்தத் தேர்வுகளில் வெல்பவர்கள் அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவர்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 எனும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு 5,575 மையங்களில் நடந்தது; மொத்தம் 16,29,865 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாக அதன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போது அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். இவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வந்து தேர்வெழுதியவர்கள் அதற்காக சொன்ன காரணமும் ஒரே போல் இருக்கவே, இதில் முறைகேடு இருப்பதாக மற்ற போட்டியாளர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வாணையம் சிபிசிஐடி விசாரணை கோரியது. போலீசார் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

படிக்க :
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மேல் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார்,  இதுவரை தேர்வர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கு சிபிசிஐடி போலீசார் எழுதியுள்ள திரைக்கதை நமது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

முதலிடம் பெற்ற 100 பேரின் தேர்வுத் தாள்கள் சோதிக்கப்பட்டபோது, அதில் 52 பேரின் தேர்வுத் தாள்கள் மாயமாகும் மையால் முதலில் நிரப்பப்பட்டு, பிறகு திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவந்தாம். அதாவது முதலில் மாயமாகும் மையால் எழுதி, அந்த விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு வந்து சேரும் இடைவெளியில் நல்ல மையால் எழுதப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஓம் கந்தன் என்பரே மூளை என்பதாகச் சொல்லி கைதுள்ளனர் போலீசார். ஓம் கந்தனும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற இடைத்தரகரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டை நடத்தியுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

ராமேஸ்வரம், கீழக்கரை பகுதி தேர்வு மையத்தில் தனக்கு பணம் கொடுத்தவர்களை தேர்வெழுதச் செய்த ஜெயக்குமார், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களைக் கொடுத்துள்ளார். ‘மேஜிக்’ பேனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் தேர்வு முடிந்த பின் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன. விடைத்தாள்களை அங்கிருந்து சென்னை தேர்வாணையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் உள்ள மாணிக்கவேலு என்பவரின் உதவியாளர்தான் ஓம் கந்தன்.

குறிப்பிட்ட நாளில் விடைத்தாள் பண்டல்கள் ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி போலீசு பாதுகாப்புடன் சென்னைக்குப் அனுப்பப்பட்டன. உடன் மாணிக்க வேலுவும், ஓம் கந்தனும் சென்றுள்ளனர். சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.

மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டிக்கு திரும்பிய ஓம் கந்தன், குறிப்பிட்ட பண்டல்களை எடுத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த விடைத்தாள்கள் மேஜிக் மையால் எழுதப்பட்டு அழிந்து போனவை; அதில் ஜெயக்குமார் சரியான பதிலை எழுதியுள்ளார். எப்படி? சென்னை வரும் வழியில் ஓடும் காரில் வைத்தே எழுதியுள்ளார். பின்னர் மீண்டும் அதிகாலை விழுப்புரம் அருகில் உள்ள விக்ரவாண்டியில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் தேனீர் கடை ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்று மற்ற பண்டில்களோடு சேர்த்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை விஞ்சும் இந்த சாகசத்தில் ஈடுபட்டதற்காக தேர்வாணையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஓம் கந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறரும் இதே போல் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

o0o

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேற்படி தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் சுமார் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ளனனர்.

இந்த முறைகேட்டிலும் குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன. இதில் “மேஜிக்” மை உபயோகப்படுத்தப்படவில்லை. மாறாக, தெரியாத கேள்விகளுக்கான பதில்களை எழுதாமல் விட்டுள்ளனர். நம் ஜெயக்குமார், ஓடும் காரில் வைத்து அந்த வினாக்களுக்கான பதிலை நிரப்பியுள்ளார்.

o0o

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் லஞ்சம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. பாமர மக்களுக்கே இந்த விசயம் தெரியும். மேலும், கொடுக்கப்படும் லஞ்சம் யார் வழியாக யார் யாரையெல்லாம் சென்றடையும் என்பதும் தெரிந்த விசயங்கள்தான். இந்த முறை ஒருபடி மேல் சென்று தேர்விலேயே முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பதுதான் வேறுபாடு.

மத்தியபிரதேச மாநில தேர்வாணையமான “வியாபம்” நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஏறக்குறைய இங்கும் அதே பாணியில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தளவுக்கு துணிகரமாக முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுகிறது என்றால் அதை வெறுமனே கடைநிலை ஊழியர்கள் மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தி விட முடியாது. விடைத்தாள் பண்டில்களின் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் போது அதை இடையே “தேனீர் இடைவெளியின்” போது கைப்பற்றுவதோ மீண்டும் இன்னொரு ”தேனீர் இடைவெளியின்” போது மாற்றி வைப்பதோ சாத்தியமல்ல.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

இந்த விவகாரத்தை நியாயமாக விசாரித்தால் இதில் சம்பந்தப்பட்ட பெரிய தலைகளின் பெயர்கள் அம்பலமாகும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி புரட்சித்தலைவின் ஆசியும், மத்திய அரசின் ஆதரவும் பெற்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த வழக்கும் மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் விசாரணை சென்ற திசையில் தான் செல்லும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது வெறுமனே ஊழல் அல்ல; தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் இப்படி முறைகேடான வழிகளில் அரசு பதவிக்கு வருபவர்கள்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்றால், அந்த திட்டங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயல்படுத்தப்படும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

மித்ரன்

  1. இந்தக் கட்டுரை வினவு தளம் யோக்கிய சிகாமணிகளின் தளம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மாநில அரசில் நடக்கும் அத்தனை பிராடு வேலைகளும் வாழும் வள்ளுவத்தின் ஆட்சியில்தான் ஆரம்பித்தன என்பதை வசதியாக விட்டுவிட்டது. அவர்கள் போட்ட பாதையில் போன புரட்சித்தலைவியின் ஆட்சி அந்த பிராடு தனங்களில் பெரிய சாதனையை செய்தது. தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு கூட காசு வாங்கி நியமனம் கொடுத்த மகராசன் வாழும் வள்ளுவம். அவர்கள் போட்ட பாதையில் தான் இப்போதைய அதிமுகவினர் வீரநடை போடுகிறார்கள். மேலும் இந்த பிராடு தனங்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது ஊழல் பெருகிவிட்டது இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிற கூப்பாட்டுக்கு இந்த பிராடு தனங்கள் வலு சேர்க்கின்றன.

    • அறிவுச்சுடர் Periyasamy,
      வினவு புரட்சி மூலம் சோசலிச சமுதாயம் சமைக்க மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களிள் ஊடாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சியை அமைப்பது அவர்களது நோக்கமல்ல. அவர்களின் அடிப்படை முழக்கமே “தேர்தல் பாதை திருடர் பாதை” என்பதுதான். இதை நன்றாக தெரிந்த நீங்களும் வினவு திமுகவை ஆதரிப்பதாக ஒரு முட்டாளைப்போல் அவதூறு செய்கிறீர்கள். திமுக ஆட்சி காலத்தில் வினவின் கடுமையான விமர்சனங்கள் பெட்டகத்தில் ஏராளமாக காணக்கிடைக்கிறது. ஒருவனை வசைபாடுவதற்கு அவன் வீட்டுப் பெண்களை இழிவு படுத்தி பேசுவது போல நீங்கள் ஆளும் கட்சியான அதிமுகவை விமர்சனம் செய்யக்கூட திமுகவை இழுத்து வக்கற்று இழிவு படுத்துகிறீர்கள்.
      நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டால் சீமான் படிப்பறிவு இல்லாதவர் என்று படித்தவர்கள் எல்லாம் யோக்கியர்கள் போல பேசுகிறீர்கள். உங்களின் வழியும் தீர்வும்தான் என்ன? என்று கேட்ட நண்பர் c.nepolian க்கு பதில் கூறாமல் ஓடிவிட்டீர்கள். ஊரில் எல்லோரையும் புறம் பேசும் ஆள் போலத்தான் தென்படுகிறீர்கள்.
      குரைத்தால் கடித்துவிட வேண்டும். குரைத்துவிட்டு ஓடுவதால் பயன் என்ன?

      • //வினவு புரட்சி மூலம் சோசலிச சமுதாயம் சமைக்க மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து// very nice comedy.

        ஈவேரா இந்த நாட்டு மக்களை ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக இருக்க சொன்னவர்.

        வினவு சீனாவிடம் இந்த நாட்டு மக்களை அடிமைகளாக மாற்ற பார்க்கிறார்கள்.

        இதில் மக்கள் நலன் எல்லாம் துளியும் கிடையாது, இருவரிடமும் இருப்பது பச்சை சுயநலன் மற்றும் தேசவிரோதம் மட்டுமே. அதனால் தான் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்கிறார்கள்.

        இந்த இரண்டு தரப்பையும் இணைக்கும் சங்கிலி ஹிந்து விரோதம், இந்திய விரோதம்.

  2. அய்யா பெரியசாமி சொல்ல வருவது என்ன? அதிமுக ஊழலைப் பற்றி பேசாதே என்பதா? திமுகவின் ஊழலை மட்டும்தான் எழுதோனும் என்று சொல்ல வருகிறீர்களா? வினவின் யோக்கியதை என்கிறீர்கள். வினவு யாருடைய ஊழல், முறை கேட்டு க்கு த் துனை நின்றது எனச் சொல்லோனும். உமது சிக்கல் தான் என்ன?

    • வினவு (கம்யூனிஸ்ட்கள்) சீனா பாக்கிஸ்தான் சார்பாக தானே இந்தியாவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள், தேசவிரோதம் மக்கள் விரோதத்தை விட பெரிய ஊழல் பெரிய விஷயம் கிடையாது.

      ஊழல் (பணம்) திரும்ப சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் உயிர் போனால் வராது.

      பாக்கிஸ்தான் ஹாபிஸ் சையதும் இந்தியாவை துண்டு துண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறான், JNU வில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும் இந்தியாவை உடைப்பதே எங்கள் நோக்கம் என்று சொல்கிறார்கள்.

      பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு வலிக்கும்.

    • திராவிட இயக்கம் பெரியார் அண்ணாவோடு முடிந்துவிட்டது இப்போது இருப்பதெல்லாம் சில்லறைகள் மட்டுமே தமிழ்நாட்டின் நலனுக்காகவும் அகில இந்திய அளவில் பின்னடைந்த மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய கட்சி திமுக. ஒரு காலத்தில் பிரதிபலனை எதிர்பாராமல் சிங்கிள் டீ மட்டும் குடித்துக்கொண்டு விடிய விடிய வேலை பார்க்கிற தொண்டர்கள் அந்த கட்சிக்கு இருந்தார்கள். ஒருகட்டத்தில் அந்த கட்சி குடும்ப அரசியல் மயம் ஆகியதால் ஊழல் பெருகியது அராஜகமும் வளர்ந்தது. அந்தக் கட்சியும் அழிந்தது. தமிழ்நாட்டின் நலனும் அழிந்தது. அகில இந்திய அளவில் கூட்டணி ஆட்சியில் இருந்து கொண்டு இவர்கள் நடத்திய ஊழல் மற்றும் குடும்ப அராஜகங்கள் ஆகியவற்றால் கடைசியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வருவதில் போய் முடிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல் அயோக்கியத் தனங்களையும் ஆரம்பித்து வைத்தது திமுக தான். அவற்றை பெரிய அளவில் வளர்த்தெடுத்தது அதிமுக. ஆனால் இந்த தளத்தில் திமுகவை விமர்சிக்கும்போது மயிலிறகால் தடவிக் கொடுப்பது மாதிரியும் அதிமுகவை விமர்சிக்கும்போது செருப்பால் அடிப்பது மாதிரியும் செய்கிறார்கள் இதுதான் நெருடலாக இருக்கிறது. இதை சொல்வதற்கு எந்த அரசியல் கொள்கையும் தேவையில்லை. ஒரு பொது பார்வையாளனாக இருந்தால் கூட போதும்.

      • மிக முக்கிய காரணம் திமுக ஹிந்து விரோத கட்சி…

        தமிழ் பயங்கரவாதம் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே என்று பயங்கரவாத செயல்களை கூட ஆதரித்த கட்சி திமுக.

        இது எல்லாம் வினவு கூட்டங்களுக்கு ஏற்ற கொள்கைகள்.

        அதிமுக முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஹிந்து கோவில்களுக்கு வெளிப்படையாக செல்கிறார்கள். ஜெயலலிதா தலைமையில் விடுதலை புலிகள் மற்றும் பல பிரிவினைவாத தேசவிரோத பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

        அதனால் வினவு கூட்டங்களுக்கு அதிமுகவை பிடிக்காது.

      • அதிமுகவும் திமுகவும் ஒன்றா? இராமன் என்ன இன்ஜினியரிங் படிச்சாரா? என்று கேட்ட கலைஞரும் கரசேவைக்கு ஆளனுப்பிய ஜெயலலிதாவும் இணையா? இதுவரையில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத கலைஞரும் A1 குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதாவும் ஒரே தரமா? NEET, ,புதிய கல்வி கொள்கை, CAA என்று வரிசையாக தமிழர்கள் மீது கொத்துகுண்டுகள் வீசும் அடிமை எடப்பாடியும் இவைகளை எதிர்த்து போராடும் ஸ்டாலினும் அவர் சகாக்களும் உங்கள் தராசில் சம எடையா..?
        சிரிப்பு மூட்டாதீர்கள் பெரியசாமி..! கொஞ்சம் வெவரமா இருக்கப் பாருங்க..

  3. இராமன் என்ன இன்ஜினியர் என கேட்ட வாழும் வள்ளுவம் தான் வாஜ்பாய் ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு குஜராத் கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் பல ஆயிரம் பேர் கொலை செய்யப்படுவதற்கு துணை போனார் திமுக என்கிற கட்சி அண்ணா காலத்துக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகளை தங்களுடைய குடும்ப வளர்ச்சிக்காகவும் பதவி சுகத்துக்காக அடமானம் வைத்து வந்திருக்கிறது காவிரி பிரச்சனை கச்சத்தீவு பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சனை என சொல்லிக்கொண்டே போகலாம் நீட் தேர்வு கூட காங்கிரஸ் கட்சி கொண்டுவந்ததுதான் அப்போது ஒட்டு மொத்தமாக எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பித்தலாட்டம் செய்து வருகிறது காவிரிப்படுகையில் எரிவாயு விவகாரத்திலும் கையெழுத்து போட்டவர்கள் இவர்கள்தான் இப்போது யோக்கியர்கள் மாதிரி எடப்பாடி ஆட்சிக்கு எதிராகவும் பாஜக ஆட்சிக்கு எதிராகவும் மக்களை தூண்டி பித்தலாட்டம் செய்து வருகிறார்கள் இங்கே அண்ணா திமுகவையும் ஜெயலலிதாவையும் குறை சொல்ல என்ன இருக்கிறது ஜெயலலிதா எப்போதுமே வெளிப்படையாக செயல்பட்டவர் அவருடைய ஊழல் அஞ்ஞான ஊழல் அதனால் மாட்டிக்கொண்டார் இவர்களுடைய ஊழல் விஞ்ஞான ஊழல் அதனால் தப்பித்துக் கொள்கிறார்கள் இன்றைக்கு இவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள் அந்த பணம் எல்லாம் வயல்காட்டில் களை வெட்டியா சம்பாதித்தார்கள்? மாநிலத்தில் போராட்டம் போராட்டம் எனமக்களுடைய உணர்வை தூண்டிவிட்டு ஓட்டு வாங்குவது. அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை மத்தியிலே அடமானம் வைத்து சொத்து சம்பாதிப்பது. குடும்பத்தை வளர்ப்பது. கூடவே வினவு மாதிரியான சிலரை கும்பலையும் வளர்த்து விடுவது. இதுதான் இவர்களின் கொள்கை இதை ஆகா ஓகோ என பாராட்டுவதற்கு ஒரு மூளை கெட்ட கூட்டம் தமிழகத்தில் இருந்து வருகிறது..

  4. தமிழ்நாட்டில் வினவு மாதிரியான சில்லரை கும்பல்கள் புரட்சி பண்ணுகிறோம் என்னும் பெயரில் போராட்டம் போராட்டம் என மாணவர்களை கூட தூண்டி விடுகிறார்கள். இங்கே பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகக்கூடிய மாணவர்களில் பெருவாரியானவர்கள் முதல் தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறையினர்..இவர்களுடைய படிப்பு கெடுவதோடு யாருக்கும் கட்டுப்படாமல் தறுதலையாக சுற்றித் திரிவதற்கே இது வழிவகுக்கிறது.. இலங்கையில் அவ்வளவு மக்கள் செல்வாக்கோடு அவ்வளவு பெரிய ஆயுதப்போராட்டம் நடந்தது.. அது கடைசியில் பல லட்சம் மக்கள் சாவதில் முடிந்தது.. காஷ்மீரிலும் அசாமிலும் நடக்காத போராட்டத்தையா இவர்கள் நடத்தி கிழித்து விட போகிறார்கள். அங்கேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா கதைதான். ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு அதுவும் இந்திய அரசாங்கத்துக்கு இருக்கும் வலிமை, வளங்கள் குறித்து இந்த சில்வண்டுகளுக்கு ஒன்றும் தெரியாது. மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் எவ்வளவு தந்திரமானவர்கள், திறமையானவர்கள், கொடூரமானவர்கள் என்பது இவர்களுக்கு தெரியாது. சும்மா முட்டுச் சந்தில் நின்று கூவும் இவர்களெல்லாம் சொறி நாய்கள் என மத்தியில் உள்ளவர்கள் நினைப்பதால் தான் இந்த வினவு கும்பல் மாதிரியான கும்பல்கள் தமிழகத்தில் புரட்சி போராட்டம் என பித்தலாட்டம் பேசி காலம் தள்ள முடிகிறது. இல்லாவிட்டால் என்றைக்கோ கதை முடிந்திருக்கும்.

    • பெரியஸ்வாமி,
      அரசியல் புரோக்கர் தமிழருவி மணியனையே நல்லவராக்கிருவீங்க போலிருக்கே..! மணிகண்டனையாவது மாட்டு மூத்திரத்தை குடிச்சிட்டு இப்படி பேசுறாருன்னு சமாதானப்படுத்திக்கலாம். உங்களை எப்படின்னு எடுத்துக்கிறது.
      ஒருவேளை மணிகண்டனோட….

      வேணாம் கூசுது.. உங்க கிட்ட பேசுறதுக்கு..!

  5. அடடா நீங்க ரொம்ப யோக்கியனுங்கு அங்க போங்க உங்களைத் தவிர எல்லாருக்குமே அயோக்கிய பசங்க. சொன்ன கருத்துக்கு உருப்படியா பதில் சொல்ல முடியல.

Leave a Reply to S.Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க